சில நாட்களுக்குமுன் என் நண்பர் மணியைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அவருக்கு மனைவியும், பள்ளியில் படிக்கும் ஒரு மகளும் உண்டு. அவரிடம் ‘‘ஆயுள் காப்பீடு செய் திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். அவரும் சந்தோஷமாக, “ஆமாம், 5 லட்சம் ரூபாய்க்கு, 15 வருடத் துக்கு பாலிசி எடுத்திருக்கிறேன். என் மாத வருமானம் 40,000 ரூபாயில், மூன்று மாதத்துக்கு ஒருமுறை ரூ.8,600 பிரீமியம் செலுத்துகிறேன். சில மாதங்களில் கஷ்டப்பட்டுத்தான் பிரிமீயம் கட்டுகிறேன்’’ என்றார்.

உண்மை என்னவென்றால், அவர் ஆயுள் காப்பீடு எடுத்திருந்தும் அதனால் பெரிய பலன் எதுவும் இல்லை. ஏனென்றால், அவரது குடும்பத்தின் எதிர்கால நிதி தேவைகளைக் கணக்கில் எடுக்காமல், மிகவும் குறைந்த தொகைக்கு பாலிஸி எடுத்திருக் கிறார். நாம் எடுக்கும் பாலிஸி தொகை, நம் குடும்பத்தின் எதிர்கால நிதித் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்யப் போதுமானதாக இருக்க வேண்டும். அதுதான் ஆயுள் காப்பீடு எடுப்பதன் முக்கிய நோக்கம். இந்த உண்மை அவருக்குத் தெரியவில்லை.

இந்த பாலிசி எடுத்திருக்கும் நிலையில், மணி திடீர் விபத்தில் இறக்க நேர்ந்தால், ரூ.10 லட்சம் அவரது குடும்பத்துக்குக் கிடைக்கும். ஆனால், இந்தத் தொகை அவரது குடும்பத்தின் எதிர்கால நிதி தேவைகளை எத்தனை நாட்களுக்குப் பூர்த்திசெய்யும்? மகளின் பள்ளிப் படிப்பு, மேற்படிப்பு, திருமணச் செலவு என்று வருங்காலத்தில் வரக்கூடிய பல செலவுகளை அந்தக் குடும்பத்தால் எப்படிச் சமாளிக்க முடியும்?

ஆனால், நம்மில் பெரும் பாலானோர் இந்தத் தவறையே திரும்பத் திரும்ப செய்கிறோம். காரணம், நம் அறியாமை. நாம் பாலிசி எடுப்பதற்குமுன், நம் குடும்பத்தின் தேவைகள் என்னென்ன, இவற்றைப் பூர்த்தி செய்ய எவ்வளவு பணம் தேவைப்படும் என்று நம்மில் பலரும் யோசித்துக்கூடப் பார்ப்பதில்லை.

இரண்டாவது காரணம், நம்மிடம் வரும் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட். இவர்களில் பலரும் வாடிக்கையாளர்களின் தேவைகள் என்னென்ன, அவற்றை எப்படிப் பூர்த்திசெய்வது என்பனவற்றில் அக்கறை காட்டாமல், ‘உங்களால் மாதம் எவ்வளவு பிரீமியம் தொகை கட்ட முடியும்?’ என்ற ஒரே கேள்வியைக் கேட்டுவிட்டு அதற்குத் தகுந்தாற்போல ஒரு பாலிசியை அவரை எடுக்க வைத்துவிடுகிறார்கள்.

இந்தத் தவறான வழியிலிருந்து நம்மை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது, நம் குடும்பத்தின் எதிர்கால நிதி தேவைகளை எப்படிப் பூர்த்திசெய்வது? என் நண்பர் மணியை உதாரணமாக வைத்தே ஒருவருக்கு முக்கியமாக தேவைப்படும் நான்கு விஷயங் களைப் பற்றி பார்ப்போம்.

அ. குடும்பத்துக்குத் தேவைப்படும் தொகை!

மணியின் குடும்பம் தற்போ தைய வாழ்க்கைத்தரத்திலேயே வாழ மாதம் எவ்வளவு தொகை தேவைப்படுகிறது என்று கண்டுபிடிப்போம். வீட்டுக் கடன் மாதத் தவணை அல்லது வீட்டு வாடகை, மோட்டார் வாகன மாதத் தவணை, மாத படிப்புச் செலவு, பொழுது போக்குச் செலவு, அன்றாட மற்றும் அவசிய செலவுகள் என்று மணியின் வீட்டுக்குத் தேவைப்படும் மாத தொகை ரூ.30,000 என்று வைத்துக் கொள்வோம்.

மணியின் சொந்த செலவுக்குத் தேவைப்படும் தொகையும், அவரது மாத சேமிப்பு தொகையும் மேற்கூறிய தொகையில் சேர்க்க தேவையில்லை. உதாரணத்துக்கு, அந்தக் குடும்பம் துரதிருஷ்ட வசமாக மணியை இழக்க நேர்ந் தால், ஒரு வருடத்துக்கு அந்தக் குடும்பத்துக்கு தேவைப்படும் தொகை ரூ.30,000 X 12 மாதங்கள் = ரூ.3,60,000

ஆ. தேவைப்படும் வருடங்கள்!

மணியின் பெண் குழந்தைக்கு இப்போது நான்கு வயது ஆகிறது. இந்தக் குழந்தை படித்து முடித்துச் சம்பாதிக்க இன்னும் 20 வருடங்கள் ஆகலாம். அதனால் மேலே குறிப்பிட்ட இந்தத் தொகை இன்னும் 20 வருடங் களுக்கு அந்தக் குடும்பத்துக்குத் தேவை.

இ. எதிர்காலத் தேவைகள்!

வீட்டுக்குத் தேவைப்படும் மாதாந்திரச் செலவு தொகை அல்லாமல், வருங்காலத்தில் மணியின் மகளின் மேற்படிப்பு செலவுக்கும், திருமணம் போன்ற செலவுகளுக்கும் தேவைப்படும் தொகை ரூ.50,00,000 என்று வைத்துக்கொள்வோம். பணவீக் கத்தையும் கணக்கில்கொண்டு இந்தத் தொகையைத் தீர்மானித்தால் நல்லது.

ஈ. தற்போதைய சொத்தின் மதிப்பு!

மணியின் பேங்க் டெபாசிட், பிராவிடண்ட் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட், பங்கு முதலீடு, மற்றும் நிலம் / வீடு போன்ற எல்லாவற்றிலும் சேர்த்து மணியின் சொத்தின் மொத்த மதிப்பு ரூ.45,00,000 என்று வைத்துக்கொள்வோம்.

நாம் மேலே கண்டுபிடித்த தொகைகளை, பின்வரும் சூத்திரத்தை உபயோகித்துக் கணக்கிட்டால் கிடைக்கும் தொகைதான் மணியின் குடும்பத்துக்குப் போதுமான ஆயுள் காப்பீட்டுத் தொகை (Adequate Insurance Amount).

அதாவது முதல் விஷயத்தை இரண்டாவது விஷயத்தால் பெருக்கி, அதை மூன்றாவது விஷயத்தினால் கூட்டி, நான்காவது விஷயத்தினால் கழித்தால் கிடைக்கும் தொகைதான் மணியின் குடும்பத்துக்குப் போதுமான ஆயுள் காப்பீட்டுத் தொகை!

அதாவது, (அ X ஆ) + இ - ஈ= (3,60,000 X 20) + 50,00,000 - 45,00,000 = ரூ.77,00,000.

இந்தத் தொகைக்குத்தான் மணி ஆயுள் காப்பீடு எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் எடுத்திருப்பதோ வெறும் ரூ.5,00,000-த்துக்குத்தான்.

உங்கள் மனதில் இப்போது ஒரு சில கேள்விகள் எழும். மணி தற்போது ரூ.5,00,000-த்துக்கு ஆகும் பிரீமியத் தொகை 8,600 ரூபாயை கட்டவே திணறுகிறார். அப்படியிருக்கும்போது இவ்வளவு பெரிய ஆயுள் காப்பீட்டு தொகைக்கு ஆகும் பிரீமியத் தொகையை அவரால் எப்படிக் கட்ட முடியும்? 15 வருடங்களுக்குப் பிறகு ரூ.10 லட்சத்தின் மதிப்பு என்னவாக இருக்கும்?

சராசரி வருட பணவீக்கம் 6% என்று வைத்துக்கொண்டால், 15 வருடங்களுக்குப் பிறகு கிடைக்கும் இந்த ரூ.10,00,000-த்தின் மதிப்பு வெறும் ரூ.4,00,000-ஆகத்தான் இருக்கும். இந்தத் தொகையினால் மணிக்கு பெரிய பலன் எதுவும் கிடைத்து விடாது.

சரி, மணியின் குடும்பத்துக்குத் தேவைப்படும் ரூ.77,00,000-த்துக்கு பாலிசி எடுக்க மாத பிரீமியம் எவ்வளவு தேவைப்படுகிறது என்று பார்த்தால், பிரீமியம் தொகையாக மட்டுமே மாதம் ரூ.30,000 கட்ட வேண்டியிருக்கும். மணியின் ரூ.40,000 மாத வருமானத்தில் எப்படி 30,000 ரூபாய்க்கு பிரீமியம் செலுத்த முடியும்? முடியவே முடியாது என்கிறீர்களா!

முடியும், அதற்கான வழிகளை செய்து தருவதுதான் டேர்ம் இன்ஷூரன்ஸ். இது நாம் வருடா வருடம் எடுக்கும் வாகன இன்ஷூரன்ஸை போன்றது. வாகனத்தில் ஏதாவது கேடு விளைந்தால் வாகனத்தைச் சரிசெய்ய நமக்கு இன்ஷூரன்ஸ் தொகை கிடைக்கும். இல்லை என்றால், நாம் செலுத்திய அந்தத் தொகை திரும்பக் கிடைக்காது.

ஒவ்வொரு வருடமும் நாம் எடுத்துவரும் இந்த பாலிசியைப் போன்றதுதான் ‘லைஃப் டேர்ம் இன்ஷூரன்ஸ்’ பாலிசிகள். இந்த பாலிசியில் சிறிய பிரீமியம் தொகையில் பெரிய தொகைக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க முடியும்.

அதாவது, 30 வயதான மணிக்கு ரூ.77,00,000 பாலிசி தொகைக்கு மாதம் தேவைப்படும் பிரீமியம் வெறும் ரூ.500 (வருடத்துக்கு ரூ.6,000) மட்டுமே.

இந்த டேர்ம் பாலிசியை எடுத்தபின் துரதிருஷ்டவசமாக மணி உயிர் துறக்க நேர்ந்தால், அவரது குடும்பத்துக்கு ரூ.77,00,000 கிடைக்கும். இந்தத் தொகையை வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்தால், 8% வட்டிக்கு ரூ.51,000 மாதம் கிடைக்கும். மணியின் குடும்பத்துக்கு தேவையான ரூ.30,000 போகப் பாக்கி ரூ.21,000 வங்கியிலேயே இருக்கும் இந்தத் தொகை எதிர்பாராத செலவு களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதை மகளின் மேற் படிப்புக்காக 15 வருடங்களுக்குப் பின் ரூ.25,00,000-த்தை எடுக்கலாம். மீதமுள்ள ரூ.52,00,000-க்கு மாதம் ரூ.34,000 மணியின் குடும்பத்துக்குக் கிடைக்கும். இந்த ரூ.52,00,000-த்தில் ஒருபகுதியை மகளின் திருமணச் செலவுக்காக எடுக்கலாம்.

இன்ஷூரன்ஸை முதலீடாகக் கருதாதீர்கள். இன்ஷூரன்ஸ் வேறு, இன்வெஸ்ட்மென்ட் வேறு. இதைப் புரிந்துகொண்டு இப்போதே உங்களின் போது மான ஆயுள் காப்பீட்டுத் தொகை (Adequate Insurance Amount) எவ்வளவு என்று கண்டுபிடித்து, அதற்குண்டான பாலிசி தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து உங்கள் குடும்பத்தின் நலனை உறுதி செய்துகொள்ளுங்கள்.