ஆறு மாத போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது மேகி. இரண்டு நிமிடத்தில் சமைத்து சாப்பிடக்கூடிய உணவு என்பதாலேயே குழந்தைகள் முதல் முதியோர் வரை பலரது அபிமானத்தைப் பெற்ற உணவாக இருந்தது மேகி நூடுல்ஸ்.

நெஸ்லே நிறுவனம் தயாரித்து மிக அதிக அளவில் விற்பனை செய்வது மேகி நூடுல்ஸ்தான். இந்த நிலையில், மேகியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஈயம் கலந்திருப்பதாக கடந்த ஜூன் மாதத்தில் தெரிய வந்ததால், அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களில் மேகி விற்பனை நிறுத்தப்பட்டது. சந்தையில் இருந்த மேகி பாக்கெட்டுகளை நெஸ்லே நிறுவனம் திரும்பப் பெற்றது. ஏறக்குறைய 20 கோடி ரூபாயை செலவு செய்து சிமென்ட் ஆலைகளில் மேகி பாக்கெட்டுகளை அழித்தார்கள். இதனால் நெஸ்லே நிறுவனத்தின் லாபம் கணிசமாகக் குறைந்ததுடன், அந்தப் பங்கின் விலை கடந்த ஜூன் மாதத்தில் ரூ.6,807-லிருந்து ரூ.5,499 வரை சரிந்தது. இது சுமார் 19% சரிவு ஆகும். இதன்பிறகு மந்தநிலையிலேயே நெஸ்லே நிறுவனத்தின் பங்கு வர்த்தகமாகி வருகிறது.

இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் விற்பனைக்கு வந்தது மேகி. ஆன்லைனிலும் விற்பனை ஆகத் தொடங்கியது. விற்பனை ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் சுமார் 60 ஆயிரம் பாக்கெட்டுகள் விற்பனையானது.

ஆனால், பங்கின் விலையில் பெரிய மாற்றம் ஏதும் காணவில்லை. நெஸ்லே பங்கின் விலை இனி வரும்காலத்தில் எப்படி இருக்கும், அந்த நிறுவனம் மீண்டும் லாபம் சம்பாதிக்குமா, தற்போதுள்ள விலையில் இந்தப் பங்கை வாங்கலாமா என்கிற கேள்வி பல சிறு முதலீட்டாளர்களின் மனதில் இருக்கிறது.

வருமானம் குறைவு!

நெஸ்லே நிறுவனம் காபி தூள், சாக்லேட், பால் பொருட்கள் எனப் பல பொருட்களை தயாரித்து

விற்பனை செய்து வந்தாலும், நிறுவனத்தின் வருமானத்தில் மேகியின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. அதாவது, அந்த நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 25 - 30% மேகியின் பங்களிப்பாக இருந்தது.

சமீபத்திய தடைக்குப் பிறகு நெஸ்லேயின் வருமானம் வெகுவாக குறைந்துள்ளது. அதாவது, 2015 மார்ச் காலாண்டில் ரூ.2,506.79 கோடியாக இருந்த இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம், கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.1,736.20 கோடியாக குறைந்துள்ளது. இதேபோல நிகர லாபமும் ரூ.320.28 கோடியிலிருந்து ரூ.124.20 கோடியாகக் குறைந்திருக்கிறது. நெஸ்லே நிறுவனத்துக்கு நிதியாண்டு என்பது ஜனவரி - டிசம்பர் என்பதால், அடுத்து வரும் டிசம்பர் காலாண்டில் சற்று மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடந்த ஐந்து வருடமாக நெஸ்லே நிறுவனம் சீரான வளர்ச்சி அடைந்து வந்தது. இதன் நிகர லாபம் கடந்த 5 வருடங்களில் சுமார் 44% உயர்ந்துள்ளது. ஆனால், 2015-ல் இதன் வருமான வளர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் வருமானம் என்ன காரணங்களினால் குறையும், இந்தப் பங்கை வாங்கலாமா என்பது குறித்து பங்குச் சந்தை நிபுணர் லெட்சுமணராமனிடம் கேட்டோம்.

உற்பத்திக் குறைவு!

‘‘மேகி மீண்டும் விற்பனைக்கு வந்தாலும், உற்பத்தியை முழு அளவில் தொடங்கவில்லை. இந்தியாவில் ஐந்து இடங்களில் மேகி தயாரிக்கப்படுகிறது. தற்போது மூன்று இடங்களில் உற்பத்தியைத் தொடங்க மத்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. பஞ்சாப், பீகார், ஒடிஸா, மேகாலயா உட்பட எட்டு மாநிலங்களில் தடை இன்னும் நீக்கப்படவில்லை.

இழப்பீடு!

தடை செய்யப்படும்முன் விற்பனை செய்யப்பட்ட மேகி மூலமாக நுகர்வோர்களுக்கு எதாவது பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு இழப்பீடு வழங்குவதற்காக ரூ.640 கோடி கேட்டு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

செலவு அதிகரிக்கும்!

மேகி மீண்டும் விற்பனைக்கு வந்தாலும் அந்த நிறுவனத்தின் லாபம் குறையவே செய்யும். தற்போது ஒரு புதிய பொருளை விற்பனை செய்வதைப் போலவே, மேகிக்கு அதிக விளம்பரங்கள் செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் மேகிக்கு தடைக்கு முன்பு 65 - 70% சந்தைப் பங்களிப்பு இருந்தது.

தடை விதிக்கப்பட்டபின் இதன் அளவு குறைந்தது மட்டும் இல்லாமல், வேறு நிறுவனங்களின் நூடுல்ஸ் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் சந்தை பங்களிப்பை மீண்டும் பிடிப்பதற்காக அதிக விளம்பரம் செய்ய வேண்டியிருக்கும். இதற்கு அதிக அளவு தொகை செலவாகும். அதேபோல, பிற மாநிலங்களில் மேகி மீதான தடை மற்றும் இழப்பீடு வழக்குகள் இருப்பதால், அந்த வழக்கை நடத்துவதற்கு பெரும் தொகை செலவாகும். அந்தப் பணத்தை நிறுவனத்தின் வருவாயிலிருந்துதான் எடுக்க வேண்டியிருக்கும்.

இப்போது வாங்கலாமா?

தற்போது இந்தப் பங்கின் விலை அதிகமாகவே உள்ளது. எனவே, இன்னும் 25% விலை குறைந்தால், இந்தப் பங்கை வாங்கலாம்” என்றார்.

பல ஆண்டு அனுபவம் உள்ள நிறுவனம் என்றாலும், அவசரப்பட்டு இந்தப் பங்கை வாங்கி பணத்தை முடக்குவதை விட, பிரச்னை இல்லாத, நன்கு வளர வாய்ப்புள்ள பங்குகளில் முதலீடு செய்வதே சரி!

படங்கள்: கே.ராஜசேகரன்