சுதாவின் கணவர் ரங்கராஜ், சிறுதொழில் ஒன்றை நிறுவி நல்ல முறையில் நடத்திவந்தார். தொழில் அபிவிருத்திக்காக நிறையக் கடன் வாங்கியிருந்தார். குடும்பத்தின் பாதுகாப்புக்காக ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் பாலிசியும் எடுத்திருந்தார்.

வித்யாவின் கணவர் சந்தானம், ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மேலதிகாரி. இவரும் குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி ஒரு கோடி ரூபாய்க்கு எண்டோவ்மென்ட் பாலிசி எடுத்து வைத்திருந்தார்.

கவிதாவின் கணவர் சங்கரும், லதாவின் கணவர் ரமேஷும் தலா 50 லட்சம் ரூபாய்க்கு ஹோல் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து வைத்திருந்தனர்.

இந்த நான்கு குடும்பத் தலைவர்களும் ஒரு ரயில் விபத்தில் இறந்தனர். இவர்களின் மரணம் அந்தந்தக் குடும்பங்களுக்குப் பேரிழப்பாக இருந்தாலும், இன்ஷூரன்ஸ் பணம் தொடர்ந்து வாழ்க்கையை நடத்த உதவும் என்று எண்ணியிருந்த குடும்பத்தாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

என்ன காரணம்?

காரணம், ரங்கராஜ் எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் கிடைத்த இழப்பீட்டுப் பணத்தைக் கடன் கொடுத்தவர்கள் பெற்றுச் சென்றனர். சந்தானமோ, அவரது குடும்பத்துக்குத் தெரியாமல் இன்ஷூரன்ஸ் பாலிசிமீது பெரும் கடன் வாங்கியிருந்தார். சங்கர், தான் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை தனது மனைவியிடம் கூட சொல்லாமல் சரண்டர் செய்திருந்தார். ரமேஷோ, தான் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசியின் நாமினியாக வேறொரு பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு, மாற்றியிருந்தார்.

குடும்பத்தைக் காக்கும் சட்டம்

இந்த நான்கு குடும்பத்தினருக்கும் நேர்ந்தது போன்ற கொடுமை வேறு யாருக்கும் நேராமல் இருக்க ஒரு வழி இருக்கிறது. அதுதான், எம்.டபிள்யூ.பி ஆக்ட் எனப்படும் ‘Married Women’s Property Act’ மூலம் காப்பீடு பெறுவது. இந்தச் சட்டம் மணமான பெண்களின் சொத்துகளை சொந்தக்காரர்கள், கடன் கொடுத்தவர்கள் மற்றும் கணவனிடமிருந்து காக்க உருவானது. இதன் ஆறாம் செக் ஷன் காப்பீட்டு பணப் பாதுக்காப்பு குறித்தானது. ஆயுள் காப்பீடு எடுக்கும்போது எம்.டபிள்யூ.பி ஆக்ட் ஃபார்ம் (form) இணைக்க வேண்டும்.

யாரும் உரிமை கோர முடியாது

பாலிசிதாரருக்கோ, அவருடைய நிறுவனத்துக்கோ கடன் கொடுத்தவர்கள் அவருடைய வீடு, வங்கியில் உள்ள பணம், ஆயுள் காப்பீட்டுத் தொகை உள்பட அனைத்துச் சொத்துகள் மீதும் உரிமை கொண்டாட முடியும். ஆனால், அவர்களால் இந்தச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆயுள் காப்பீட்டுப் பணத்தின்மீது உரிமை கோர முடியாது

இந்தச் சட்டம் வெளியாட்கள் மட்டுமல்லாது, கணவரிடமிருந்தும் குடும்பத்தைக் காக்கிறது. இந்தச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட பாலிசியை சரண்டர் செய்யவும் முடியாது; பாலிசியிலிருந்து கடனும் பெற முடியாது; ஒருமுறை மனைவியை நாமினியாக அறிவித்தபின் வேறு யார் பெயருக்கும் அதை மாற்றவும் முடியாது.

யாருக்கு எவ்வளவு?

ஏற்கெனவே எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசியில் இதை இணைக்க முடியாது. பாலிசிதாரர் இறந்தால் காப்பீட்டுப் பணம் மனைவிக்கு மட்டும் அல்லது பிள்ளைகளுக்கு மட்டும் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு என்று ஏதாவது ஒரு ஆப்ஷனை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். காப்பீட்டுப் பணம் அனைவருக்கும் சரிசமமாகப் பிரிக்கும்படியும் இதனை எழுதலாம் அல்லது யாருக்கு எத்தனை சதவிகிதம் என்று குறிப்பிட்டும் எழுதலாம். ஆனால், ஒருமுறை தேர்ந்தெடுத்தபின் அதை மாற்ற இயலாது.

பாதகங்கள்

இந்தத் திட்டத்தின் பாதகங்கள் என்று பார்த்தால், இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்ய முடியாது. இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தந்து, கடன் பெற முடியாது. மெச்சூரிட்டி தொகை வரும்போது, அந்தத் தொகை நேரடியாக மனைவிக்கும், பிள்ளைகளுக்கும்தான் போகுமே தவிர, பணம் போட்ட குடும்பத் தலைவருக்கு வராது.

யோசிக்கலாமே

தனக்குப்பிறகு தன் குடும்பத்தின் பாதுகாப்புக்காகத்தான் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறோம் என்பது உண்மையெனில், எம்.டபிள்யூ.பி ஆக்டின்படி, இந்த வசதியைப் பெற பாலிசிதாரர்கள் யோசிக்கலாமே!