Published:Updated:

ஆயுள் காப்பீடு... அசத்தும் பெண்கள்! ஆனால்...

ஆயுள் காப்பீடு...  அசத்தும் பெண்கள்! ஆனால்...
பிரீமியம் ஸ்டோரி
ஆயுள் காப்பீடு... அசத்தும் பெண்கள்! ஆனால்...

ஆர்.ஜெயலெட்சுமி

ஆயுள் காப்பீடு... அசத்தும் பெண்கள்! ஆனால்...

ஆர்.ஜெயலெட்சுமி

Published:Updated:
ஆயுள் காப்பீடு...  அசத்தும் பெண்கள்! ஆனால்...
பிரீமியம் ஸ்டோரி
ஆயுள் காப்பீடு... அசத்தும் பெண்கள்! ஆனால்...
ஆயுள் காப்பீடு...  அசத்தும் பெண்கள்! ஆனால்...

ன்ஷூரன்ஸ் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவது ஆயுள் காப்பீடு என்று சொல்லப்படும் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகள்தான். நமக்குப் பிறகு, நம்மை நம்பி இருப்பவர்களுக்கான ஒரு அழகான ஏற்பாடுதான் இன்ஷூரன்ஸ் என்பது. இன்ஷூரன்ஸ் பாலிசிகளை பெரும்பாலும் ஆண்களே எடுக்கிறார்கள். பெண்கள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கக்கூடாதா, பெண்கள் தங்களுக்கென இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கிறார்களா என்பதை அறிய தமிழகம் முழுக்க உள்ள சில பெண்களைச் சந்தித்துக் கேட்டோம்.

ஆயுள் காப்பீடு...  அசத்தும் பெண்கள்! ஆனால்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரஸ்வதி, சென்னை

“கடந்த 15 வருஷமா மணி பேக் பாலிசிதான் கட்டி வந்தேன். இக்கட்டான சூழ்நிலையில பணம் தேவைப்பட்டப்ப எல்லாம் பாலிசி மேல லோன் போட்டு எடுத்துட்டு இருந்தேன். லோனுக்கான பணத்தையும் அப்பப்ப கட்டிருவேன். இப்பதான் பாலிசி முடிஞ்சு அதுக்கான பலனை அனுபவிச்சேன். அடுத்தது என்ன பாலிசி எடுக்கலாம்னு யோசிச்சுட்டு வர்றேன். வேலை பார்க்குற எங்களை மாதிரி பெண்களுக்கு அலுவலகத்துலேயே குரூப் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொடுத்திடுறாங்க. அதுபோக, பொண்ணுங்க தங்களுக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி  எடுக்கணும்ங்கிறது என்னோட அபிப்ராயம்.”

ஆயுள் காப்பீடு...  அசத்தும் பெண்கள்! ஆனால்...

காய்திரி அருண், மதுரை

“நிறைய பேர் வருமான வரி விலக்குக்காக பாலிசி போடுறதைப் பார்த்திருக்கேன். என்னோட பேர்ல ஒரு லட்சம் ரூபாய் கவரேஜ் கிடைக்கிற மாதிரி ஒரு எண்டோவ்மென்ட் பாலிசி எடுத்திருக்கேன். அதுக்காக வருஷத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் பிரீமியம் கட்டிட்டு வர்றேன். இதுதவிர, என் ரெண்டு பசங்களுக்கும், என் கணவருக்கும் தனித்தனியா எண்டோவ்மென்ட் பாலிசி எடுத்திருக்கேன். என் பசங்களோட கல்விச் செலவுக்காக 15 வருஷ பாலிசி ஒன்றை எடுத்திருக்கேன். இதுக்கு மாசாமாசம் ரூபாய் 2,000 பிரீமியம் கட்டிட்டு வர்றேன். இதனால அவனோட 17 வயசுல 5 லட்சம் ரூபாய் கிடைக்கும். அது அவனோட காலேஜ் படிப்புக்கு உபயோகமா இருக்கும். குழந்தைகளோட மேற்படிப்புக்கு உதவும் வகையில ஒரு பாலிசி எடுத்து, மாதந்தோறும் பிரிமீயம் கட்டிட்டு வர்றேன்.”

ஆயுள் காப்பீடு...  அசத்தும் பெண்கள்! ஆனால்...

செல்வ கோமதி, மதுரை 

‘‘குடும்பத்துக்காக நிறைய சேமிப்புத் திட்டங்களில் முதலீடு பண்ணியிருந்தாலும், இந்த லைஃப் இன்ஷூரன்ஸ் மேல மட்டும் பெரிய ஆர்வமோ, ஈர்ப்போ வரவே இல்ல. ஒருநாள் என் நண்பர்  ‘சும்மா போடுப்பா’னு சொன்னதுக்காக எண்டோவ்மென்ட் பாலிசி ஒரு லட்ச ரூபாய்க்கு எடுத்தேன். வருஷத்துக்கு 5 ஆயிரம் கட்டினா போதும்னு சொன்னதுனால போட்டேன். எப்படி ஓடுச்சுனே தெரியல. 12 வருஷம் ஆயிடுச்சு. என்ன செலவு வந்தாலும் பாலிசிக்கு ஒரு தொகை எடுத்து வைக்கத் தயங்குறதில்லை. இதுவும் ஒரு சேமிப்புதான்.’’ 

ஆயுள் காப்பீடு...  அசத்தும் பெண்கள்! ஆனால்...

ரஞ்சனா, சென்னை

“என்னோட பையன் பிறந்தவுடனேயே நாங்க மணி பேக் பாலிசி போட்டோம். ஒரு வருஷத்துக்கு 10 ஆயிரம்னு முடிவு பண்ணி அவனோட பதினைந்து வயசு வரைக்கும் கட்டிட்டு வந்தோம். அதுக்கப்புறம் அதை குளோஸ் பண்ணிட்டு, பையனை இன்ஜினீயரிங் சேர்க்கிறதுக்கு அந்தப் பணத்தை உபயோகப்படுத்திகிட்டோம். என்னை பொறுத்தவரை, லைஃப் இன்ஷூரன்ஸும், மெடிக்ளெய்மும் ரொம்ப அவசியம். எந்த நேரத்துல நமக்கு என்ன நடக்கும்னு யாருக்குமே தெரியாது. அதேபோல, எங்க ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் சேர்த்து 15 ஆண்டுகளுக்கு மெடிக்ளெய்ம் பாலிசி எடுத்திருக்கிறோம்.
மெடிக்ளெய்ம் பாலிசி எடுத்ததுனால போன வருஷம் எனக்கு எதிர்பாராத விதமா நடந்த சர்ஜரிக்கு 95 சதவிகித பணம் திரும்பக் கிடைச்சது. இந்த மாதிரி பல சமயங்கள்ல எங்களுக்கு மெடிக்ளெய்ம் பாலிசி உதவியா இருந்திருக்கு.’’

ஆயுள் காப்பீடு...  அசத்தும் பெண்கள்! ஆனால்...

டாக்டர் அமுதா, சென்னை

“நான் வேலைக்குச் சேர்ந்ததுல ஆரம்பிச்சு இன்னியோட 12 வருஷமாச்சு. இதுவரைக்கும் லைஃப் இன்ஷூரன்ஸ் கட்டிட்டு வர்றேன். ஒரு வருஷத்துக்கு கட்டி 10 ஆயிரம்னு பிரிச்சு 20 ஆயிரம் ரூபாய்க்கு ரெண்டு இன்ஷூரன்ஸ் பாலிசி போட்டிருக்கேன். நான் ரிட்டயர்டு ஆன பிறகான செலவுக்காக மாசம் 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கிற மாதிரி ஒரு பாலிசி கட்டிட்டு வர்றேன். அந்த பாலிசி முதிர்வடைய இன்னும் 15 வருஷம் இருக்குது.

அதேமாதிரி, என் பையனோட உயர் படிப்புக்காக ஒரு யூலிப் பாலிசி எடுத்து, அதுக்கு மாதம் 4,000 ரூபாய் கட்டுறேன். இதுதவிர, அதிக ரிஸ்க் இல்லாத மியூச்சுவல் ஃபண்டுலேயும் முதலீடு செஞ்சிட்டு வர்றேன்.”

இன்ஷூரன்ஸ் விஷயத்தில் பெண்கள் கலக்கினாலும், எண்டோவ்மென்ட் பாலிசிகள் அதிகபட்சம் 5 முதல் 6 சதவிகித வருமானம் மட்டுமே தருகின்றன என்பதை குடும்பத் தலைவிகள் பலரும் புரிந்துகொள்வதே இல்லை. குறைந்த பிரிமீயத்தில் அதிக இழப்பீட்டைத் தரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வேலைக்குச் செல்லும் பெண்கள் எடுக்க முடியும். ஆனால், அசம்பாவிதம் நிகழ்ந்தால் மட்டுமே கட்டிய பணம் திரும்பக் கிடைக்கும். இல்லாவிட்டால் கட்டிய பணம் திரும்பக் கிடைக்காது.
 
படங்கள்: வீ.சதீஷ் குமார், சொ.பாலசுப்ரமணியன், கே.ஜெரோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism