‘உங்க குழந்தை மேல உங்களுக்கு உண்மையான பாசம் இருந்தா, அவன் பெயர்ல ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுங்க’ - இப்படி யாராவது சொன்னால், ஒரு நிமிடம்கூட யோசிக்காமல் ஓகே சொல்லிவிடு வார்கள் பலர். இதேபோல, ‘உங்கள் மனைவியின் பெயரில் ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுங்கள்’ என்று சொல்லும்போது பலராலும் தட்ட முடிவதில்லை.

பொதுவாக, வருமானம் ஈட்டும் நபர்கள் பெயரில் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதே சரி. மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரில் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது தவறு.

ஒரு சின்ன உதாரணம். தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக இருப்பவர் ஜீவன். வருமான வரிச் சலுகைக்காக ரூ.10 லட்சம் கவரேஜ் கிடைக்கிற மாதிரி ஒரு எண்டோவ்மென்ட் பாலிசியை எடுக்கச் சொன்னார் ஏஜென்ட் ஒருவர். பிறகு அவரே, ‘உங்கள் பிள்ளைகள் மற்றும் மனைவி பெயரில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தாலும், உங்களுக்கு வருமான வரிச் சலுகை கிடைக்கும்’ என்றார். ஜீவனும் தன் மனைவியின் மீதுள்ள பாசத்தினால் அவர் பெயரில் ரூ.10 லட்சத்துக்கு எண்டோவ்மென்ட் பாலிசி ஒன்றை எடுத்தார்.

சில மாதங்கள் கழித்து விபத்து ஒன்றில் இறந்தார் ஜீவன். அவர் பெயரில் போடப்பட்ட லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் அவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கிடைத்தது. இப்படிச் செய்யாமல், ரூ.20 லட்சத்துக்கு தன் பெயரிலேயே அவர் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தால், அவர் இறந்தபின் அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடாகக் கிடைத்திருக்கும். ஜீவன் இறந்தபின், அவர் மனைவியின் பெயரில் உள்ள பாலிசிக்கு பிரீமியம் பணம் கட்டமுடியாமல் போனதால், அந்த பாலிசி காலாவதியானது.

எனவே, மனைவி மீதும் குழந்தைகள் மீதும் பாசம் வைப்பது வேறு; இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது வேறு என்பதை இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்முன் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

(பின்குறிப்பு: ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எடுப்பது அவசியம். காரணம், விபத்து அல்லது நோய் பாதிப்பு என்பது யாருக்கு வேண்டுமானலும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படக்கூடும்!)