Published:Updated:

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம்: இனி பின்கோடு நிர்ணயிக்கும்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம்: இனி பின்கோடு நிர்ணயிக்கும்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம்: இனி பின்கோடு நிர்ணயிக்கும்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம்: இனி பின்கோடு நிர்ணயிக்கும்!

Published:Updated:
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம்: இனி பின்கோடு நிர்ணயிக்கும்!

இன்ஷூரன்ஸ் துறையில் புதிதாக களமிறங்கி இருக்கும் எல் அண்ட் டி ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம், மெடிக்ளைம் பாலிசிகளுக்கான பிரீமியத்தை நிர்ணயம் செய்வதில் புதிய சிக்கலை உண்டு பண்ணியிருக்கிறது.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ந்நிறுவனத்தின் சி.இ.ஓ. ஜாய்தீப் ராய், ''மண்டல அளவில் பின்கோடுகளின் அடிப்படையில் மருத்துவச் செலவை ஆராய்ந்து வருகிறோம். ஒவ்வொரு பின்கோடையும் தனித் தனியாகப் பார்த்து பிரீமியம் நிர்ணயிப்பது கஷ்டம் என்பதால், இந்த பின்கோடுகள் அனைத்தையும் மூன்று பிரிவுக்கு கீழ் கொண்டு வர இருக்கிறோம். அதற்கு ஏற்ப பிரீமியம் இருக்கும்'' என்று சொல்லியிருக்கிறார்.

எல் அண்ட் டி நிறுவனம் சொல்கிற மாதிரி பிரீமியத்தை நிர்ணயம் செய்ய ஆரம்பித்தால், சென்னைக்கு வெளியே வசிக்கும் ஒருவரைவிட சென்னை நகருக்குள் வசிக்கும் ஒருவர் சுமார் 15-20% அதிகமாகப் பிரீமியம் கட்ட வேண்டி இருக்கும் என்பதே ஷாக்கான தகவல்.  

பொதுவாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது வயதையும் பழக்கவழக்கங்களையும் (மது மற்றும் புகை), ஏற்கெனவே இருக்கும் நோய்களையும் (நீரிழிவு, ரத்த அழுத்தம்) பற்றித்தானே கேட்பார்கள். இப்போது எதற்கு இந்த பின்கோடு கேட்கிறார்கள்?

பாலிசிதாரர் வசிக்கும் பகுதி பெரும் பணக்காரர்கள் வாழும் பகுதியாக இருக்கும்பட்சத்தில் அந்த ஏரியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றால் லட்சக்கணக்கில் பில் போடு வார்கள். இந்த பில்லை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தான் தர வேண்டும். அதிக பில் போடும் மருத்துவமனைகளில் சேர்ந்துதான் நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள் எனில், உங்களிடம் ஏன் அதிக பிரீமியம் வாங்கக்கூடாது என்பதுதான் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பின்கோடு கேட்பதில் இருக்கும் லாஜிக்.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம், மும்பை, டெல்லி, பெங்களூரு, இதர பகுதிகள் என நான்கு விதமாகப் பிரீமியத்தை ஏற்கெனவே வசூலித்து வருகிறது. இந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை, 36 வயதான ஒருவர், மூன்று லட்ச ரூபாய்க்கு மெடிக்ளைம் பாலிசி எடுத்தால் ஓராண்டுக்கான பிரீமியம் மும்பை எனில் 4,599 ரூபாயும், பிற பகுதிகளில் வசிப்பவர்கள் என்றால் 4,379 ரூபாயும் பிரீமியமாக கட்ட வேண்டியிருக்கும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம்: இனி பின்கோடு நிர்ணயிக்கும்!

அதிக பிரீமியம் கட்டுவதால் முழு மருத்துவச் செலவும் கிடைக்குமா? என்றால் அதுதான் இல்லை! பாலிசி கவரேஜ் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் கிளைம் கிடைக்கும் என்கிறார்கள் மெட்ரோ நகரங்களைச் சேர்ந்த மருத்துமனை அதிகாரிகள்.

தவிர, சென்னை நகருக்குள் வசிக்கும் ஒருவர், சென்னை நகரில் இருக்கும் மருத்துவ மனையில்தான் சிகிச்சை எடுத்துக் கொள்வார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. விபத்து அல்லது மாரடைப்பு வந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சை எடுக்க ஓடுவதுதான் வழக்கமாக இருக்கும்போது, ஏன் அதிக பிரீமியம் கட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் பாலிசிதாரர்கள்.  

அதே நேரத்தில், சிறிய நகரத்தைச் சேர்ந்த ஒருவர் குறைந்த பிரீமியம் கட்டிவிட்டு, சென்னை நகரில் மிகப் பெரிய மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவது கூடாது என்றும் சொல்ல முடியாது.

ஆக, பல்வேறு குளறுபடிகளுக்குத் தான் இந்த பின்கோடு அறிவிப்பு அழைத்துச் செல்லும் என்கிறார்கள் இன்ஷூரன்ஸ் துறை ஆலோசகர்கள்.

''ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் அதிகம் செலவு வரக் காரணம், மருத்துவ மனைகள் எக்கச் சக்கமாக பில் போடுவதுதான். ஒவ்வொரு சிகிச்சைக்கும் இந்த அளவுக் குத்தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அரசாங்கத் தினால் எந்த ஒரு விதிமுறையும் கொண்டுவர முடியவில்லை.

இதை சரி செய்வதை விட்டுவிட்டு, பாலிசிதாரர் வசிக்கும் பகுதியின் பின்கோட்டின் அடிப்படையில் பிரீமியம் வசூலித்து என்ன பிரயோஜனம்? தும்பை விட்டு வாலைப் பிடித்தக் கதைதான் இது!'' என்கிறார், இன்ஷூரன்ஸ் துறை ஆலோசகர் ஒருவர்.

இந்த விஷயத்தில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பதே நல்லது.

- சி.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism