பி.எஃப் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இதற்குமுன் இந்த கவரேஜ் தொகை ரூ.3.6 லட்சமாக இருந்தது, தற்போது இது ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால், இது குறித்து தொழிலாளர் அமைச்சகத்திடம் இருந்தோ, சட்ட அமைச்சகத் திடம் இருந்தோ எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை என்பதால் இந்த இன்ஷூரன்ஸ் கவரேஜ் உயர்வு குறித்து பல குழப்பமான தகவல்கள் கிளம்ப ஆரம்பித்தன.

இந்த நிலையில், இந்த இன்ஷுரன்ஸ் கவரேஜ் உயர்வு குறித்து சென்னையில் உள்ள வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலக அதிகாரிகளிடம் விசாரித்தோம். அவர்கள் இது குறித்து விவரமாக எடுத்துச் சொன்னார்கள்.

“எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் தனது ஊழியர்களுக்கு பி.எஃப் பணத்தை சரியான முறையில் செலுத்துகிறார்களா என்பதை அரசாங்கம் கவனித்துக் கொண்டேதான் வருகிறது. நிறுவனம் செலுத்தாவிட்டால் இது குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பி.எஃப் இன்ஷூரன்ஸ் கிடைக்கும் வசதி உள்ளது. இதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. இதுவரை 3.6 லட்சம் ரூபாயாக இருந்த இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகை 6 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

சென்னையில் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் தலைமையில் கடைசியாக நடந்த கூட்டத்தில்கூட இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகை 6 லட்சம் ரூபாயாக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் சொன்னார்கள்.

ஆனால், அரசு தரப்பிடம் இருந்து இன்னும் இது குறித்த எந்தவொரு முறையான அறிவிப்பும் வெளிவரவில்லை. எப்போது வரும் என்று தெரியவில்லை. எனினும் இன்னும் ஓரிரு மாத காலத்துக்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம்.

பிஎஃப் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதிக் காப்பீட்டுத் திட்டத்தில் கவரேஜ் கிடைக்கும். மாத சம்பளத்தில் பி.எஃப் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்கள் அனைவருக்கும் இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியின் கீழ் கவரேஜ் கிடைக்கும்.

இந்த பாலிசிக்கான பிரீமியத்தை நிறுவனம் செலுத்திவிடும். ஊழியர்கள் பணிக் காலத்தில் இறக்கும் பட்சத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து க்ளெய்ம் பெற முடியும்.

வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் இருந்தே இந்த பாலிசியில் கவரேஜ் கிடைத்துவிடும். பிஎஃப் முதலீட்டுக்கு நாமினியாக குடும்ப உறுப்பினர் யாரை வேண்டுமானலும் சேர்க்கலாம்.

வருங்கால வைப்பு நிதி சென்னை மண்டலத்தைப் பொறுத்தவரை, 20 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் அதிகரித்ததன் மூலம் இந்தியாவில் உள்ள கிட்டதட்ட 4 கோடி சந்தாதாரர்கள் பயன் அடைவார்கள்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி.எஃப்.) வட்டி 8.75 சதவிகிதத்திலிருந்து 8.8 சதவிகிதமாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வரவில்லை; இதுவரை 8.75 சதவிகித வட்டிதான் தருகிறார்கள் என்று யாராவது சொன்னால் நம்ப வேண்டும். இதற்கான அறிவிப்பு எல்லாம் கிடைக்கப் பெற்று 8.8 சதவிகித வட்டிதான் வழங்கப்படுகிறது” என்றார்.

கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதமே 3.6 லட்சம் ரூபாயாக இருந்த இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகை 6 லட்சம் ரூபாயாக அதிகரித்ததாக செய்தி வெளியான பின் இப்போது அரசு ஒப்புதல் அளித்துள்ளதை தாராளமாக வரவேற்கலாம். எனினும் ஒப்புதலோடு நிற்காமல் விரைவில் இதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

காரணம், பணிக் காலத்தில் ஒரு ஊழியர் இறக்கும்பட்சத்தில் இந்த இன்ஷூரன்ஸ் கவரேஜ் மூலமாகக் கிடைக்கும் ரூ.6 லட்சம் அந்தக் குடும்பம் உடனடி பாதிப்பிலிருந்து மீண்டுவர மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.