Published:Updated:

டேர்ம் இன்ஷூரன்ஸ்: பத்திரம் இல்லாமல் இழப்பீடு கிடைக்குமா?

கேள்வி-பதில்

பிரீமியம் ஸ்டோரி
டேர்ம் இன்ஷூரன்ஸ்: பத்திரம் இல்லாமல் இழப்பீடு கிடைக்குமா?
டேர்ம் இன்ஷூரன்ஸ்: பத்திரம் இல்லாமல் இழப்பீடு கிடைக்குமா?

எனது கணவருக்கு வயது 60. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பென்ஷன் கிடையாது. நான்கு வருடங்களுக்குப் பிறகு பென்ஷன் வருவது போல தற்போது முதலீடு செய்ய முடியுமா? அதற்கான திட்டங்கள் இருக்கிறதா?

உஷா, சென்னை.45

ஆர்.செந்தில், நிதி ஆலோசகர்.

##~##
''அறுபது வயது வரை ஓய்வுக் காலத்துக்கு நிதி திட்டமிடாமல் இருந்தது சரியல்ல. தற்போதைய நிலையில் அதற்காக திட்டமிடும்போது, ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களே உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். ஒரே தடவை முதலீடு செய்வதாக இருந்தால் ஷார்ட் டேர்ம் டெப்ட் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம். மாதாமாதம் முதலீடு செய்வது என்றால் ஆர்.டி.யில் சேமித்து நான்கு வருடங்களுக்குப் பின்னர் அத்தொகையை ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு மாற்ற வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மன்த்லி இன்கம் பிளான் அல்லது உடனடி பென்ஷன் பிளான் (immediate annuity pension plan) திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். என்றாலும், நான்கு வருட காலத்தில் அதிக வருமானம் எதிர்பார்க்க முடியாது.''
டேர்ம் இன்ஷூரன்ஸ்: பத்திரம் இல்லாமல் இழப்பீடு கிடைக்குமா?

மைனராக இருந்தபோது வாங்கிய பான் கார்டில் எனது புகைப்படம் இடம் பெறவில்லை. இப்போது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய இந்த பான் கார்டை அப்படியே பயன்படுத்த முடியுமா? அல்லது போட்டோவை பான் கார்டில் சேர்த்து புதுப்பிக்க முடியுமா?

சதீஸ்குமார், வெள்ளக்கோவில்.

டேர்ம் இன்ஷூரன்ஸ்: பத்திரம் இல்லாமல் இழப்பீடு கிடைக்குமா?

ராஜன், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்.

''மைனராக இருந்தபோது வாங்கப்பட்ட பான் கார்டை வைத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியாது. பான் கார்டை புதுப்பித்துக் கொண்டால்தான் நீங்கள் முதலீடு செய்ய முடியும். பான் கார்டில் புகைப்படத்தைப் புதிதாகச் சேர்ப்பதற்கு பான் கரெக்ஷன் படிவம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தோடு முகவரிச் சான்று, அடையாளச் சான்று மற்றும் புகைப்படம் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பித்த 30 நாட்களி லிருந்து 45 நாட்களுக்குள் மாற்றம் செய்யப்பட்ட பான் கார்டு கிடைத்துவிடும்.''

தாத்தா வழி பாகப் பிரிவினையாக வந்த இடத்தில் என் அப்பா வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். நாங்கள் நான்கு வாரிசுகள் இருக்கையில், அந்த சொத்தின் மீதான முழு உரிமையும் ஒருவருக்கு மட்டுமே (தம்பி) சேரும் விதமாக உயில் எழுதி வைத்துள்ளார் என் அப்பா. அந்த சொத்தின் மீது மற்ற வாரிசுகள் உரிமை கோர முடியுமா?

ராமச்சந்திரன், மும்பை.

என்.ரமேஷ், வழக்கறிஞர்.

''தாத்தா வழி வந்த பூர்வீகச் சொத்தை உங்கள் தந்தையின் தனிப்பட்ட சொத்தாக கருத முடியாது. அது பொதுக் குடும்பச் சொத்தாகவே கருதப் படும். பொதுக் குடும்பச் சொத்தில் உங்கள் தந்தையார் வீடு கட்டியிருந்தாலும் அது பொதுக் குடும்பச் சொத்தில் செய்யப்பட்ட அபிவிருத்தியாக மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே, அபிவிருத்தி செய்த காரணத்துக் காகவே பொதுக் குடும்பச் சொத்தை உங்கள் தந்தையார் தனது விருப்பப்படி உயில் எழுதி வைக்க முடியாது. அப்படி எழுதப்பட்டிருந்தாலும் அந்த உயில் செல்லாது. தாத்தா வழி வந்த பூர்வீகச் சொத்தில் அனைத்து வாரிசுகளும் உரிமை கோர முடியும்.''

எஜுகாம்ப் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை 480 ரூபாய்க்கு வாங்கினேன். தற்போது 194 ரூபாயாக இருக்கிறது. இந்த பங்கை வைத்திருக்கலாமா?

மல்லிகா, நாகப்பட்டினம்.

பி.கோபாலகிருஷ்ணன், இண்டியா நிவேஸ் செக்யூரிட்டீஸ்.

''கடுமையான நஷ்டத்தைச் சந்தித்த பின்பும் இந்த பங்குகளை நீங்கள் வைத்து இருப்பதால் இன்னும் சில காலம் காத்திருக்கலாம். கடந்த பிப்ரவரியில் 262 ரூபாயிலிருந்த இந்த பங்கு தற்போது ரூபாய் 180 வரை இறங்கி நிலைகொண்டுள்ளது. கடந்த நான்கு வாரங்களாகப் பக்கவாட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. ரூபாய் 160 வரை ஸ்ட்ராங்க் சப்போர்ட் இருப்பதாகச் சொல்கிறது டெக்னிக்கல் சார்ட்டுகள். விலை 160-க்கும் கீழ் இறங்குமுகமாக இரண்டு வாரங்கள் தொடர்ந்தால் வெளியேறலாம். ரூ.220-க்கு மேலே போகும்பட்சத்தில் வாங்கி ஆவரேஜ் செய்யலாம். 260 ரூபாய் வரை ஏற வாய்ப்பு இருக்கிறது.''

டேர்ம் இன்ஷூரன்ஸ்: பத்திரம் இல்லாமல் இழப்பீடு கிடைக்குமா?

ரூபாய் பதினைந்து லட்சத்துக்கு எல்.ஐ.சி-யில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துள்ளேன். ஒருவருடம் ஆனபின்பும் அதற்குரிய பத்திரம் வந்து சேரவில்லை. முகவரிடம் கேட்டால் பிரீமியம் செலுத்திய ரசீது போதும் கிளைம் செய்து கொள்ளலாம் என்கிறார். இந்த ஆவணம் மட்டும் போதுமா? அந்த பத்திரத்தை வாங்குவதற்கான வழி என்ன?

வானதி, தஞ்சாவூர்.

எல்.ஐ.சி. தென் மண்டல அலுவலகம், தஞ்சாவூர்.

''பாலிசி விண்ணப்பித்த தேதி யிலிருந்து மூன்று மாதத்துக்குள் அதற்குரிய ஆவணங்கள் தங்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஒரு வருடம் ஆன பின்பும் கிடைக்கவில்லை என்பதால் சம்பந்தப்பட்ட கிளையில் கடிதம் மூலம் புகார் அளிக்கவும். பாலிசி தங்களுக்கு கிடைக்காதபட்சத்தில் நகல் பாலிசிக்கு விண்ணப்பித்தால் 30 நாட்களுக்குள் பாலிசியின் நகல் கிடைத்துவிடும். பாலிசி ஆவணங்கள் கைவசம் இருந்தால் மட்டுமே இழப்பீடு பெறுவதற்கு வசதியாக இருக்கும். பிரீமியம் கட்டிய ரசீதை மட்டும் வைத்துக் கொண்டு கிளைம் செய்ய முயற்சித்தால் அதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம். இது தொடர்பாக உங்களுக்கு சம்பந்தப்பட்ட கிளையில் சரியான பதில் கிடைக்கவில்லை எனில், கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

மேலாளர், சி.ஆர்.எம்.
எல்.ஐ.சி. மண்டல அலுவலகம்,
காந்திஜி சாலை, தஞ்சாவூர்- 1
தொலைபேசி: 04362-233678.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு