
மோட்டார், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி உள்ளிட்ட பொதுக் காப்பீட்டு பிரீமியக் கட்டணம் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து உயர்த்தப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியானது கண்டு பலரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
##~## |
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அண்மைக் காலமாகப் பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் தரும் இழப்பீட்டுத் தொகை கணிசமாக அதிகரிக்க, ஜி.ஐ.சி. தரவேண்டிய இழப்பீட்டின் தொகை கணிசமாக உயர்ந்திருக் கிறது. இதனைத் தொடர்ந்து, காப்பீட்டுத் திட்டங்களுக்கான பிரீமியத்தை அதிகரிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் சொல்ல, ஹெல்த் மற்றும் மோட்டார் பாலிசிகளின் பிரீமியத்தை உயர்த்தும் முடிவுக்கு வந்திருக்கின்றன இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்.
இதுபற்றி தனியார் பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் உயரதிகாரியுடன் பேசினோம்.
''ஐ.ஆர்.டி.ஏ. தரும் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2010-11-ல் மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் இழப்பீடு 103 சதவிகிதமாகவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் 100 சதவிகிதமாகவும் உள்ளது. இந்நிலையில் பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து லாபத்தில் இயங்க வேண்டும் எனில், பிரீமியத் தொகை அதிகரிக்கத்தான் வேண்டும். இதுகுறித்து ஐ.ஆர்.டி.ஏ.க்கு ஏற்கெனவே கோரிக்கை வைத்துள்ளோம். இப்போது மத்திய நிதி அமைச்சகமும் இதுபற்றி சொல்லியிருப்பதால் விரைவில் பிரீமியம் உயர வாய்ப்புள்ளது.
பிரீமியம் உயரும் பட்சத்தில், மோட்டார் பாலிசிகளில் தனி நபர்கள் பயன்படுத்தும் பைக், கார் போன்றவற்றுக்கான பிரீமியம் சுமார் 15-20 சதவிகிதமும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் சுமார் 10-15% அளவுக்கும் உயர வாய்ப்புள்ளது'' என்றார் அவர்.
கூடுதல் பிரீமியத்துக்கான பணத்தையும் ஒதுக்கி வைத்துக் கொள்வது நல்லது!
- சி.சரவணன்