Published:Updated:

நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்.... பங்குச் சந்தை... முதலீட்டுத் தேர்வு... பாதுகாப்பு!

நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்.... பங்குச் சந்தை... முதலீட்டுத் தேர்வு... பாதுகாப்பு!
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்.... பங்குச் சந்தை... முதலீட்டுத் தேர்வு... பாதுகாப்பு!

நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்.... பங்குச் சந்தை... முதலீட்டுத் தேர்வு... பாதுகாப்பு!

நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்.... பங்குச் சந்தை... முதலீட்டுத் தேர்வு... பாதுகாப்பு!

நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்.... பங்குச் சந்தை... முதலீட்டுத் தேர்வு... பாதுகாப்பு!

Published:Updated:
நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்.... பங்குச் சந்தை... முதலீட்டுத் தேர்வு... பாதுகாப்பு!
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்.... பங்குச் சந்தை... முதலீட்டுத் தேர்வு... பாதுகாப்பு!

ங்குச் சந்தைகள் தற்போது இறக்கத்தில் உள்ளன. இன்னும் இறங்குமா அல்லது ஏறுமா என்பதை யாருமே முடிவு செய்ய முடியாத நிலையில், ‘‘இந்தியப் பங்குகள் - அடுத்து என்ன?’’ என்ற தலைப்பில் பேசினார் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜானகிராமன். சென்னையில் கடந்த டிசம்பர் 15, 16-ம் தேதிகளில் `நாணயம் விகடன்’ சார்பில் ஃபைனான்ஸ் கான்க்ளேவ் நிகழ்ச்சியில் அவர் பேசினார். இனி, அவர் பேசியதாவது...

“பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, குறுகியக் கால முதலீடானது ஓட்டிங் மெஷினைப் போன்றது. வெற்றி, தோல்வி இரண்டுக்கும் வாய்ப்புள்ளது. ‘நீண்டகால முதலீடானது நாம் முதலீட்டை அதிகரிக்க அதிகரிக்க எடை மெஷினைப் போல லாபத்தை அதிகரிக்கச் செய்யும்’ என்பது பென் கிரஹாமின் பொன்மொழி.

நம் நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி 1970-ம் ஆண்டி லிருந்து 2017-ம் ஆண்டு வரை ஒரே சீராக உயர்ந்து வந்துள்ளது. 1970-ம் ஆண்டில் நான்கு சதவிகிதமாக இருந்த ஜி.டி.பி வளர்ச்சி, 2017-ம் ஆண்டில் 6.8 சதவிகிதமாக உள்ளது. இடையில் 2010-ம் ஆண்டில் மட்டும் 7.5 சதவிகிதமாக இருந்தது. தனிநபர் வருமான வளர்ச்சியானது 1970-ல் 1.8 சதவிகிதமாகவும், 2017-ல் 5.5 சதவிகிதமாகவும் உள்ளது. 2010-ல் தனிநபர் வருமான வளர்ச்சி 5.8 சதவிகிதமாக இருந்தது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி அமலாக்கம் போன்றவற்றால் சற்றுப் பின்னடைவாகி இருந்தாலும்கூட இதிலிருந்து மீண்டுவரும். ஜி.டி.பி-யின் மூலம் கிடைக்கும் வருமானம் சிறிய அளவில் ஏற்ற இறக்கம் காணப் பட்டாலும் உயர்ந்துகொண்டேதான் செல்கிறது.

நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்.... பங்குச் சந்தை... முதலீட்டுத் தேர்வு... பாதுகாப்பு!
நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்.... பங்குச் சந்தை... முதலீட்டுத் தேர்வு... பாதுகாப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் நாட்டு மக்களின் பிறப்பு, இறப்பு, ஆண், பெண் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நல்ல அரசியல் சூழல் நிலவினால் அங்கே பொருளாதார வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும். நிறுவனங்களின் கட்டமைப்பு வளர்ச்சி, அவற்றால் ஏற்படும் உற்பத்திப் பெருக்கம். அதிக அளவில் முதலீடுகள் செய்யப்படுவது ஆகியவையும் முக்கியமான விஷயங்களாகும். மூலதன உற்பத்தி அதிக அளவில் இருப்பது, நகரமய மாக்கும் பணி அதிகரிப்பது போன்றவை ஒரு நாட்டின் பொருளாதார வளச்சியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

முதலீட்டாளர்களை இந்தியா ஈர்ப்பதற்கு சில முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. இந்தியப் பொருளாதாரமும், பங்குச் சந்தையும் மிகப் பெரியது. இந்தியச் சந்தையில் போடும் பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். நம் நாட்டு அரசியல், வலுவான மதச்சார்பற்ற தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. முதலீடு செய்வதற்கேற்ற நல்ல தொழில் வாய்ப்புகள் இங்கே அதிக அளவில் உள்ளன. தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் நல்லதொரு தொடக்கப் புள்ளியாக நம் நாடு உள்ளது.

இறுதியாக, ஒரு தனிநபர் முதலீட்டாளருக்குப் பணம் மற்றும் துணிவைவிடப் பொறுமைதான் மிகவும் முக்கியம். பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும் அதற்காகப் பதற்றப்படாமல் பொறுமை காத்திருந்தால் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம். அதேபோல, ஒருவருடைய புரஃபைலில் எப்போதும் ரிஸ்க் மிகுந்த மற்றும் ரிஸ்க் அல்லாத பங்குகள் இரண்டையும் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒன்று கைகொடுக்காமல் போனாலும் இன்னொன்று நமக்குக் கைகொடுக்கும்” என்றார்.

அடுத்ததாக, ‘மார்க்கெட் கட்டுக்கதைகள்’ என்ற தலைப்பில் பேசிய எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் தலைவர் ஸ்ரீனிவாசன், “பங்குச் சந்தை என்பது எளிதில் மாறக்கூடியது. அதனால் சரியான பிசினஸ் மற்றும் மேலாண்மையைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் தேவை.

‘‘பங்குச் சந்தையில் பல்வேறு கட்டுக் கதைகள் நிலவும். அவற்றையெல்லாம் நம்பக் கூடாது. அதிக ரிஸ்க் எடுத்தால்தான் அதிக லாபம் கிடைக்கும் என்பார்கள். அப்படியெல்லாம் எந்த லாஜிக்கும் கிடையாது. நீண்ட காலமாக குறைவான ரிஸ்க் எடுத்தால் குறைவான வருமானம்தான் கிடைக்கும் என்றும் சொல்வார்கள். அதுமாதிரி எந்தக் கோட்பாடும் இல்லை. பங்குச் சந்தையில் குறைவான ரிஸ்க் எடுத்தாலும் அதிக வருமானம் பெறமுடியும். அதற்கேற்ப நம்முடைய தேர்வும், காலச்சூழலும் இருக்க வேண்டும்.

எல்லோரும் முதலீடு செய்யும் பங்குகளில் நாமும் முதலீடு செய்வோம் என்ற போக்கு சரியானதல்ல. எத்தகைய முதலீடாக இருந்தாலும், நமக்கென ஓர் அணுகுமுறை இருக்கவேண்டும். அதன் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்த்து முதலீடு செய்ய வேண்டும்.

நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்.... பங்குச் சந்தை... முதலீட்டுத் தேர்வு... பாதுகாப்பு!

உலக அளவில் ஏதாவது பதற்றமான சூழல் ஏற்பட்டால் உடனே அனைவரும் தங்கள் வசமிருக்கும் பங்குகளை விற்கத் தொடங்குவார்கள். ஆனால், சில நாள்களிலேயே அந்தச் சூழல் மாறி, பங்குச் சந்தை மேலேறத் தொடங்கும். பங்குகளை அவசரப்பட்டு விற்றது தவறான முடிவாகிவிடும். பங்குச் சந்தையில் மற்றவர்களது கருத்துகளைக் கேட்டு முடிவெடுப்பது தவறு’’ என்றார் அவர்.

ஃபைனான்ஷியல் கான்க்ளேவில் இரண்டாம் நாளில் முதலாவதாகப் பேசினார் டாக்டர்      எஸ்.கார்த்திகேயன். ‘உங்கள் சேமிப்பு களைப் பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் பேசினார் அவர். 

‘‘இந்தியா வளர்ந்துவரும் நாடு என்பதால், எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என்பதை மறந்துவிடுங்கள். குறிப்பாக, கமாடிட்டி முதலீடுகளைப் பொறுத்தவரை, ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சீசன் இருக்கிறது. அதனைப் பொறுத்து முதலீடு செய்யவேண்டும். உலக அளவில் பொருளாதார மாற்றங்களையும், அரசியல் மாற்றங்களையும் கவனிக்கவேண்டும். சர்வதேச அளவிலான அரசியல் ஒப்பந்தங்கள்,  பொருளாதாரத் தடை போன்ற போர்கள் சண்டையின் போக்கையே மாற்றவல்லவை. அவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும். அதற்கு போதுமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் சேமிப்பை சிறந்த முதலீடாக மாற்ற முடியும்.

நம் நாட்டைப் பொறுத்தவரை, ‘டைம் பவுன்ட் இன்வெஸ்டிங்’தான் சிறந்தது. அதிக வருமானம் தருமென்ற குருட்டு நம்பிக்கை, ஆர்வத்தைத் தூண்டும். பலர் அந்த ஆர்வத்தின் காரணமாக கடன் வாங்கி முதலீடு செய்வார்கள். அவர்களின் கணக்குப்படி, கடன் வாங்கியதற்கான வட்டியை விட வருமானம் அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப்போனால் அது பேரிழப்பாக முடியும். எனவே, நமது சேமிப்பை மட்டுமே முதலீட்டுக்குப் பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.

அடுத்துப் பேசியவர்களின் கருத்துகள் அடுத்த வாரம்...

 - தெ.சு.கவுதமன்
 படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், சி.ரவிக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism