Published:Updated:

அம்மாவின் சொத்துக்களில் யாருக்கெல்லாம் உரிமை உண்டு?

அம்மாவின் சொத்துக்களில் யாருக்கெல்லாம் உரிமை உண்டு?

அம்மாவின் சொத்துக்களில் யாருக்கெல்லாம் உரிமை உண்டு?

அம்மாவின் சொத்துக்களில் யாருக்கெல்லாம் உரிமை உண்டு?

Published:Updated:

? என் அம்மா சம்பாதித்த சொத்துக்களில் யாருக்கு எல்லாம் உரிமை உண்டு, அந்த சொத்துக்களை என் அம்மா யாருக்கு எல்லாம் எழுதி வைக்க முடியும்?

ஆர்.சந்திரபானு, கோவை,

ஜீவா, வழக்குரைஞர்.

அம்மாவின் சொத்துக்களில் யாருக்கெல்லாம் உரிமை உண்டு?

‘‘உங்கள் அம்மா சம்பாதித்த சொத்து அல்லது உங்கள் அம்மாவுக்கு அவரது பெற்றோர்கள் மூலம் கிடைத்த சொத்துக்களை அவர் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம். ஒருவேளை உங்கள் அம்மா சொத்துக்களை யாருக்கும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால் அவரது வாரிசுகளுக்கு சமபங்காக சொத்துக்கள் போய் சேரும். உங்கள் தாய் இந்துவாக இருப்பதால், உங்கள் தந்தைக்கும் (உயிருடன் இருந்தால்) சொத்துக்களில் உங்களுக்கு உள்ள அதே சமஉரிமை உண்டு.’’

?நான் ஒரு தனியார் நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் பணியாற்றி 2002-ல் ஓய்வு பெற்றேன். கிராஜுவிட்டி (Gratuity) தொகையை பெறவில்லை. அதை வாங்க முடியுமா?

பி.சங்கர், சென்னை,.

என்.பி.இசை அழகன், ஆடிட்டர், இசை அண்ட் கோ.

‘‘பணிக் கொடை சட்டம், 1972-ன் கீழ் 5 வருடங்கள் தொடர்ந்து பணியில் இருக்கும் ஊழியர்கள் பணிக்கொடை பெற தகுதியானவர்கள். எனவே, நீங்கள் பணி மூப்பு அடைந்த 30 நாட்களுக்குள் நீங்கள் வேலை பார்த்த நிறுவனத்துக்கு விண்ணப்பம் அளித்திருக்க வேண்டும். மனு அளித்த 30 நாட்களில் தங்கள் நிறுவனம் உங்களுக்கு சேர வேண்டிய தொகையைக் கணக்கிட்டு தங்களுக்கும், மாவட்ட தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையருக்கும் அறிக்கை அளிக்கும். நீங்கள் 30 நாட்களில் விண்ணப்பம் அளிக்காதபட்சத்தில், நீங்கள் வேலை பார்த்த நிறுவனத்திடம் முறையிட முடியாது. அதற்கு பதில், மாவட்ட தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையருக்கு உரிய படிவத்தில் தாமதத்துக்கான காரணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். தங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டால், உங்களுக்கு சேர வேண்டிய தொகை வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது.’’

அம்மாவின் சொத்துக்களில் யாருக்கெல்லாம் உரிமை உண்டு?

?தற்போது வெளிநாட்டில் வசிக்கும் எனக்கு 44 வயது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா வர உள்ளேன். எனக்கு திருமணமாகவில்லை. பெற்றோர்களும் இறந்துவிட்டார்கள். தற்போது நான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறேன். அதோடு ஒரு பென்ஷன் திட்டத்திலும் முதலீடு செய்து வருகிறேன். நான் டேர்ம் இன்ஷுரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டுமா? 

கிரிஜா நரசிம்மன்,

ராமகிருஷ்ணா வி நாயக், இயக்குநர், தக்‌ஷின் கேப்பிட்டல்.

‘‘நீங்கள் கேட்டிருக்கும் கேள்வியிலேயே உங்களை நம்பி யாரும் இல்லை என்பது புரிகிறது. அதேபோல், உங்கள் ஓய்வுக்கால பொருளாதார தேவைகளுக்கு பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்து வருகிறீர்கள். அதோடு உங்கள் மருத்துவத் தேவைகளுக்கு ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸும் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். எனவே, உங்களை நம்பி யாரும் இல்லை என்பதால் நீங்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க தேவையில்லை. உங்கள் ஓய்வுக்கால தேவைகளுக்கு முதலீடு செய்துவரும் பென்ஷன் திட்டத்தோடு, கையில் கூடுதலாக இருக்கும் தொகையை நல்ல மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இது இன்னும் உங்கள் ஓய்வுக்காலத்தை நிம்மதியோடு கழிக்க உதவும்.’’

?என் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயரில் பிபிஎஃப்-ல் (PPF) முதலீடு செய்தால் வரிச் சலுகை கிடைக்குமா?

எஸ்.முத்துசங்கர், திண்டுக்கல்,

கே.ஆர்.சத்தியநாராயணன், ஆடிட்டர், ஜி.வி.என் சங்கர் அண்ட் கோ.

‘‘நீங்கள், உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயரில் பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்டில் (பிபிஎஃப்) ஆண்டுக்கு அதிகபட்சமாக மொத்தம் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். 80சி பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள 1.5 லட்சம் ரூபாய் வரிச் சலுகையில் நீங்கள் பிபிஎஃப்-ல் செய்த முதலீடுகளைக் காட்டி வரிச் சலுகை பெறலாம். இந்த வரிச் சலுகையை பெற மனைவி மற்றும் குழந்தைகள் உங்களை சார்ந்திருப்பது அவசியம்.’’

அம்மாவின் சொத்துக்களில் யாருக்கெல்லாம் உரிமை உண்டு?

?எந்த வகையான மியூச்சுவல் ஃபண்டுகள் 20 வருட முதலீட்டுக்கு உகந்ததாக இருக்கும்?

டி.மணியன், சென்னை,

எஸ்.பாரதிதாசன், முதன்மை நிர்வாக அதிகாரி, வெல்த் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ்.

‘‘எந்த ஒரு முதலீட்டுக்கும் சொத்துக் களை (வெல்த்) உருவாக்க ஒரு குறிப்பிட்ட காலம் தேவை. நீங்கள் 20 வருடம் முதலீடு செய்யப்போவதாக கூறி இருக்கிறீர்கள். இது சொத்துக்களை உருவாக்கப் போதுமானது. நீங்கள் முதலீடு செய்ய இருக்கும் தொகையில் 50% டைவர்ஸிஃபைடு ஃபண்டிலும், 25% தொகையை மிட்கேப் ஃபண்டிலும், மீதி 25% தொகையை பேலன்ஸ்டு ஃபண்டிலும் முதலீடாக செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.

டைவர்ஸிஃபைடு ஃபண்டுக்கு பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட் லைன் ஈக்விட்டி ஃபண்ட், மிட் கேப் ஃபண்டுக்கு ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஃபண்ட், பேலன்ஸ்டு ஃபண்டுக்கு டாடா பேலன்ஸ்டு ஃபண்ட் போன்றவைகளில் முதலீடு செய்யலாம். இந்த கலவையான ஃபண்டுகள் மூலம் வருடத்துக்கு குறைந்தபட்சம் 18% வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.’’

?டைவர்ஸிஃபைடு ஃபண்டு மற்றும் பேலன்ஸ்டு ஃபண்டுகளுக்கான வித்தியாசங்கள் என்ன?

ச.ராஜராஜன், விருதுநகர்,

எம்.வெங்கடேஸ்வரன், நிதி ஆலோசகர்.

‘‘1. பேலன்ஸ்டு ஃபண்டுகளில் பங்கு மற்றும் கடன் ஆகிய இரண்டிலும் பிரித்து முதலீடு செய்யப்படும். டைவர்ஸிஃபைடு ஃபண்டுகளில் நிறுவனப் பங்குகளில் மட்டும்தான் முதலீடு செய்யப்படும்.

2. பேலன்ஸ்டு ஃபண்டுகளில் பங்குகள் சார்ந்த முதலீடு 65% - 90% வரை மாறுபடும். ஆனால், டைவர்ஸிஃபைடு ஃபண்டுகளில் பங்கு முதலீடு 95 சதவிகிதத்துக்கும் அதிகமாகத்தான் இருக்கும்.

3. பேலன்ஸ்டு ஃபண்டுகள் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்வதால், அதன் வருமானம் சற்று நிலையானதாக இருக்கும். ஆனால், டைவர்ஸிஃபைடு ஃபண்டுகளின் வருமானம் சந்தையின் ரிஸ்குக்கு உட்பட்டது. சந்தையின் வளர்ச்சிக்கு தகுந்தாற்போல வருமானம் அதிகரிக்கவும், குறையவும் வாய்ப்பிருக்கிறது.’’

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.

அம்மாவின் சொத்துக்களில் யாருக்கெல்லாம் உரிமை உண்டு?