மருத்துவக் காப்பீடு என்கிற ஹெல்த் இன்ஷூரன்ஸ் (மெடிக்ளெய்ம்) பாலிசியை ஒருவர், அவரின் ஓராண்டு சம்பள அளவுக்கு எடுத்துக்கொள்வது அவசியம். உதாரணமாக, ஒருவரின் மாதச் சம்பளம் ரூ. 40,000 என்கிறபட்சத்தில் சுமார் 5 லட்சம் ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.

லைஃப் இன்ஷூரன்ஸ் போல் இல்லாமல் இந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் எடுப்பது அவசியம்.

விபத்து, உடல்நல பாதிப்பு எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால், குடும்பத்தினருக்கு இந்த பாலிசியை எடுத்துக்கொள்வது அவசியம்.

கணவன், மனைவி, ஒரு குழந்தைகொண்ட ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்துக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால், ஓராண்டு பிரீமியம் ரூ.10,000 முதல் ரூ.12,000 இருக்கும். அதாவது, ரூ.10,000 கட்டி பாலிசி எடுத்திருக்கும் பட்சத்தில் அந்த வருடத்தில் அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதாவது உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டால், ரூ.5 லட்சம் வரைக்கும் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். அந்த வகையில் இந்த பாலிசியை ‘பணம் காக்கும் பாலிசி’ என்று குறிப்பிடலாம்.

இப்படி பாலிசி எடுக்காத நிலையில், விபத்து ஏற்பட்டாலோ அல்லது மாரடைப்பு போன்றவை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நிலை ஏற்பட்டாலோ கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் செலாவாகிவிடும். இந்த ரூ.5 லட்சம் ரூபாயை ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தினர் சேர்க்க, குறைந்தது 6 முதல் 8 ஆண்டுகள் ஆகியிருக்கும். அதாவது, ஏதாவது சிக்கல் ஏற்பட்டு ரூ.5 லட்சம் செலவானால், அந்தக் குடும்பத்தில் 8 ஆண்டு காலம் செய்த சேமிப்பும், முதலீடும் கரைந்து போய்விடும்.