? மாற்றுத் திறனாளி களுக்குகென்று தனி இன்ஷூரன்ஸ் பாலிசி இருக்கிறதா?

ராஜாராம்,

ஸ்ரீதரன், தலைமை நிதி ஆலோசகர், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்.

“மாற்றுத் திறனாளிகளுக்காக ஜீவன் ஆதார் ஃஹோல் (Jeevan Adhar-Whole), லைஃப் ஜீவன் விஷ்வாஸ்-எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் (Life Jeevan Vishwas- Endowment Assurance) என்ற இரண்டு பாலிசிகளை எல்ஐசி நிறுவனம் வழங்குகிறது. இந்த பாலிசிகள் காப்பீடு மற்றும் முதலீடு இணைந்த திட்டங்கள் ஆகும். மாற்றுத் திறனாளிகளுக்காக மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசியை பெரும்பாலான நிறுவனங்கள் வழங்குகின்றன. ஊனத்தின் காரணமாக ஏதாவது நோய் ஏற்பட்டிருந்தால் நிரந்தர விலக்கு அடிப்படையில் க்ளெய்ம் கிடைக்காது. மற்ற நோய்களுக்கு எப்போதும் போல க்ளெய்ம் கிடைக்கும்.”

? எனக்கு எல் அண்ட் டி லாங் டேர்ம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பாண்ட்ஸ் 2011 ஏ சீரியஸ் 20 பாண்டுகள் 23.3.2011 அன்று அலாட்மென்ட் செய்யப்பட்டது. இந்த பாண்டுகளின் 5 வருட லாக் இன் பிரீயட் 22.3.2016 உடன் முடிவடைந்துவிட்டது. சம்பந்தப்பட்ட பாண்டுகளை விற்று பணமாக்க என்ன செய்ய வேண்டும்?

ஓ.முரளிதரன்,

த.ராஜன், இயக்குநர்,ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ்.

“இந்தப் பத்திரங்களின் பை பேக் ஆப்ஷன் ( buy back option) மார்ச் 23, 2016 அன்று முடிவடைந்துவிட்டது. இப்போது விற்று பணமாக்க முடியாது. இந்தப் பத்திரங்களை அடுத்த பை பேக் ஆஃபரில்தான் விற்றுப் பணமாக்க முடியும். அடுத்த பை பேக் ஆஃபர் 22.9.17-ல் வருகிறது. அப்போது உங்களுக்கு நிறுவனத்திலிருந்து திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை அனுப்புவார்கள். அதனுடன் ஒரிஜினல் பாண்ட் சான்றிதழ்கள், உங்கள் வங்கிக் கணக்கு விவரம், முகவரியில் மாற்றம் இருந்தால் அதை படிவத்தில் தெரிவிக்க வேண்டும். இந்த பை பேக் ஆஃபரில் சமர்ப்பித்த பிறகு பாண்டுக்கான பணம் 23.3.2018 அன்று உங்களின் வங்கிக் கணக்குக்கு வந்து சேரும். தற்போது ஏதேனும் முகவரி மாற்றம் இருந்தால் அதனை அதன் பதிவாளருக்கு தெரியப் படுத்தவும்.

Share Pro Service (india) Pvt ltd,13AB, Samhita ware housing complex, 2nd floor, Sakinaka Telephone exchange lane, off (Anderi- Kurla road), Sakinaka Anderi, Mumbai- 400 072.

? தனியார் நிறுவனம் ஒன்றில் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து கடந்த மூன்று வருடமாக பிரீமியம் செலுத்தி வருகிறேன். நிறுவனத்தின் சேவை சரியில்லை. வேறு கம்பெனிக்கு மாற்றமுடியுமா?

@ மயில்சாமி,

செந்தில் மதிவதனன்,நிதி ஆலோசகர், penguwin.com

“ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு பாலிசியை மாற்றும் போர்ட்டபிலிட்டி (Portability) வசதி, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் மட்டும்தான் உள்ளது. லைஃப் இன்ஷூரன்ஸில் இல்லை. அதனால் வேறு கம்பெனிக்கு மாற்ற முடியாது. வேண்டுமானால் பாலிசியை சரண்டர் செய்துவிட்டு வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ளலாம். சரண்டர் செய்யும்போது இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. புது பாலிசி எடுத்து விட்டு, பழைய பாலிசியை சரண்டர் செய்வது பல வகையில் நல்லது”

? ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் லாங் டேர்ம் ஈக்விட்டி பிளானில்(டைரக்ட்) டிவிடெண்ட் திட்டத்தில் முதலீடு செய்துள்ளேன். ரெகுலர் பிளானில் முதலீடு செய்தவர்களுக்கு டிவிடெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. டைரக்ட் பிளானில் செய்த எனக்கு டிவிடெண்ட் கொடுக்கவில்லை. அது ஏன்?

கேசவன்,

சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், மைஅஸெட் கன்சாலிடேஷன்.காம்.

“செபியின் விதிமுறையைப் பொறுத் தவரை போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளை விற்று வருகிற லாபத்தில் தான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் டிவிடெண்டை கொடுக்க வேண்டும். டைரக்ட் பிளானில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் ஃபண்ட் மேனேஜர்கள், அதிலுள்ள பங்குகளை விற்று டிவிடெண்ட் ஆக முதலீட்டாளர் களுக்கு கொடுப்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. அதனால், தான் உங்களுக்கு டிவிடெண்ட் கிடைக்க வில்லை. டைரக்ட் பிளானில் முதலீடு செய்வது எந்தவிதத்திலும் தவறல்ல. காலப்போக்கில் டைரக்ட் பிளானில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதற்கான பலன் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.”

? என் மனைவியின் பெயரில் இஎல்எஸ்எஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன். இதற்கு எனக்கு வருமான வரிச் சலுகை கிடைக்குமா?

செந்தில் குமார்,

ச.ஸ்ரீராம் ரெட்டி, ஆடிட்டர்.

“உங்கள் மனைவியின் பெயரில் இஎல்எஸ்எஸ் திட்டத்தில் முதலீடு செய்தால் உங்களால் வரிச் சலுகை பெற இயலாது. மாறாக தங்கள் பெயரிலும், தங்கள் மனைவி பெயரிலும் கூட்டாக(ஜாயின்ட்) முதலீடு செய்தால் வரிச் சலுகை பெற முடியும். அவ்வாறு கூட்டாக முதலீடு செய்யும்போது தங்கள் பெயர் முதலில் இடம் பெற வேண்டும்.”

? நான் ஏற்கெனவே வாங்கிய பஞ்சாயத்து அனுமதி பெற்ற மனையில், இப்போது வீடு கட்ட அனுமதி வாங்குவது எப்படி?

சண்முகம்,

கே.அழகுராமன்,வழக்கறிஞர், சென்னை உயர் நீதி மன்றம்.

“பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்ற மனை பிரிவென்பது, அதனை மனையாக விற்பனை செய்வதற்கு வழங்கப்படுவதாகும். அதில் கட்டுமானம் கட்டுவதென்பது, மனை பிரிவின் அனுமதியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அந்த மனையில் வீடு கட்டும் போது, முதலில் வரை பட அங்கீகாரம் (Plan Approval ) பெறுதல் அவசியம்.

வரை படத்தில் குறிப்பிட்டுள்ள கட்டுமானத்தை, குறித்த காலத்திற்குள், சில நிபந்தனைகளுடன் கட்டி முடித்து விட வேண்டுமென, அந்த பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படும். அதனைப் பெற்ற பின்பே கட்டுமானம் கட்டுதல் வேண்டும். இதுவே, நகரப் பகுதியில் இருப்பின், மாநகராட்சி அல்லது சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) மூலமாக முறையான அங்கீகாரம் /அனுமதி பெற்று கட்டுதல் வேண்டும்.”

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.