நீங்கள் சுற்றுலா செல்லத் தயார் எனில், வீட்டை விட்டு வெளியே கிளம்பும்முன் அவசியம் செய்திருக்க வேண்டிய விஷயம், டிராவல் இன்ஷூரன்ஸ்.

இதில் ஆச்சரியப்படும் ஒரு விஷயம், ஐசிஐசிஐ லொம்பார்ட் நிறுவன ஆய்வின்படி, நம் மக்களில் டிராவல் இன்ஷூரன்ஸ் பற்றி 93% பேருக்கு விழிப்பு உணர்வு இருக்கிறது. என்றாலும் பாலிசி எடுத்திருப்பவர்கள் வெறும் 38% பேர்தான்.

லட்சக்கணக்கில் செலவு செய்து சுற்றுலா செல்லும் நம்மில் பலர் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும் டிராவல் பாலிசியை எடுப்பதில்லை. ஆனால், எதிர்பாராத பாதிப்புகளில் இருந்து நம்மைக் காக்கும் ஆபத்பாந்தவன் இந்த சுற்றுலா பாலிசி. சுற்றுலா செல்வது இந்தியாவுக்குள் (உள்நாடு) எனில், ‘டொமெஸ்டிக் டிராவல் பாலிசி’, வெளிநாடாக இருந்தால் ‘ஓவர்சீஸ் டிராவல் பாலிசி’ எடுக்க வேண்டும்.

வெளிநாட்டு சுற்றுலா செல்லும்போது அவசியம் டிராவல் இன்ஷூரன்ஸை எடுக்க வேண்டியதற்கான முக்கிய காரணம், வெளிநாடு களில் மருத்துவச் செலவு மிக அதிகமாக இருப்பதே. உதாரணமாக, அமெரிக்காவில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டால் தோராய செலவு ரூ.2.6 லட்சமாக இருக்கிறது.

எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும்?

1. நியாயமான காரணங்களால் (தந்தை, தாய், மாமனார், மாமியார், சகோதரர், சகோதரி என்று முக்கிய குடும்ப உறவு களுக்கு ஏதேனும் பாதிப்பு) சுற்றுலா பயணம் ரத்தானால் இழப்பீடு பெற முடியும்.

2. சுற்றுலா செல்பவர்கள் விபத்தில் சிக்கி கொள்வது, நியாயமான காரணங்களால் ரயில், விமானத்தைத் தவற விட்டால் டிக்கெட் பணம் திரும்பக் கிடைக்கும்.

3. சுற்றுலாவின்போது விபத்து, உடல் நலக்குறைவு ஏற்பட்டால், சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

4. ஏதாவது பொருட்கள் திருடு போனால், (லக்கேஜ், பாஸ்போர்ட் போன்ற முக்கிய ஆவணங்கள் தொலைந்தாலும்), அதற்கு இழப்பீடு கிடைக்கும்.

5. அவசர தேவையான பல சிகிச்சைகள்; நம்மால் மற்றவர் களுக்கு காயம்பட்டால் அல்லது மற்றவர்களின் உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டால்.

6. பணம் தொலைந்தால்.

எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்காது!

1. ஏற்கெனவே உள்ள நோய்களுக்கான சிகிச்சை.

2. தற்கொலை, தீவிரவாதம், சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் ஏற்படும் பாதிப்பு, சேதம்.

3.ஆபத்தான விளையாட்டு கள் மூலம் ஏற்படும் பாதிப்பு.

பிரீமியம் அதிகம் இல்லை!

வெளிநாட்டு சுற்றுலாவுக்கான பிரீமியம், நாட்களின் அடிப்படையில் இருக்கும். ஒரு நாள் முதல், பயண காலத்துக்கு ஏற்ப பாலிசி காலத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இதற்கு ஏற்ப பிரீமியம் மாறும். 25 ஆயிரம் டாலர்கள் முதல் பல லட்சம் டாலர் வரை காப்பீடு எடுத்துக் கொள்ளலாம்.

அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு சுற்றுலா சென்றால், அங்கு மருத்துவச் செலவு அதிகம் என்பதால், பிரீமியம் அதிகமாக இருக்கும். அதனால் அந்த நாடு களுக்கு தனி பாலிசி வழங்கப்படும்.

இந்த பாலிசி அமெரிக்கா, கனடாவுக்கு ஒரு பாலிசியாகவும், இதர நாடுகளுக்கு தனி பாலிசியா கவும் விநியோகிக்கப்படுகிறது. ஒருவர் செல்லும் நாடுகளுக்கேற்ப பாலிசி எடுப்பது நல்லது.

45 வயதான குடும்பத் தலைவர், 40 வயது மனைவி, 18 வயது மகன் மகளுடன் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்கிறார் எனில், அந்தக் குடும்பம் 3 நாட்களுக்கு 50 ஆயிரம் டாலருக்கு சுற்றுலா மெடிக்ளெய்ம் பாலிசி எடுத்தால், அதற்கான பிரீமியம் ஏறக்குறைய ரூ.1,100. இதுவே அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செல்வதாக இருந்தால், பிரீமியம் சுமார் ரூ.2,300. மற்ற நாடுகளுக்கு ரூ.1,650. ஆசிய நாடுகளில் 25,000 டாலருக்கு பாலிசி எடுத்தால், பிரீமியம் சுமார் ரூ.750. இந்த பிரீமியம் காப்பீடு நிறுவனங் களைப் பொறுத்து மாறும்.

இந்த பாலிசியை ஆறு மாத குழந்தை முதல் 70 வயதுள்ளவர் களுக்கு எடுக்கலாம். பாலிசியை அனைத்து பொதுத் துறை மற்றும் தனியார் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் எடுக்கலாம்.

க்ளெய்ம் எப்படி?

வெளிநாட்டு சுற்றுலாவின் போது அசம்பாவிதம் ஏற்பட்ட உடனே இன்ஷூரன்ஸ் நிறுவனத் துக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்வது அவசியம். அந்த வகையில், பாலிசி எடுக்கும்போதே, எந்த நாட்டுக்கு எந்த எண்ணில் தொடர்புகொள்ள வேண்டும் என்கிற விவரத்தை கேட்டு டைரி யில் எழுதிக்கொள்வது நல்லது.

சுற்றுலா சென்ற நாட்டில் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் தந்த அடையாள அட்டையைக் காட்டி சிகிச்சை பெறலாம்.

பூட்டிக் கிடக்கும் வீட்டுக்கு என்ன பாதுகாப்பு?

சுற்றுலா என்றாலே பொதுவாக ஒட்டுமொத்தக் குடும்பமும் கிளம்பி விடுவோம். அப்போது பூட்டிக் கிடக்கும்

வீட்டுக்கு பாதுகாப்பு என்ன? இதற்கு கைகொடுப்பதுதாயன் ‘வீட்டு உரிமையாளர் பாலிசி’ (House Holder Policy). இதற்கான ஓராண்டு பிரீமியம் ஒரு லட்ச ரூபாய்க்கு ஏறக்குறைய 300 ரூபாய்தான். ஆனால், குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் குடும்பத்துடன் வீட்டில் இல்லை என்றால், அந்த நாட்களுக்கு கவரேஜ் கிடைக்காது. அதேநேரத்தில், பிரீமியத்துடன் கூடுதலாக ஒரு தொகையை சேர்த்து வசூலித்துக்கொண்டு, வீட்டில் ஆள் இல்லாத நாட்களுக்கும் பாலிசியைக் கொடுக்கும் பொதுக் காப்பீடு நிறுவனங்களும் இருக்கின்றன. அவற்றை நாடலாம். வீட்டில் ஆட்கள் இல்லாத நிலையில் பூட்டப்பட்டிருக்கும் நாட்கள் குறித்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்குத் தகவல் தெரிவித்தால், நம் வீட்டுப் பாதுகாப்பு தொடர்பாக சில நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்வார்கள்.

வீட்டு உரிமையாளர் பாலிசி எடுப்பவர்கள், அதனுடன் சுற்றுலா பயணம் ரத்தானால் (Cancellation of Vacation) இழப்பீடு பெற துணை(ரைடர்) பாலிசியாக டிராவல் கேன்சலேஷன் பாலிசியையும் எடுத்துக்கொள்வது நல்லது. இந்த ரைடர் பாலிசியில் ஒரு லட்ச ரூபாய் கவரேஜ்-க்கு சுமார் 125 ரூபாய்தான் பிரீமியம்.