Published:Updated:

ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... காலக்கெடு எதுவரை?

ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... காலக்கெடு எதுவரை?
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... காலக்கெடு எதுவரை?

கேள்வி - பதில்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... காலக்கெடு எதுவரை?

கேள்வி - பதில்

Published:Updated:
ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... காலக்கெடு எதுவரை?
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... காலக்கெடு எதுவரை?
ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... காலக்கெடு எதுவரை?

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் எத்தனை நாளில் க்ளெய்ம் செய்ய வேண்டும்?
செ.ரமேஷ், தென்காசி

பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்
“பொதுவாக, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த ஏழு நாள்களுக்குள் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குத் தெரிவிக்க வேண்டும். அவர்கள் டிபிஏ-ஐ  மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க அவகாசம் கொடுக்கவே இந்த விதிமுறை. அடுத்து, மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்த 15 நாள்களுக்குள் இழப்பு கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.”

தீப்பிடித்து சேதமாகும் வாகனத்திற்கு விபத்துக் காப்பீட்டு க்ளெய்ம் கிடைக்குமா?
ரஞ்சித் குமார், கோயமுத்தூர்

வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்

“எதன் மீதாவது மோதி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்திருந்தால் க்ளெய்ம் செய்ய முடியும். ஆனால், அப்படி விபத்து நடக்கவில்லை என்றால், தீப்பிடித்ததற்கான காரணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனம் தீர ஆய்வு செய்த பின்பே அவர்களின் இன்ஷூரன்ஸ் விதிமுறைகளுக்கு ஏற்ப முடிவு செய்வார்கள். பொதுவாக, வாகனத் தயாரிப்புக் குறைபாட்டால் தீப்பிடித்திருந்தால் அதற்கு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் தரமாட்டார்கள். அதேபோல, இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்குத் தெரிவிக்காமல் வாகனத்தை பெட்ரோல்/ டீசலிருந்து கேஸ் எரிபொருளுக்கு மாற்றி, அதன்காரணமாக தீவிபத்து நடந்திருப்பின் க்ளெய்ம் கிடைப்பது உறுதியில்லை.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... காலக்கெடு எதுவரை?

டி.டி.எஸ். பிடித்தத் தொகையின் ரீஃபண்ட் வருமான வரித்துறையிலிருந்து கிடைக்கவேண்டியுள்ளது. தற்போது அவர்களிடமிருந்து வந்த மெயிலில் எனது ரீஃபண்ட் கணக்கு பி.டி.எஃப் ஃபைலை திறப்பதற்கு பான் கார்டு எண் மற்றும் பிறந்த தேதியை டைப் செய்யச்சொல்லியிருக்கிறார்கள். இப்படிச் செய்யலாமா,  அல்லது இது ஏமாற்று மெயிலாக இருக்குமா?
வேலுச்சாமி, மதுரை

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

“டி.டி.எஸ் பிடித்தம் ரீஃபண்ட் தொடர்பாக வங்கிக் கணக்கு விவரங்களை நம்மிடம் கேட்டு மெயில், எஸ்.எம்.எஸ் வந்தால்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். போலி ரீஃபண்ட் மெசேஜ்கள் பெரும்பாலும், “உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்கள் தவறாக இருக்கின்றன. எனவே,  சரியான விவரங்களை அனுப்பவும்” என்று கேட்டு வரும். அடுத்ததாக, “உங்களுக்கு  ஓ.டி.பி எண்  எஸ்.எம்.எஸ் மூலம் வந்திருக்கும், அதனைக் கூறுங்கள். அப்போதுதான் உங்கள் கணக்கிற்கு ரீஃபண்ட் தொகையைச் செலுத்த முடியும்” என்றும் மெசேஜ் அல்லது அழைப்பு வரலாம். அப்படியிருந்தால் அது கண்டிப்பாக ஏமாற்று வேலைதான். மற்றபடி உங்களுடைய வருமான வரித் தாக்கல் தொடர்பான எந்த விவரமாக இருந்தாலும், அதனைத் திறந்து பார்க்க உங்களுடைய பான் கார்டு எண் மற்றும் பிறந்த தேதியை பாஸ்வேர்டாகத்தான் கேட்பார்கள். இது அனைவருக்கும் பொதுவான நடைமுறை தான். எனவே, இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை.”

மேலும், வருமான வரி இணையதளத்தில் உங்களுக்கான லாகின் உள்ளே சென்று பார்த்தால் உங்களுக்கு அனுப்பப்படும் தகவல்கள் குறித்த விவரங்கள் இருக்கும். அதை வைத்தும் உறுதி செய்துகொள்ளலாம்.”

ஏற்றுமதி செய்ய முக்கியமான ஆவணங்கள் எவை?
கார்த்திக், சென்னை

கே.எஸ்.கமாலுதீன், இயக்குநர், ப்ளூபாரத் எக்சிம் ப்ரைவேட் லிமிடேட்

“ஏற்றுமதியாளர்கள் அனைவருக்கும் மூன்று முதன்மையான ஆவணங்கள் தேவை. அவற்றை மதர் டாக்குமென்ட்ஸ் (Mother Documents) என்பார்கள். அவை, கமர்ஷியல் இன்வாய்ஸ், பேக்கிங் லிஸ்ட் மற்றும் எஸ்.டி.எஃப் (Statutory Declaration Form) எனப்படும் சட்டப்பூர்வ அறிவிப்புப் படிவம் ஆகியவை ஆகும். நீங்கள் வாங்கும் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி இருந்தால் டாக்ஸ் இன்வாய்ஸ் தேவைப்படும். இவை தவிர அந்தந்த ஏற்றுமதிப் பொருள்களுக்கு ஏற்ப கூடுதல் ஆவணங்கள் தேவைப்படலாம்.”

ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... காலக்கெடு எதுவரை?

கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து மாதம் ரூ.5,000 வீதம் இன்வெஸ்கோ இந்தியா கான்ட்ரா ஃபண்ட், ஆதித்ய பிர்லா சன்லைஃப் ஈக்விட்டி அட்வான்டேஜ் ஃபண்ட், பிரின்சிபல் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ஆகிய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். ரிஸ்க் எடுக்கக்கூடிய நான், அடுத்த ஐந்தாண்டுகளில் நல்ல வருமானம் ஈட்ட விரும்புகிறேன். இந்த ஃபண்டுகள் அனைத்தும் கடந்த சில மாதங்களாகச் சரியாக வருமானம் ஈட்டவில்லை. எனவே, இதில் தொடரலாமா, மாற்றிக்கொள்ளலாமா?
சந்திரசேகர், மணப்பாறை

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா

“பங்குச் சந்தை முதலீடுகளில் ஏற்ற இறக்கங்கள் தவிர்க்க முடியாதவை. ஒரு ஃபண்ட் நிர்வாகி என்னிடம் இதை அழகாக விளக்கினார். ஒரு மலை உச்சியிலிருந்து இன்னொரு மேலும் உயரமான மலை உச்சிக்குச் செல்ல வேண்டும் என்றால், முதல் உச்சியிலிருந்து இறங்கித்தான் போக முடியும். அதுபோல்தான் பங்குச் சந்தையும். உங்கள் முதலீட்டுத் தொகுப்பில் நல்ல ஃபண்டுகள் உள்ளன. ஆனால், மூன்றையுமே மல்டிகேப் ஃபண்டுகளாகத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உங்கள் தொகுப்பிலிருக்கும் ஆதித்ய பிர்லா ஃபண்டிற்கு பதில், அதே கம்பெனியின் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்டிற்கு மாற்றிக்கொள்ளவும்.”

நான் எஸ்.ஐ.பி. முறையில் மாதம் 5,000 ரூபாயை ஃப்ராங்க்ளின் இந்தியா ஃபீடர் ஃப்ராங்க்ளின் யு.எஸ். ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டில் முதலீடு செய்து வருகிறேன். எனது முதலீட்டுக்காலம் 10 ஆண்டுகள். இது நல்ல ஃபண்டுதானா?
சேதுராமலிங்கம், சென்னை

என்.விஜயகுமார், நிதி ஆலோசகர்

“இந்தத் திட்டம் அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகும். அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருந்தாலும்கூட இது கடன் சார்ந்த பங்காகவே கருதப்படும். ஏனெனில், 65 சதவிகிதம் அளவிற்கு இந்திய பங்கு சார்ந்த சந்தையில் முதலீடு செய்யாவிட்டால் வருமான வரி கணக்கீட்டில் அது கடன் சார்ந்த ஃபண்டாகவே கருதப்படும். எனவே, இது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டின் வரி அமைப்பிற்கே பொருந்தும். இந்தியா வளர்ந்து வரும் நாடு, அமெரிக்கா வளர்ந்த நாடு என்ற வேறுபாடு காரணமாக அமெரிக்காவைவிட இந்திய பங்குச் சந்தையின் வளர்ச்சி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, நீங்கள் முதன்முறை முதலீடு செய்வதாக இருந்தால் இந்திய பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். அல்லது ஏற்கெனவே நீங்கள் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால், உங்கள் மொத்த முதலீட்டில் பத்து சதவிகிதத்தை மட்டுமே இந்த ஃபண்டில் முதலீடு செய்வது நல்லது.”

ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... காலக்கெடு எதுவரை?

ஒரு நிறுவனத்தின் பங்கை ரூ.2 என்ற விகிதத்தில் வாங்கியிருந்தேன். இரண்டு ஆண்டுகளில் பங்கின் விலை ரூ.45-ஆக உயர்ந்தது. இதனை விற்றுக் கிடைத்த மூலதன ஆதாயத்திற்கு வரிவிலக்கிற்கு விண்ணப்பித்தேன். ஆனால், மதிப்பீட்டின்போது, அந்த நிறுவனம் பென்னி ஸ்டாக் என்று கண்டறியப் பட்டதாகவும், அதில் கிடைத்த மூலதன ஆதாயத்திற்கு வரி கட்டவேண்டும் என்றும் மதிப்பீட்டு அதிகாரி கூறினார். இது சரியா?
தண்டபாணி, திருச்சி

எஸ்.பாலாஜி, சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

“சட்டப்படி, பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்ட பங்கை ஓராண்டு காலத்திற்கு டீமேட் கணக்கில் வைத்திருந்து, பின் விற்பனை செய்வதால் கிடைக்கும் மூலதன ஆதாயத்திற்கு வருமான வரி விலக்கு உண்டு. அதனை பென்னி ஸ்டாக், நான்-பென்னி ஸ்டாக் என்று வருமான வரி அலுவலர் பிரித்துப் பார்க்கக்கூடாது. ஆனால், இந்த லாபம் முறையற்றதாகப் பெறப்பட்டது என்பதை வருமான வரித்துறை அதிகாரி நிரூபிக்கும்பட்சத்தில் அதன்மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், வருமான வரிவிலக்கை மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உள்ளது.”

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... காலக்கெடு எதுவரை?

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
கேள்வி-பதில் பகுதி,
நாணயம் விகடன், 757,
அண்ணாசாலை, சென்னை-2.
nav@vikatan.com.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism