அந்தக் குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர் ராகேஷ்தான். பிரபல ஐடி நிறுவனத்தில் மாதம் ரூ.42,000

சம்பளம். ஒரு நாள் வீட்டுக்குத் திரும்பும்போது நடு இரவில் மிகப் பெரிய விபத்து ஏற்பட்டதில், பலத்த காயங்களுடன் ஒரு கையை இழந்தார் ராகேஷ். வேலைக்கு சேர்ந்தபோதே ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை அவர் எடுத்திருந்ததால், அவருடைய அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ செலவுகள் அனைத்தையும் எந்த பயமுமின்றி எதிர்கொண்டது குடும்பம்.

சிகிச்சைக்குப்பின் இயல்பு நிலைக்கு திரும்ப ஆறு மாதங்களுக்கு மேல் ஆனது. இந்த ஆறு மாத காலத்தில் சம்பளம் இல்லாத விடுமுறை ராகேஷுக்கு கிடைத்ததால், குடும்பத்தின் அன்றாட செலவுக்கு திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டது. ராகேஷ் பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசி (சுருக்கமாக, பிஏ பாலிசி) எடுத்திருந்தால், அந்த சம்பள இழப்பும் ஏற்பட்டிருக்காது. ஒரு கை இழந்ததற்கு இழப்பீடும் கிடைத்திருக்கும். அப்படியா, அது என்ன பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசி என்று கேட்கிறீர்களா?

பிஏ பாலிசியின் நன்மைகள்!

1. ஒருவர் விபத்து மூலம் இறந்து விட்டால், பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசி எடுத்துள்ள தொகை அப்படியே க்ளெய்ம் ஆகக் கிடைக்கும்.

2. விபத்து மூலம் நிரந்தர முழு ஊனம் (Permanent Total Disability) ஏற்பட்டு, அவரால் இனி எந்த வேலைக்கும் போக முடியாத நிலை ஏற்பட்டால் 125% கவரேஜ் தொகை க்ளெய்ம் ஆகக் கிடைக்கும்.

3. விபத்து மூலம் பகுதி நிரந்தர ஊனம் (Partial Permanent Disability) ஏற்பட்டால், உதாரணமாக விபத்தில் கை அல்லது கால் இழந்தால், கவரேஜ் தொகையில் ஒரு பகுதி க்ளெய்ம் ஆகக் கிடைக்கும்.

4. விபத்தினால் உடலில் தற்காலிக ஊனம், உதாரணமாக எலும்பு முறிவு ஏற்பட்டு, வேலைக்குச் செல்ல முடியாத நிலை உருவாகி ஓய்வெடுக்க மருத்துவர் பரிந்துரை செய்திருந்தால், நீங்கள் எடுத்திருக்கும் பாலிசியைப் பொறுத்து, எத்தனை வாரங்கள் நீங்கள் வேலைக்குச் செல்ல முடியாமல், சம்பாதிக்காமல் இருந்தீர்களோ, அத்தனை வாரங்களுக்கு நீங்கள் எவ்வளவு தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து க்ளெய்ம் கிடைக்கும். நாம் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் தொகையில் 1% அல்லது 5,000 ரூபாய், இதில் எது குறைவோ அந்தத் தொகை வாரம்தோறும் க்ளெய்மாக கிடைக்கும். ஒருவேளை உங்களுக்கு விபத்து ஏற்பட்டு 24 மணி நேரம் மருத்துவ மனையில் மருத்துவரின் பரிந்துரையின் படி அனுமதிக்கப்பட்டிருந்தால், மருத்துவமனைக்கான செலவுகளும் க்ளெய்மாக வழங்கப்படும். பொதுவாக, பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசியில் அதிகபட்சமாக 100 வாரங்கள் வரை க்ளெய்ம் பெறலாம்.

புதிய சலுகைகள்!

