நம்மில் பெரும்பாலோர் திடீர் செலவு ஏற்பட்டால், செலவைக் குறைக்க உடனடியாக நிறுத்துவது இன்ஷூரன்ஸ் பிரீமியத்தைதான்.இப்படி இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்துவதில் மெத்தனமாக இருப்பதினால், பாலிசிதாரர் கடுமையான அபாயத்தை எதிர்கொள்ளத் தயாராகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் இன்ஷூரன்ஸ் பிரீமியத்தைக் கருணைக் காலம் (கிரேஸ் பிரியட்) தாண்டியும் கட்டாத நிலையில், பாலிசிதாரருக்கு ஏதாவது அசம்பாவிதம் (இறப்பு ஏற்பட்டால்) நடந்தால் க்ளெய்ம் தருவதில்லை. இந்த கருணைக் காலம் என்பது காலாண்டு, அரையாண்டு, ஆண்டுக்கு ஒரு முறை பிரீமியம் கட்டும் பாலிசிகளில் 30 நாட்களாகவும், மாதம்தோறும் பிரீமியம் கட்டும் பாலிசிகளில் 15 நாட்களாகவும் இருக்கின்றன.

இந்த கருணைக் காலத்தில் பிரீமியம் கட்டவில்லை என்றாலும் எண்டோவ்மென்ட், யூலிப், டேர்ம் பிளான் பாலிசிகளில் இழப்பீடு தந்துவிடுகிறார்கள். இந்த கருணைக் காலத்தைத் தாண்டும்போது நிபந்தனைகளுக்கு உட்பட்டு இழப்பீடு வழங்கப்படலாம். கருணைக் காலம் தாண்டி பிரீமியம் கட்டாத நிலையில், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் டேர்ம் பிளானில் இழப்பீடு தரமாட்டார்கள். எண்டோவ்மென்ட் பாலிசி எடுத்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், கருணைக் காலம் தாண்டியும் பிரீமியம் கட்டாத நிலையில், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், இழப்பீட்டு தொகையில், கட்டவேண்டிய பிரீமியத் தொகையைக் கழித்துக்கொண்டு மீதியைக் கொடுத்துவிடுவார்கள்.

யூலிப் பாலிசியில், மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், கருணைக் காலம் தாண்டியும் பிரீமியம் கட்டாத நிலையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், ஃபண்ட் மதிப்பு அடிப்படையில் இழப்பீடு கொடுப்பார்கள். உதாரணத்துக்கு, ரூ.2 லட்சத்துக்கு பாலிசி எடுத்திருக்கும்பட்சத்தில், ஃபண்ட் மதிப்பு ரூ.1 லட்சம் இருந்தால், அதனை மட்டுமே குடும்பத்துக்கு தருவார்கள். பிரீமியம் தொடர்ந்து கட்டிவந்தால், மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு அந்தக் குடும்பத்துக்குக் கிடைத்திருக்கும்.

எனவே, எந்தச் செலவு வந்தாலும் இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டுவதை மட்டும் நிறுத்தாமல் இருப்பதே பாதுகாப்பு.