Published:Updated:

நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு சூப்பர் முதலீட்டு பார்முலா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு சூப்பர் முதலீட்டு பார்முலா!
நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு சூப்பர் முதலீட்டு பார்முலா!

சேனா சரவணன்

பிரீமியம் ஸ்டோரி
நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு சூப்பர் முதலீட்டு பார்முலா!

ய்வுக் காலத்துக்காக ஒருவர் எவ்வளவு தொகையைச் சேர்த்து வைக்கவேண்டும் என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. மாதச் சம்பளம் வாங்கும் ஒருவர் தனது ஓய்வுக் காலத்துக்காக, அவர் கடைசியாக வாங்கும் மாதச் சம்பளத்தை போல் சுமார் 180 முதல் 240 மடங்கு தொகை (ஆண்டு வருமானத்தைப் போலச் சுமார் 15 முதல் 20 மடங்கு தொகை) சேரும் அளவு முதலீடு செய்து, நிதித் தொகுப்பை (Carpus) உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

பொதுவாக, வேலைக்குச் சேர்ந்தது முதலே ஓய்வுக் காலத்துக்கான முதலீட்டை ஆரம்பித்துவிடுவது நல்லது. அதே சமயம், சம்பளம் உயரும்போது ஓய்வுக் கால முதலீட்டுத் தொகையையும் உயர்த்திக் கொள்வது அவசியம். இப்படி செய்து வந்தாலே ஒருவர் தன் கடைசி காலத்தில் யார் கையையும் நம்பி இருக்கத் தேவை இருக்காது.

நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு சூப்பர் முதலீட்டு பார்முலா!

உதாரணத்துக்கு, ஒருவர் அவரின் 58-வது வயதில் மாதச் சம்பளம், பிடித்தம் எல்லாம் போக ரூ.50,000 கையில் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர், 180 மாதச் சம்பளத் தொகையான 180*50,000 = ரூ.90,00,000  வைத்திருக்க வேண்டும். ஏறக்குறைய ரூ.1 கோடி இருக்கவேண்டும். 

இந்தத் தொகை பார்க்க  பிரமாண்டமாக தெரியலாம். ஆனால், இளம் வயதிலேயே முதலீட்டைத் தொடங்கினால் இந்தத் தொகையை   எளிதாகச் சேர்த்துவிடலாம். அதாவது, 28 வயதான ஒருவர், 30 ஆண்டுகள் தொடர்ந்து மாதம்தோறும் ரூ.2,835 முதலீடு செய்தாலே போதும் (பார்க்க அட்டவணை),  ஓய்வு பெறும்போது ரூ.1 கோடி சேர்ந்துவிடும்!    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு