நடப்பு
Published:Updated:

சர்க்கரை நோய்: இழப்பீடு கிடைக்குமா?

இரா.ரூபாவதி

வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறை, முறையற்ற உணவுப் பழக்கங்கள், உடல் உழைப்பு இல்லாமை ஆகியவற்றின் விளைவாக நாற்பது வயதில் வரவேண்டிய வியாதிகள் எல்லாம் முப்பது வயதிலேயே வந்துவிடுகிறது. இதில் சர்க்கரை வியாதி முன்னிலையில் இருக்கிறது. இன்றைக்கு பலரும் இந்த நோயினால் பாதிப்படைந் திருக்கிறார்கள்.

இந்த நோய்க்கு மெடிக்ளைம் கிடைப்பதில் பல சிக்கல்கள் இருப்பதால், இன்ஷூரன்ஸ் நிறுவன வட்டாரங்களில் விசாரித்து கிடைத்த தகவல்களைத் தொகுத்து தந்துள்ளோம். சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் அது வாழ்நாள் முழுக்க இருக்கும். அதாவது, சர்க்கரையின் அளவை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியுமேயொழிய, முற்றிலும் குணப்படுத்த முடியாது.

சர்க்கரை நோய்: இழப்பீடு கிடைக்குமா?

இந்த நோய் வந்தவர்கள் தினமும் மாத்திரை சாப்பிட வேண்டியிருக்கும். இந்த நோய்க்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுப்பதற்கான வாய்ப்புக் குறைவுதான். தினமும் சாப்பிடும் மருந்து, மாத்திரை ஆகியவற்றுக்கான செலவை இன்ஷூரன்ஸ் பாலிசியில் க்ளைம் பெறமுடியாது.
ஆனால், ஸ்பெஷல் பாலிசியின் மூலம் சர்க்கரை நோயின் அளவு கட்டுப்பாட்டை மீறிச் செல்லும்போது ஏற்படும் சிறுநீரகம், கண் பார்வை, பாதத்தில் புண் ஆகிய பிரச்னை களுக்கு க்ளைம் பெற முடியும்.

அதாவது, இந்த உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளினால் அறுவை சிகிச்சை அல்லது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும்போது க்ளைம் பெறமுடியும்.  சாதாரணமாக இருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் காத்திருப்புக் காலம் இருக்கும். ஆனால், குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் காத்திருப்புக் காலம் இல்லாமல் க்ளைம் செய்யும் வாய்ப்பு உள்ளது.

பிரீமியம் எவ்வளவு?

சர்க்கரை நோய்க்கான சிறப்பு பாலிசி, அப்போலோ மற்றும் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் இருக்கிறது. 35 வயதான ஒருவருக்கு 3 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு ஆண்டு பிரீமியம் சுமார் ரூ.9,900-ஆக உள்ளது. இதுவே, 5 லட்சம் ரூபாய் கவரேஜ் எனில், பிரீமியம் ரூ.13,800. 40 வயது உள்ளவருக்கு ரூ.3 லட்சம் கவரேஜ் பெற ரூ.11,700-ம், ரூ.5 லட்சம் கவரேஜ் பெற ரூ.17,500-முமாக உள்ளது. இந்த பிரீமியம் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறும்.