Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11

ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

கோவா

மெ
ளரீஸ் ஒபோயோ – இந்தியாவுக்கான நைஜீரிய நாட்டின் தூதுவர் – சரியான ஆத்திரத்தில் இருந்தார். கோவா கலவரத்தில் இறந்த நைஜீரியனால் இவர் வெளிச்சத்துக்கு வந்தார். நைஜீரியர்களின் பாதுகாப்பு குறித்து சமீபத்திய தகவல் என்ன என்று கேட்டறியும் பொருட்டு கோவா முதல்வருடன் தொடர்புகொண்டார்.  

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11

‘`மிஸ்டர் ஒபோயோ, இது நெறிமுறை மீறல். இந்திய யூனியனில் இருக்கும் மாநிலங்களுடன் தொடர்புகொள்ள வேண்டுமெனில், அது வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூலம்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். மாநிலப் பாதுகாப்பு குறித்து நான் உங்களுடன் கலந்துரையாட விரும்பவில்லை.’ மிகவும் அமைதியாகப் பேசுவதற்கு முதல்வர் முயற்சி செய்தார்.

‘`எனது நாட்டைச் சேர்ந்த ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார். யார் அவரைக் கொன்றது என்று உங்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு எதுவும் தெரியவில்லை. அது மட்டு மல்லாமல், என்னுடைய நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்திருக்கிறீர்கள். இந்த நிலையில், நான் நெறிமுறையைப் பின்பற்ற வேண்டுமா?’’  - மெளரீஸ் போனில் சத்தமாகப் பேசினார். 

‘`ஆமாம், அம்பாசிடர். அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும்’’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11‘`நைஜீரியர்களைக் காவல்துறை கைது செய்வதை நிறுத்தாமல், அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்று வது தொடர்ந்தால், நைஜீரியாவில் வாழும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தெருவுக்குத் துரத்தியடிக்கப்படுவார்கள். அப்படி ஏதாவது நடந்தால், நீங்கள்தான் அதற்குப் பொறுப்பு’’ என்றார்.

‘`உங்கள் நோக்கத்தை நான் மத்திய அரசுக்குத் தெரிவிக்கிறேன், மிஸ்டர் ஒபோயோ.’’ முதல்வர் தனது அமைதியாக சொல்ல, மெளரீஸ் போனை சத்தத்துடன் வைத்தார்.

முதல்வர் அவருடைய உதவியாளரைக் கூப்பிட்டுப் பதிவு செய்யப்பட்ட உரையாடலைக் கொடுத்தார். எவ்விதத் தாமதமும் இல்லாமல், நைஜீரிய அம்பாசிடரின் பயமுறுத்தல் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானதுடன், சமூக ஊடகங்களிலும் `வைரலா’னது.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11

‘`நைஜீரிய அதிகாரியின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் அதேவேளையில், சட்டம் அதன் கடமையைச் செய்யும் என்பதையும் நான் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நைஜீரியர்களுக்கு எதிராக எங்களுக்கு எந்த விரோதமும் இல்லை. ஆனால், நாங்கள் சட்டம், ஒழுங்கைப் பராமரிக்க வேண்டும். அமைதியைப் பராமரிக்க நாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், கைது செய்வோம்’’ என்று முதல்வர் தொலைக் காட்சியில் கூறினார். இந்திய மக்கள் இந்த நாடகத்தை விரும்பினார்கள்.

இந்தச் சம்பவம் நைஜீரிய அரசை மிகவும் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியது. மெளரீஸ் ஒபோயோ நைஜீரியாவுக்கு உடனடியாகத் திருப்பி அழைக்கப்பட்டார். மன்னிப்பு கோரப்பட்டது.

ஒருவழியாக பிரச்னை சுமூகமான முடிவை எட்டியது. சட்டநடைமுறையெல்லாம் முடிந்தபின் கைது செய்யப்பட்ட 123 பேரில் 122 பேர் விடுவிக்கப் பட்டனர். ஆனால், ஒருவர் மட்டும் விடுவிக்கப்படவில்லை.

 மும்பை

ஞாயிற்றுக்கிழமை காலை வேளை, மாள்விகா படுக்கை யிலிருந்து எழுந்திருக்கும்போதே மகிழ்ச்சியாக இருப்பதுபோல உணர்ந்தார். அவர் வார நாள்களில் விட்ட தூக்கத்தை வார இறுதியில் பிடிக்கக் காத்துக்கொண்டிருப்ப வர்.  வங்கியின் சி.இ.ஓ என்பதால், அவருக்கிருந்த சமூக ஈடுபாடுகள் அவரது தூக்கத்தைப் பறித்துக் கொண்டன. அவர் அறையைச் சுற்றி நோட்டம்விட்டார், அது இன்னும் இருட்டாக இருந்தது. அவர் ஜன்னல்களிலிருந்த திரைச் சீலையை இழுத்து மூடியிருந்தார். வாரநாள்களாக இருப்பின் வெளிச்சம் தெரியவேண்டுமென் பதற்காக சிறிது இடைவெளி விட்டு மூடுவார். ஆனால், ஞாயிறன்று வெளிச்சத்துக்கு இடமில்லை. அவர் மணி என்ன வென்று தெரிந்துகொள்வதற்காக போனைப் பார்த்தார். அது 9.42 காட்டியது. அப்போதுதான் அவர் `மிஸ்ட் கால்’களைப் பார்த்தார். ஒரே நம்பரிலிருந்து ஐந்துமுறை போன் வந்திருந்தது. அவர் ஏன் ஞாயிறன்று காலையில் கூப்பிடவேண்டும்? 

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11

அவர் பாத்ரூமுக்குச் சென்று ஷவருக்குக் கீழே போய் நின்றார். அவர் படுக்கையை விட்டு எழுந்தவுடன் ஒவ்வொரு நாளும் அவர் செய்யக் கூடியதுதான். ஷவர் தண்ணீர் அவர் உடம்பில் பட்டவுடன் தன்னையும் அறியாமல் நடுங்கத் தொடங்கினார். `மிஸ்ட் ்கால்கள்’ அவருக்குக் கவலையளித்தது.

உடலில் டவலைச் சுற்றிக்கொண்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்தார். சைலண்ட் மோடில் இருந்ததால், போனின் ஸ்கிரீன் `ஃப்ளாஷாகி’ வெளிச்சத்தைத் தெறித்தது. அதே நம்பர். அவர் போனை எடுத்து `அழைப்பை’ ஏற்றுக்கொண்டார்.

‘`மார்னிங், மாள்விகா, எப்படி இருக்கிறீர்கள்?” - எதிர்முனையில் இருந்த குரல் கேட்டது.

‘`மார்னிங் பீட்டர், சாரி, நான் உங்களோட காலை மிஸ் செய்து விட்டேன். போன் சைலன்ட் மோடில் இருந்தது.’’ 

‘`நான் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்.’’ சிறுஇடைவெளிக்குப்பிறகு,  ‘`இன்றைக்கு...’’ என்றார் பீட்டர்.

‘`இன்றைக்கேவா?’’

`’யெஸ், இன்றைக்கேதான். நான் மும்பையில்தான் இருக்கிறேன்.’’

‘`நீங்கள் இங்கே வருவதை எங்களிடம் சொல்லவே இல்லையே!’’

‘‘சிறிய விடுமுறைக்காக மாலத்தீவுக்குப் போகிறவழியில் வந்திருக்கிறேன். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உங்களையும் சந்திக்கலாமென்று நினைத்து கொஞ்சம் `ரூட்’டை மாற்றிக்கொண்டேன். இப்ப நீங்க ஃப்ரீயா இருந்தால், இன்டர்நேஷனல்  ஏர்போர்ட் பக்கத்தில இருக்கிற இன்டர்கான்டினென்டலில் நாம் சந்திக்கலாம்’’ என்றார்.

‘`ஓ’’ - மாள்விகாவுக்கு கொஞ்சம் ஜெர்க் ஆனது. ‘இந்தப் பிராந்தியத்திற் கான சி.இ.ஓ, முன்கூட்டியே சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறார் என்றால், ஏதோ நிலைமை சரியில்லை என்று அவருக்குத் தோன்றியது.   

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11

‘`கண்டிப்பாக, பீட்டர்.இன்னும் ஒரு மணிநேரத்துல நான் அங்கே இருப்பேன்’’ – மாள்விகா.

ஒரு மணி நேரத்துக்குப்பிறகு, கவலையுடன் இருந்த மாள்விகாவின் மெர்சிடிஸ் இன்டர்கான்டினென்டுக்குள் நுழைந்தது. அங்கே லாபியில் பீட்டர் காத்துக்கொண்டிருந்தார். மாள்விகா லாபியில் காலெடுத்து வைத்ததும் பீட்டர் அவரை அன்போடு வரவேற்று `ஹக்’ செய்தார். இது வழக்கமானதில்லை. பொதுவாக, பீட்டர் நெருங்கிப் பழகக்கூடிய நபரல்ல. இருவரும் அந்த ஹோட்டலில் இருந்த காபி ஷாப்புக்கு சென்றனர்.

சம்பிரதயாமான விசாரிப்புகளுக்குப் பிறகு, பீட்டர் விஷயத்துக்கு வந்தார்.

‘`நான் ஒரு விஷயத்தை உங்களிடம் நேரில் சொல்ல விரும்பினேன், மாள்விகா. அதனால்தான் இந்தியாவுக்கு வரவேண்டுமென்று முடிவு செய்தேன்’’ என்றார்.

மாள்விகா உட்கார்ந்த இடத்திலிருந்து கொஞ்சம் முன்னோக்கி வந்தார். அவர் அமைதியாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்தாலும், உள்ளுக்குள் சூறாவளி அடித்துக் கொண்டிருந்தது. அதை ஓரளவுப் புரிந்துகொண்டாலும் வெளிக் காட்டிக்கொள்ள விரும்பாத பீட்டர் சில வினாடி களுக்குப்பிறகு உற்சாகத்துடன், ‘`கங்கிராஜு லேஷன்ஸ், மாள்விகா!” என்றார்.

‘`எதுக்காக?” என ஆச்சரியத் துடன் கேட்டார் மாள்விகா.

‘`உங்களை இந்தியாவில் இயங்கிவரும் குழுமத்துக்கு சேர்மன் ஆகப் பதவி உயர்வு செய்ய வங்கித் தலைமை முடிவு செய்திருக்கிறது. குழுமத்தில் இருக்கும் அனைத்து நிறுவனங் களும் இனி உங்களிடம்தான் ரிப்போர்ட் செய்யும், மாள்விகா!”

‘`த்ரில்ட், பீட்டர். ரியலி?” இதைச் சொல்லும்போது கண்களைக் சுழற்றினார் மாள்விகா. ‘‘இது ப்ரமோஷனா அல்லது `கிக்-அப்’பா?”

`என்ன சொல்றீங்க?”

‘`இந்தியாவில் இயங்கும் என்.ஒய்.ஐ.பி-ன் ஒவ்வொரு பிசினஸும் சிங்கப்பூரில் இருக்கும் அந்தந்த பிசினஸைச் சேர்ந்தவர் களிடம்தான் ரிப்போர்ட் செய்துவருகிறார்கள். இங்கே சி.இ.ஓ–ஆக இருப்பவர் இந்திய வங்கிகளில் அதே பொறுப்பில் இருப்பவர்களை விடக் குறை வான அதிகாரமே கொண்டிருக் கிறார். நினைத்தபடி பிசினஸை நடத்திச் செல்ல சேர்மனுக்குப் போதுமான அதிகாரம் இருக்க வேண்டுமென்று ஒருவர் எதிர்பார்ப்பது சரிதானே? ஆனால், அது மாதிரி ஒரு பொசிஸனே இதுவரை இல்லை’’.

‘`மாள்விகா, நீங்கள் இதுவரை இந்தியாவில் செய்த வேலைக்கு நாங்கள் பெரிதாக ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தோம். இந்தியாவில் இருக்கும் அனைத்து பிசினஸ்களுக்கும் நீங்கள் தலைவராவதைவிட வேறு என்ன இருக்க முடியும்?”

மாள்விகா தலையாட்டினார். பீட்டர் சொன்னதில் ஒரு வார்த்தை யைக்கூட அவர் நம்பவில்லை. ‘`நீங்கள் சொல்வதற்கு என்ன ஆதாரம்?’’ என்று கேட்டார்.

பீட்டருடைய தோற்றம் மாறியது. அவர் சொன்னதை மாள்விகா நம்பவில்லை என்பதைத் தெரிந்து கொண்டவுடன் கொஞ்சம் `சீரியஸ்’ மூடுக்கு வந்தார். ‘`போர்டு அளவில் இந்த முடிவு சிங்கப்பூரில் எடுத் திருக்கிறார்கள். அவர்கள் இதை நாளை மறுநாள் அறிவிப்பார்கள். நான் இதை உங்களிடம் நேரில் தெரிவிக்க விரும்பினேன். இந்தியப் பிரிவுக்கு ஐந்து வருடம் சி.இ.ஓ–வாக இருந்த உங்களுக்குப் பதவி உயர்வு தர இந்தவொரு ஆப்ஷன் தான் அவர்களுக்கு இருந்திருக்கும்’’.
 
‘`எனக்குப் பதிலாக வரப்போவது யார்?”

‘`இன்னும் முடிவு செய்யப்பட வில்லை. அப்படி அவர்கள் முடிவு செய்யும்பட்சத்தில் உங்களுக்குத் தான் அது குறித்து முதலில் தெரியவரும்.’’

இதுவரை பேசிக்கொண்டிருந் ததை நினைத்து மாள்விகாவுக்கு குழப்பம் ஏற்பட்டது. அவருடைய தற்போதைய பதவியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டு, `பார்க்கிங் ஸ்லாட்’டில் இருக்கிறார். ஒருபக்கம் கோபம், இன்னொரு பக்கம் குழப்பம். பீட்டருக்கு குட்பை சொல்லிவிட்டு, ஹோட்டலை விட்டு வெளியே கிளம்பினார் மாள்விகா!

(பித்தலாட்டம் தொடரும்)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11

கிராமப்புற வளர்ச்சி... மத்திய அரசு நிராகரிக்கிறதா? 

கி
ராமப்புற வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்துக்கு (MGNREGA) மத்திய அரசு தர வேண்டிய தொகையை காலம் தாழ்த்தித் தந்ததால், கடந்த நிதி யாண்டில் ரூ.67,956 கோடி மட்டுமே செலவழிக்கப் பட்டிருப்பதாக எஸ்.பி.ஐ நிறுவனத்தின் ஆய்வறிக்கை சொல்லியிருக்கிறது. கடந்த 2015-16-ல் ரூ.2.38 லட்சம் கோடியும், 2016-17-ல் ரூ.2.08 லட்சம் கோடியும் இந்தத் திட்டத்துக்காக காலம் தாழ்த்தித் தரப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இதற்கான தொகை குறைந்தி ருப்பதைப் பார்த்தால், கிராமப்புற வேலை வாய்ப்பில் மத்திய அரசு அக்கறை காட்ட வில்லையோ என்கிற சந்தேகம் எழுகிறது!