ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் சிகிச்சை செலவுக்கான தொகை முழுவதற்கும் க்ளெய்ம் கிடைக்காது. செலவு தொகையில் குறிப்பிட்ட சதவிகிதத்தை பாலிசிதாரர் செலுத்த வேண்டியிருக்கும். இதை கோ-பேமென்ட் என்பார்கள். கோ-பேமென்ட் முறை உள்ள பாலிசிகளில் என்னென்ன கவனிக்க வேண்டும், அதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பது குறித்துப் பார்ப்போம்.

ஏன் கோ-பேமென்ட்!

க்ளெய்ம் தொகையைக் குறைக்க உருவாக்கப்பட்டதுதான் இந்த கோ-பேமென்ட் என்கிற நடைமுறை. பெரும்பாலும் மூத்த குடிமக்களுக்கான பாலிசிகளில் இந்த கோ-பெமென்ட் இருக்கும். இதைத் தவிர்த்து, சில குறிப்பிட்ட நோய்களுக்கான பாலிசிகளிலும் கோ-பேமென்ட்டை சில நிறுவனங்கள் வைத்துள்ளன.

கோ-பேமென்ட் முறையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் முதன்மை இன்ஷூரன்ஸ் ஆலோசகர் ஸ்ரீதரனிடம் கேட்டோம்.

“கோ-பேமென்ட் முறையை முழுவதுமாகத் தவிர்ப்பது முடியாத காரியம். ஏனெனில் சில குறிப்பிட்ட நோய்கள் அல்லது மூத்த குடிமக்களுக்கு கட்டாயம் கோ-பேமென்ட் இருக்கும்.

பொதுவாக, கோ-பேமென்ட் என்பது 10 முதல் 30 சதவிகிதம் வரை இருக்கும். இந்த கோ-பேமென்ட் விகிதம் ஒவ்வொரு ஊருக்கும் வித்தியாசப்படும். இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க்கில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது கோ-பேமென்ட் இருக்கும். ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு சிகிச்சை பெறும்போதும் கோ-பேமென்ட் இருக்க வாய்ப்புள்ளது.

கோ-பேமென்ட் உள்ள பாலிசிகளைத் தனியாக தருவதில்லை. இந்த வசதி பெரும்பாலும் ஏற்கெனவே பாலிசிகளில்தான் இருக்கும். அதாவது, ஒருவர் 40 வயதில் இன்ஷூரன்ஸ் எடுத்து, அவருக்கு 60 வயது வரும்போது அந்த பாலிசியானது மூத்த குடிமக்களுக் கான பாலிசியாக மாறிவிடும். அந்தச் சமயத்தில் கோ-பேமென்ட் இருக்கும்.

இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்ப வர்களில் அதிக ரிஸ்க் உடையவர்களுக்கு இந்த கோ-பேமென்ட் இருக்கும். அதாவது தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் (chain smoker), தொடர்ந்து மது அருந்துபவர்கள், தீவிர நோய் பாதிப்பு உள்ளவர் களுக்கு இந்த கோ-பேமென்ட் இருக்கும்" என்றார்.

இந்த கோ-பேமென்ட் முறையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து சொன் னார் நியூ இந்தியா அஷூரன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சேகர் சம்பத்.

“எந்தெந்த சிகிச்சைகளுக்கு எல்லாம் கோ-பேமென்ட் உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். அதேபோல, மொத்த க்ளெய்ம் தொகைக்குத்தான் இந்த கோ-பேமென்ட். கவரேஜ் தொகைக்கு கோ-பெமென்ட் அல்ல. ரூ.2 லட்சம் கவரேஜ் கொண்ட பாலிசியில் ரூ.1.25 லட்சம் க்ளெய்ம் தொகை எனில், 12,500 ரூபாயை கோ-பெமென்டாக கழித்துக்கொண்டு, க்ளெய்ம் தொகைக் போக மீதமுள்ள தொகைக் கட்டினால் போதும். தவிர, மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கும் போது அறை வாடகையைக் கவனிக்க வேண்டும்'' என்றார்.

கவரேஜ் தொகையைவிட க்ளெய்ம் தொகை குறைவாக இருந்தால், இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு லாபம். ஆனால், கவரேஜ் தொகையைவிட க்ளெய்ம் தொகை அதிகமாக இருந்தால், பாலிசிதாரருக்கு லாபம் கிடைக்கும் என்பதை மனதில் கொண்டு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது நல்லது.

இரா.ரூபாவதி