ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்த பிறகு மருத்துவமனையில் நாம் செய்யும் செலவு எல்லாவற்றுக்கும் க்ளைம் கிடைக்கும் என்று நினைக்கிறோம். இது தவறு. அனுமதிக்கப்பட்ட விஷயங்களுக்கு மட்டுமே ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் நமக்கு க்ளைம் கிடைக்கும் என்பதே உண்மை. ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் க்ளைம் பெறும்போது எதற்கெல்லாம் க்ளைம் கிடைக்காது என்று விளக்குகிறார், பஜாஜ் கேப்பிட்டல் இன்ஷூரன்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆர்.ரவி.

''மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதனால் ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கும், மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கும் மட்டுமே க்ளைம் கிடைக்கும். பல் சீரமைப்பு, பிளாஸ்டிக் சர்ஜரி, குழந்தை பிறப்பு, தடுப்பூசி போடுதல், கண்களுக்கு லென்ஸ் வாங்குதல் உள்ளிட்ட 20 வகையான செலவுகளுக்கு க்ளைம் கிடைக்காது.

மருத்துவமனையில் தங்கி இருக்கும்போது அவை நமக்கு சில கூடுதல் சேவைகளை அளிக்கும். அதாவது, நோயாளி மற்றும் அவருடன் தங்குபவர்களுக்கு உணவு, டவல், போர்வை போன்றவற்றை தரும். இப்படி கூடுதல் சேவையாக அளிக்கும் எந்த ஒன்றுக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியில் க்ளைம் பெற முடியாது'' என்று ஆரம்பித்தவர், மேலும் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதையும் எடுத்துச் சொன்னார்.

''சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று, அங்கு தங்கி சிகிச்சை எடுக்கும் அறையின் வாடகை. நாள் ஒன்றுக்கு பாலிசியின் கவரேஜ் தொகையில் 1%தான் அறை வாடகையாக க்ளைம் செய்ய முடியும். எனவே, அறை வாடகைக்காக நீங்கள் அதிகபட்சம் எவ்வளவு க்ளைம் செய்யலாம் என்பதை முன்கூட்டியே கவனிப்பது நல்லது.

உங்களால் க்ளைம் செய்ய முடிகிற தொகையைவிட கூடுதலாக கட்டணம் கொண்ட அறையை நீங்கள் தேர்வு செய்யும்போது உங்களுக்கான சிகிச்சை, மருத்துவருக்கான கட்டணமும் மாறுபடும் என்பதை மறந்துவிடக் கூடாது. உங்களுக்கான க்ளைம் தகுதி நாள் ஒன்றுக்கு ரூ.1,000-ஆக இருக்கும்போது, ரூ.2,000-த்தை க்ளைம் செய்யும்போது அறை வாடகையில் 50% கழித்துக்கொண்டு மீதமுள்ள தொகைதான் க்ளைமாக கிடைக்கும்.

இதேபோல்தான் இதர மருத்துவச் செலவு களான மருத்துவரின் கட்டணம், தனி செவிலியருக்கான செலவு, சிகிச்சைக்கான கட்டணம் என அனைத்தையும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் 50% கழித்துக்கொள்ளும். எனவே, மருத்துவமனையில் அறையைத் தேர்வு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

உங்களின் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் ரூ.1 லட்சம் எனில் உங்களின் அறை வாடகை ஆயிரம் ரூபாயாக இருக்கும். இந்த சமயத்தில் நீங்கள் 2 ஆயிரம் ரூபாய் வாடகை உள்ள அறையைத் தேர்ந்தெடுக்கும்போது உங்களின் மருத்துவ செலவுகளிலும் 50 சதவிகித தொகையை கழித்துக்கொள்வார்கள். அதேசமயத்தில் பாலிசி கவரேஜ் தொகை 2 லட்சம் ரூபாயாக இருந்தால், உங்களுக்கு அறை வாடகை 2 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அந்தத் தொகைக்கு தனி அறை எடுத்துக் கொண்டாலும் க்ளைம் தொகையில் கழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த கழிவு உங்களின் க்ளைம் தொகையில் 20 சதவிகிதம் வரை இருக்க வாய்ப்பு உண்டு. எனவே, முடிந்தவரை பகிர்வு அறைகளை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்.

மருத்துவமனையில் அனுமதிக்கும் போது வசூலிக்கப்படும் நுழைவு கட்டணம், மருத்துவனை தொலைபேசியைப் பயன்படுத்தினால் அதற்கெல்லாம் க்ளைம் கிடைக்காது. மேலும், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வாங்கும் மருந்துகள், கைஉறைகள், ஒரே ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் சிரிஞ்ச்கள் ஆகியவற்றுகான செலவுகளுக்கு க்ளைம் கிடைக்காது.

அவசர காலத்தில் நோயாளியை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸை பயன் படுத்தினால் அதற்கு க்ளைம் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான். நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே மிகவும் ஆபத்தான நிலையில்தான் இருந்தார் என மருத்துவர் அறிக்கையில் குறிப்பிட்டி ருந்தால் மட்டும்தான் இதற்கு க்ளைம் பெற முடியும்'' என்று முடித்தார்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் க்ளைம் செய்யும்போது இனி இந்த விஷயங்களையும் கவனியுங்களேன்!

- இரா.ரூபாவதி.