நடப்பு
Published:Updated:

பிரசவ செலவுக்கு க்ளைம் கிடைக்குமா ?

இரா.ரூபாவதி

ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்தால் பிரசவத்துக்கு க்ளைம் கிடைக்குமா என்று பலரும் கேட்கிறார்கள். நாம் இந்தக் கேள்வியை தக்‌ஷின் கேப்பிட்டல் நிறுவனத்தின் இயக்குநர் ராமகிருஷ்ணன் வி.நாயக்கிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

 ஏன் க்ளைம் தருவதில்லை?

``பிரசவம் என்பது நோய் கிடையாது. அது ஓர் இயற்கையான நிகழ்வு. ஹெல்த் இன்ஷூரன்ஸில் விபத்து மற்றும் எதிர்பாராதவிதமாக வரும் நோய் களுக்கே இழப்பீடு கிடைக்கும். பிரசவம் என்பது முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்வதாகும். எனவே, இதற்கு க்ளைம் தருவதில்லை.
 இப்போது என்ன நிலை?

பிரசவ செலவுக்கு க்ளைம் கிடைக்குமா ?

இப்போது சில நிறுவனங்கள் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் பிரசவத்துக்கு க்ளைம் தர  ஆரம்பித்துள்ளன. அதாவது, பாலிசி எடுத்து நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை

பிரசவ செலவுக்கு க்ளைம் கிடைக்குமா ?

தற்போது விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நிறுவனங்கள் திருமண கிஃப்ட் பாலிசியைப் பிரசவத்துக்கான க்ளைம் வசதியுடன் வழங்குகிறது. இந்த பாலிசி எடுக்க 35 வயதுக்குட்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் கவரேஜுக்கு சுமார் ரூ.11,578 பிரீமியம் செலுத்த வேண்டும்.

சில நிறுவனங்கள் குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியிலும் பிரசவத்துக்கு க்ளைம் தருகிறது. அதாவது, குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது டெய்லர் மேடு பாலிசியாகும். அதாவது, பாலிசி எடுக்கும் நிறுவனத்தின் வசதிக்கு ஏற்ப பாலிசி வடிவமைக்கப்படு கிறது.

சில நிறுவனங்கள்  குரூப் பாலிசியில் க்ளைம் தொகையில் வரையறை வைத்து வழங்குகின்றன. அதாவது, பிரசவத்துக்கு எவ்வளவு செலவானாலும் அதில் குறிப்பிட்ட தொகையை மட்டும்தான் இன்ஷூரன்ஸ் பாலிசியில் க்ளைம் செய்ய முடியும். இதில் காத்திருப்புக் காலம் 10 மாதங்கள்'' என்றார்.