திடீரென ஏற்படும் மருத்துவச் செலவு களைச் சமாளிக்க உதவுவதுதான் மெடிக்ளைம் பாலிசி. ஆனால், பெரும்பாலோர் அனைத்து மருத்துவச் சிகிச்சைகளுக்கும் இந்த பாலிசி மூலம் இழப்பீடு பெறலாம் என்று நினைக்கிறார்கள். அது நிஜமல்ல. சில விதமான நோய்களுக்கு கிளைம் கிடைக்காது. எதற்கெல்லாம் கிளைம் கிடைக்காது தெரியுமா..?

மெடிக்ளைம் பாலிசி எடுத்த 30 நாட்களுக்குள் வரும் நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், விபத்துக்கு மட்டும் இது விதிவிலக்கு..!

ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு மெடிக்ளைம் பாலிசியில் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாது. நோயை பொறுத்து பாலிசி எடுத்த இரண்டு அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகுதான் சிகிச்சை எடுக்க முடியும். தவிர, நோய் இருந்து அதை மறைத்து பாலிசி எடுத்திருப்பது இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிந்தால், கிளைம் மறுக்கப்படும்.

பிளாஸ்டிக் சர்ஜரி, உடல் உறுப்புகளை அழகாக்கிக் கொள்ள செய்யப்படும் சிகிச்சைகளுக்கு கிளைம் கிடைக்காது.

கண் அறுவை சிகிச்சைக்கு கிளைம் கிடைக்கும். அறுவை சிகிச்சைக்குப் பின் கண்ணாடி வாங்குவது, கான்டாக்ட் லென்ஸ், காது கேட்கும் இயந்திரத்தைப் பொருத்திக் கொள்வதற்குக் கிளைம் கிடைக்காது.

பல் எடுப்பது, பல் பாலிஷ் செய்து கொள்வது போன்றவற்றுக்கு கிளைம் கிடையாது.

.குடிபோதையில் வண்டி ஓட்டி விபத்து ஏற்பட்டால், அதற்கான சிகிச்சைக்கு கிளைம் கிடைக்காது. போதைப் பொருட்கள் சாப்பிட்டு அதன் மூலம் உருவாகும் நோய்களுக்கும் கிளைம் கிடைக்காது..
எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் எதற்கும் மெடிக்ளைம் செல்லுபடியாகாது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத நிலையில் எடுக்கப்படும் எக்ஸ்-ரே, ஸ்கேன், ரத்த பரிசோதனை போன்றவைகளுக்கான செலவுகள் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது.

குழந்தைப்பேறு சிகிச்சைகள், கருச்சிதைவு, குழந்தைப் பிறப்பு, குழந்தைப் பிறப்பிற்குப் பிறகான சிகிச்சைகள் போன்றவைகளுக்கு கிளைம் கிடைக்காது.

பொதுவாக, இயற்கை வைத்தியமான சித்தா, ஆயுர் வேதம் மூலம் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கு கிளைம் கிடைக்காது.

24 மணி நேரத்திற்கும் குறைந்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்திருந்தால் கிளைம் கிடைக்காது.

-பானுமதி அருணாசலம்.