Published:Updated:

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி... குழந்தையின்மை சிகிச்சைக்கு க்ளைம் உண்டா?

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி... குழந்தையின்மை சிகிச்சைக்கு க்ளைம் உண்டா?

பிரீமியம் ஸ்டோரி

கேள்வி - பதில்


?குழந்தையின்மை சிகிச்சைக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் க்ளைம் கிடைக்குமா?
கதிரவன், மதுரை.

கே.சுப்ரமணியன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர், ஜெய் சாய்ராம் இன்ஷூரன்ஸ் புரோக்கிங்.

“இந்தக் குறைபாடுக்கான சிகிச்சைக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் க்ளைம் செய்வதற்கான வாய்ப்புக் குறைவு. குழந்தையின்மைக்கான காரணம் என்ன என்பதன் அடிப்படையில் க்ளைம் கிடைக்கக்கூடும். சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பிற நோய் பாதிப்பு அல்லது விபத்தினால் குழந்தை யின்மை குறைபாடு ஏற்பட்டால் மட்டுமே க்ளைம் கொடுக்கின்றன.”

?அவசரகாலத் தேவைகளுக்காக சுமார் ரூ.4 லட்சத்தைச் சேமித்து வைத்திருக் கிறேன். இந்தப் பணத்தை அவசர தேவைகளுக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் முதலீடு செய்ய வேண்டும். ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வருமானம் தரக்கூடிய திட்டம் ஏதாவது இருக்கிறதா?

-@ மோகன் குமார், சிங்கப்பூர். எம்.வெங்கடேஸ்வரன், நிதி ஆலோசகர்.

“அவரசகாலத் தேவைகளுக்குப் பயன் படுத்திக்கொள்ளும் வகையில் என்ஆர்இ டெபாசிட் இருக்கிறது. இதில் ஒரு வருட காலத்துக்கு முதலீடு செய்து, அதைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளலாம். இதற்கு வரி செலுத்த தேவையில்லை. டெபாசிட்டை ஓராண்டுக்குமுன் எடுத்தால், வட்டி எதுவும் கிடைக்காது.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி... குழந்தையின்மை சிகிச்சைக்கு க்ளைம் உண்டா?

அடுத்தது, லிக்விட் ஃபண்ட் அல்லது அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில் நுழைவு மற்றும் வெளியேறும் கட்டணம் எதுவும் கிடையாது. இந்த முதலீட்டை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ரெலிகர் கிரெடிட் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் மற்றும் ஃப்ராங்க்ளின் இந்தியா ஷார்ட் டேர்ம் பாண்ட் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்யும் தொகைக்கு என்ஆர்ஐ களுக்கான டிடிஎஸ் விதிமுறைகள் பொருந்தும்.

தீவிர முதலீட்டாளர் எனில், ஈக்விட்டி ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள் சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டத்தில், கேஷ் மார்க்கெட் மற்றும் எஃப் அண்ட் ஓ மார்க்கெட்டில் இருக்கும் விலை வித்தியாசத்திலிருந்து வருமானம் ஈட்டப்படும். இந்த முதலீட்டுக்கு முதல் மூன்று மாதத்துக்கு வெளியேறும் கட்டணம் இருக்கும். இந்தவகை ஃபண்டுகள் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளாகக் கருதப்படும். எனவே, ஈக்விட்டி ஃபண்டுகளின் வரி விதிப்பு இதற்குப் பொருந்தும். முதலீட்டை ஒரு வருடத்துக்குக் குறைவாக வைத்திருக்கும் போது, குறுகிய கால மூலதன ஆதாய வரி 15% செலுத்த வேண்டியிருக்கும். அதுவே, முதலீட்டை ஒரு வருடத்துக்குமேல் எடுத்தால் நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த தேவையில்லை.”

?கமாடிட்டி வர்த்தகம் செய்யத் திட்டமிட்டுள்ளேன். எந்த வகையான மெட்டல்களில் வர்த்தகம் செய்யலாம், மார்ஜின் எவ்வளவு, நஷ்டத்தைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

ராஜசேகர், திருநெல்வேலி ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி... குழந்தையின்மை சிகிச்சைக்கு க்ளைம் உண்டா?

“புதிதாக கமாடிட்டி சந்தையில் வர்த்தகம் செய்பவர்கள் தங்கம்/வெள்ளி போன்ற தெரிந்த உலோகங்களில் வர்த்தகம் செய்யலாம். அதற்கு முன்பாக இதன் விலை ஏற்ற / இறக்கங்களை சில காலம் கவனித்து, பேப்பர் டிரேடிங் செய்யும்போது, நீங்கள் எடுக்கக்கூடிய முடிவும், சந்தையின் போக்கும் ஓரளவுக்கு தெரியவரும். பிறகு வர்த்தகத்தை ஆரம்பிக்கலாம். ஃப்யூச்சர் டிரேடிங் (Future Trading) என்பதால் முழுத் தொகையையும் நாம் செலுத்த தேவையில்லை. 5%-10% செலுத்தினால் போதும். அதே நேரத்தில், சந்தையின் ஏற்ற இறக்கங்கள், நம் மார்ஜின் தொகையை நஷ்டமாக்கிவிடும். இந்த நஷ்டத்தைத் தவிர்க்க, ஒரேநேரத்தில், மொத்த முதலீடுகளையும் செய்யாமல், 40%-50% வரை, அதற்கான மார்ஜின் தொகையைக் கையில் வைத்துக்கொண்டு வர்த்தகம் செய்தால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.”

?பிர்லா சன் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் 2011 முதல் பச்சத் மணிபேக் பிளான் (Bachat Moneyback Plan) எடுத்துள்ளேன். 20 வருட பாலிசி யில் மாதம் ஆயிரம் ரூபாய் பிரீமியம் செலுத்தி வருகிறேன். என் வயது 29. மாதம் 9 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கு கிறேன். இந்த பாலிசியைத் தொடரலாமா?

பிரபாகரன், புதுக்கோட்டை. ராதாகிருஷ்ணன், நிதி ஆலோசகர்.

“நீங்கள் முதலீடு செய்துவருவது பாரம்பரிய மணிபேக் பாலிசி. இந்த பாலிசியில் ஒவ்வொரு வருடமும் கூடுதல் போனஸ் கிடைக்கும். இந்த பாலிசியில் மூன்றரை வருடமாக பிரீமியம் செலுத்தி வருகிறீர்கள். இதில் சரண்டர் கட்டணம் மிகவும் அதிகம். இப்போது பாலிசியை சரண்டர் செய்தால், மிகவும் குறைந்த தொகைதான் கிடைக்கும். எனவே, இன்னும் ஆறு வருடம் பிரீமியம் செலுத்துவதே சிறப்பாக இருக்கும். பாலிசியை பத்தாவது வருடத்தில் சரண்டர் செய்வது நல்லது.”

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி... குழந்தையின்மை சிகிச்சைக்கு க்ளைம் உண்டா?

?சொந்தமாக வீடு கட்டி வருகிறேன். இதன் திட்ட மதிப்பு ரூ.15 லட்சம். இதில் ரூ.8 லட்சம் வங்கிக் கடன் மூலமாக வும், ரூ.4 லட்சம் வெளியில் கடன் வாங்கி யும், ரூ.3 லட்சம் எனது சொந்தப் பணத்தை யும் போட்டு வீடு கட்டி வருகிறேன். இதைத்  தற்போது விற்க திட்டமிட்டுள்ளேன். இந்த நிலையில் நான் ஏதாவது வரி செலுத்த வேண்டுமா?

சதீஷ்குமார், நாமக்கல். சத்திய நாராயணன், ஆடிட்டர்.

“மனை வாங்கி மூன்று வருடத்துக்குள், கட்டடம் கட்டி விற்பனை செய்தால், குறுகிய கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். அதாவது, கட்டடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.15 லட்சம், அதை ரூ.25 லட்சத்துக்கு விற்பனை செய்யும்போது ரூ.10 லட்சம் வருமானம் கிடைக்கும். இந்த வருமானத்துக்கு உங்களின் வருமான வரம்புக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும்.

வீடு கட்டுவதற்கு வங்கியில் கடன் வாங்கி அந்தத் தொகைக்கு ஏதாவது வட்டி செலுத்தி யிருந்தீர்கள் எனில், அதைச் செலவாக வருமானத்தில் கழித்துக்கொள்ள முடியும். அதே நேரத்தில் மனை வாங்கி மூன்று வருடத்துக்கு மேல் ஆகிறது.

ஆனால், கட்டடம் கட்டி மூன்று வருடத்துக்குள் உள்ளது என்றால், மனையின் விற்பனை மூலமாகக் கிடைக்கும் லாபத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20% செலுத்த வேண்டும். கட்டடத்தின் விலைக்கு குறுகிய கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும்.”

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி... குழந்தையின்மை சிகிச்சைக்கு க்ளைம் உண்டா?

?என் டீமேட் கணக்கில் இருந்த பங்குகளை விற்றுவிட்டேன். இதே கணக்கில் சில மியூச்சுவல் ஃபண்டுகள் இருக்கின்றன. டீமேட் கணக்கை குளோஸ் செய்வதால் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு ஏதாவது பாதிப்பு வருமா?

ராமகிருஷ்ணன், சென்னை ஏ.முருகன், மண்டல மேலாளர், புளூசிப் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேட் சென்டர்.

“டீமேட் கணக்கில் மியூச்சுவல் ஃபண்ட் அல்லது பங்குகள் ஏதாவது வைத்திருந்தால், அந்தக் கணக்கை ரத்து செய்ய முடியாது. எனவே, டீமேட் கணக்கில் வைத்திருக்கும் அனைத்து மியூச்சுவல் ஃபண்டுகளையும் பிசிக்கலாக மாற்றியபின், டீமேட் கணக்கை ரத்து செய்யலாம்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு