Published:Updated:

சரண்டர் பாலிசிகள்... மீண்டும் உயிர் தரலாம் !

சரண்டர் பாலிசிகள்... மீண்டும் உயிர் தரலாம் !

சரண்டர் பாலிசிகள்... மீண்டும் உயிர் தரலாம் !

சரண்டர் பாலிசிகள்... மீண்டும் உயிர் தரலாம் !

Published:Updated:
##~##

ஒருமுறை சரண்டர் செய்த இன்ஷூரன்ஸ் பாலிசியை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா? முடியுமே என்கிறது இந்தியாவின் முன்னணி பொதுத் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. எப்படி என்று கேட்கிறீர்களா?

பல பாலிசிதாரர்கள் ஆயுள் காப்பீடு பாலிசியை சரண்டர் செய்துவிட்டால், அத்துடன் அது முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். அது தவறு, சரண்டர் செய்து, பணம் வாங்கிய பாலிசிகளைகூட மீண்டும் உயிர்ப்பிக்க முடியும். எப்படி என்று கேட்கிறீர்களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் புதுப்பிப்பதற்கும் (Revival), உயிர்ப்பிப்பதற்கும்  (reinstatement) வித்தியாசம் இருக்கிறது. பாலிசியைப் புதுப்பித்தல் என்பது குறிப்பிட்ட காலத்துக்கு பிரீமியம் கட்டாமல் விடுபட்டுவிட்ட நிலையில், காலாவதியான பாலிசிக்கான பிரீமியத்தை அபராதத்துடன் கட்டி பாலிசியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது. ஆனால், பாலிசியை உயிர்ப்பிப்பது என்பது அந்த பாலிசியை சரண்டர் செய்துவிட்ட நிலையில் அதே பாலிசிக்கு மீண்டும் உயிர்த் தருவதாகும்.  

சில குறிப்பிட்ட சமயங்களில் பாலிசியை சரண்டர் செய்துவிட்டாலும், அதனை ரத்து செய்வது அவசியமாகிறது. அல்லது சரண்டர் என்பது தானாக ரத்தாகிவிடும். உதாரணத்துக்கு, ஒருவர், லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்துவிட்டார். ஆனால், பணம் அவருக்கு வந்து சேருவதற்குள் அவர் இறந்துவிட்டார் எனில், இதனை இறப்பு கோரிக்கையாக கணக்கில் எடுத்துக்கொண்டு முழுகவரேஜ் தொகையும் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.  

சரண்டர் பாலிசிகள்... மீண்டும் உயிர் தரலாம் !

சரண்டர் தொகையானது, காசோலை மூலம் பாலிசிதாரருக்கு அனுப்பப்பட்டு, அது அவர் கையில் கிடைக்கும்முன் அல்லது அந்த காசோலையைப் பணமாக்கும் முன் பாலிசிதாரர் இறந்துவிட்டால், அந்த காசோலையைப் பணமாக்காமல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு தெரிவிப்பது அவசியம். இதுபோன்ற தருணத்தில்  சரண்டர் செய்த பாலிசிக்கான கவரேஜ் தொகை முழுமையாக கிடைக்கும். இந்த காரணங்களுக்காக பாலிசியை சரண்டர் செய்பவரும், பாலிசியை சரண்டர் செய்யும் விவரத்தைக் குடும்பத்தினருக்கு தெரிவிப்பது நல்லது.    

ஒருவர் பாலிசியை சரண்டர் செய்து, பணமும் வாங்கிவிட்டார். இந்நிலையில், அவர் உயிருடன் இருக்கும்பட்சத்தில் அந்த பாலிசியை உயிர்ப்பிக்க முடியுமா?

''முடியும்..!'' என்கிறார், எல்.ஐ.சி. பிராந்திய மேலாளர் (சி.ஆர்.எம்.) வி.விஜயராகவன். எப்படி என்று அவரிடமே கேட்டோம். ''அவசர பணத் தேவை அல்லது விவரம் தெரியாமல் ஒருவர் பாலிசியை சரண்டர் செய்துவிட்டார். மீண்டும் அந்த பாலிசியைத் தொடர விரும்புகிறார் எனில் சரண்டர் தொகையை, அவர் பாலிசியை வைத்து அடமானக் கடனாக வாங்கியதாக இன்ஷூரன்ஸ்

சரண்டர் பாலிசிகள்... மீண்டும் உயிர் தரலாம் !

நிறுவனம் கணக்கில் எடுத்துக் கொள்ளும். வாங்கிய சரண்டர் தொகையை 10 சதவிகித வட்டியுடன் திரும்பக் கட்டினால் பாலிசியை உயிர்ப்பித்துவிடலாம். ஆனால், சரண்டர் செய்த ஆறு மாத காலத்துக்குள் இதை மேற்கொள்வது அவசியம்'' என்றார் அவர்.

பாலிசி சரண்டர் செய்தவரின் வயது 45 வயதுக்கு மேல் இருந்தால் மருத்துவச் சான்றிதழ் தரவேண்டும். சரண்டர் செய்த பாலிசிக்கான கவரேஜ் தொகை அதிகமாக இருக்கும்பட்சத்திலும் மருத்துவச் சான்றிதழ் தரவேண்டும். புது இன்ஷூரன்ஸ் பாலிசி பத்திரம், டூப்ளிகேட் பாலிசி பத்திரமாக விநியோகிக்கப்படும். இதற்கு சில நூறு ரூபாய் கட்டணம் உண்டு.

ஆனால், பாலிசியை சரண்டர் செய்த நிலையில், பாலிசிதாரர் இறந்தால் அதனை இழப்பீடாக கருதவேண்டும் என்றோ, சரண்டர் செய்து பணம் பெற்ற பாலிசியை உயிர்ப்பித்து தரவேண்டும் என்றோ எந்த பாலிசிதாரரும் இன்ஷூரன்ஸ் கம்பெனியை வற்புறுத்த முடியாது. மேலும், அதிக பிரீமியம் உள்ள எண்டோவ்மென்ட் பாலிசி மற்றும் மணி பேக் பாலிசியை மட்டுமே இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இப்படி உயிர்ப்பித்து தருகின்றன. மற்றபடி பென்ஷன் பாலிசிகள், பங்குச் சந்தை சார்ந்த யூலிப் பாலிசிகளில் இச்சலுகை இல்லை. தற்போதைய நிலையில், தனியார் நிறுவனங்கள், பெரும்பாலும் சரண்டர் செய்யப்பட்ட பாலிசிகளை உயிர்ப்பித்து தருவதில்லை.

- சி.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism