யூலிப் பாலிசிகளில் பணத்தைப் போட்டவர்கள், இன்றைக்குப் போட்ட பணத்தைவிட குறைந்து விட்டதே என்கிற கவலையில் கலங்கிப் போய் கிடக்கிறார்கள். யூலிப் பாலிசிகள் எப்படிப் பட்டவை என்று தெரியாமல் எடுத்ததே இதற்கு காரணம். யூலிப் பாலிசிகளின் அடிப்படைதான் என்ன?

யூலிப் பாலிசியில் ஏஜென்ட் கமிஷன், பிரீமியம் ஒதுக்கீட்டுக் கட்டணம், இன்ஷூரன்ஸ் கவரேஜுக்கான கட்டணம், ஃபண்ட் நிர்வாகக் கட்டணம், வெளியேறும் கட்டணம் என பலவற்றுக்குப் போக மீதமுள்ள பணமே முதலீட்டுக்குச் செல்லும்.

யூலிப் பாலிசியில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு பிரீமியம் ஒதுக்கீட்டுக் கட்டணம் அதிகமாக இருக்கும். அதன் பிறகு குறையும்.

மூன்றாண்டுகள் பிரீமியம் கட்டிவிட்டு, குறைவான கட்டணம் இருக்கும்போது பாலிசியை சரண்டர் செய்தால் அல்லது பிரீமியம் கட்டுவதை நிறுத்தினால் பாலிசிதாரருக்கு நஷ்டமே ஏற்படும். குறைந்தது 8-10 ஆண்டுகள் தொடர்ந்து பிரீமியம் கட்டினால் நல்ல வருமானம் கிடைக்கும்.

.சந்தை உச்சத்தில் இருக்கும்போது யூலிப் பாலிசியில் டாப்-அப் செய்வதைத் தவிர்த்துவிட்டு, சந்தை சரிந்து என்.ஏ.வி. குறைவாக இருக்கும்போதே செய்யலாம்..
சந்தையின் இறக்கத்தில் யூனிட்களை விற்றால் லாபம் குறையும். சந்தை ஏறும்வரை காத்திருந்து யூனிட்களை விற்பதே புத்திசாலித்தனம்.

பாலிசியைத் தொடங்கிய ஆரம்ப ஆண்டுகளில் ஈக்விட்டி ஆப்ஷனில் தொடர்வது நல்லது. முதிர்வுக்கு 2-3 ஆண்டுகளுக்கு முன்பு பணத்தை எடுத்து பேலன்ஸ்டு அல்லது பாண்ட் ஆப்ஷனுக்கு மாற்றிக் கொள்வதன் மூலம் லாப இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

யூலிப் பாலிசிகளில் உள்ள ரிஸ்க்கை புரிந்து கொண்டு எடுப்பது நல்லது. இல்லாவிட்டால், டேர்ம் இன்ஷூரன்ஸை எடுத்துவிட்டு, மீதப் பணத்தை டாப் ஈக்விட்டி டைவர்சிஃபைட் பண்டுகளில் முதலீடு செய்வதே லாபகரமானது என்பது பெரும்பாலான நிபுணர்களின் கருத்து.

-செ.கார்த்திகேயன்