இப்போது மேலும் பல சலுகைகளை ஆரம்பித்திருக்கின்றன சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள். உதாரணமாக, பாலிசிதாரர் விபத்தில் இறந்தபின் அவருடைய குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்கு பாலிசியை பொறுத்து போனஸாக சில சலுகைகள் வழங்கப்படுகிறது. இப்போது கிடைக்கும் பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசிகளில் அறுவை சிகிச்சை செலவுகளோடு, 30 நாட்களுக்கான மருத்துவமனை செலவுகளுக்கும் க்ளெய்ம் வழங்கப்படுகின்றன.

பிஏ பாலிசி எடுக்கும்போது..!

1. பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசியை குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எடுத்துக் கொள்ளலாம்.

2. நமக்குள்ள தேவை மற்றும் நிதி வசதியைப் பொறுத்து பாலிசியை எடுக்கலாம். பொதுவாக, பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசியில் விபத்தி னால் இறந்தால் மட்டுமே க்ளெய்ம் கிடைக்கும். விபத்தினால் ஏற்படும் இறப்பு, நிரந்தர முழு ஊனம் மற்றும் பகுதி நிரந்தர ஊனம் போன்றவற்றுக்கும் க்ளெய்ம் கிடைக்கும்விதமாக இருக்கும் பாலிசிகளை எடுப்பது அவசியம்.

3. பொதுவாக, மாதச் சம்பளத்தை போல் 100 - 120 மடங்கு தொகைக்கு பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசி எடுக்க வேண்டும்.

4. க்ளெய்ம் செய்யாத ஒவ்வொரு ஆண்டும் இன்ஷூர் செய்த மொத்த தொகை (Sum assured) 10% அதிகரிக்கும் விதமாக இருக்கும் பாலிசிகளை எடுத்துக் கொள்ளலாம்.

க்ளெய்ம் பெறும்போது..!

1. விபத்து ஏற்பட்டு 30 நாட்களுக்குள் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

2. இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து ஆட்கள் அல்லது உங்கள் ஏஜென்ட் வரும்போது க்ளெய்ம் ஃபார்ம், விபத்துக் கான எஃப்ஐஆர் நகல், விசாரணை அறிக்கைகள், மருத்துவர் வழங்கிய அனைத்து பரிந்துரைக் கடிதங்கள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் ஊனச் சான்றிதழ்(Disability Certificate) அனைத்தையும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

3. பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவரின் இறப்புச் சான்றிதழ் (Death Certificate) மற்றும் இறுதிச் சடங்குக்கான சான்றிதழ்களையும் (Burial Certificate) உடன் இணைக்க வேண்டும். இளம் வயதுகொண்ட ஒருவர் ரூ.50 லட்சத்துக்கு பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசி எடுத்தால், ஆண்டுக்கு சுமாராக 5,500 - 6,000 ரூபாய் பிரீமியமாகச் செலுத்த வேண்டியிருக்கும். இந்த பாலிசியை ராகேஷ் எடுத்திருந்தால், ஒரு கையை இழந்ததற்கு மொத்த இன்ஷூரன்ஸ் தொகையான ரூ.50 லட்சத்தில் 70%, அதாவது, ரூ.35 லட்சம் க்ளெய்ம் கிடைத்திருக்கும். அதோடு வேலைக்குச் செல்ல இயலாத ஆறு மாதங்களுக்கு வாரத்துக்கு சுமாராக ரூ.5,000 வீதம் 24*5000 = ரூ.1,20,000 கிடைத்திருக்கும்.

ராகேஷின் திறமையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அவர் செய்துவந்த வேலையை அவருக்கே தந்தது அந்த நிறுவனம். மீண்டும் வேலைக்கு சேர்ந்தபின் கிடைத்த முதல் மாத சம்பளத்திலேயே ஒரு நல்ல பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசியை எடுத்துக் கொண்டார் ராகேஷ்.

இந்த ராகேஷைப் போல், விபத்தில் சிக்கியபின்பே பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசி எடுக்க வேண்டும் என்பதில்லை. இப்போது நல்ல நிலையில் இருக்கும் போதே எல்லோரும் எடுக்கலாமே!

தொகுப்பு: மு.சா.கெளதமன்