Published:Updated:

''பென்ஷன் திட்டங்களை யார் நிர்வகிப்பது?

புது சர்ச்சை ஆரம்பம்..!

''பென்ஷன் திட்டங்களை யார் நிர்வகிப்பது?

புது சர்ச்சை ஆரம்பம்..!

Published:Updated:
''பென்ஷன் திட்டங்களை யார் நிர்வகிப்பது?


யூலிப் பாலிசிகளை யார் நிர்வகிப்பது என்பதில் செபி மற்றும் ஐ.ஆர்.டி.ஏ. இடையே பெரும் சர்ச்சை உருவாகி, அண்மையில்தான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. இப்போது மீண்டும் ஐ.ஆர்.டி.ஏ. புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இம்முறை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்கிற 'ஓய்வூதிய நிதியம் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய’த்துடன் உருவாகி இருக்கிறது.

''பென்ஷன் திட்டங்களை யார் நிர்வகிப்பது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீண்ட நாட்களாக நிலுவை யிலிருந்த பி.எஃப்.ஆர்.டி.ஏ. மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பி.எஃப்.ஆர்.டி.ஏ., நாட்டிலுள்ள அனைத்து ஓய்வூதிய திட்டங்களும் தன் கட்டுப்பாட்டுக்கு கீழ் வரவேண்டும் என சொல்லியுள்ளது.

இதுகுறித்து பி.எஃப்.ஆர்.டி.ஏ. சேர்மனான யோகேஷ் அகர்வால் கூறும்போது,''புதிய நேரடி வரி விதிப்பு முறையில் (டி.டி.சி), பென்ஷன் திட்டங்களில் எந்த முதலீட்டுக்கெல்லாம் வரிச்சலுகை அளிக்கலாம் என்பதற்கான அங்கீ காரம் அளிக்கும் அதிகாரம் எங்கள் அமைப்புக்குத் தரப்பட்டிருக்கிறது. புதிய சட்டப்படி, அனைத்து பென்ஷன் திட்டங்களையும் கண்காணிப்பது எங்களின் உரிமையாகி விட்டது''  என்றார்.

இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை எடுத்துக் கொண்டால், யூலிப் பாலிசிகளுக்கு அடுத்தபடியாக அதிக நிதி நிர்வகிக்கப்பட்டு வருவது பென்ஷன் திட்டங்களில் தான். அந்த வகையில், 1.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட பென்ஷன் திட்டங்களை ஐ.ஆர்.டி.ஏ. நிர்வகித்து வருகிறது.

##~##
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சுமார் 940 கோடி ரூபாய்க்கான பென்ஷன் திட்டங்களை நிர்வகித்து வருகின்றன. இதை செபி கண்காணித்து வருகிறது.

பென்ஷன் திட்டங்கள் யார் கட்டுப்பாட்டில் வரும் என்பதில் செபிக்கும், பென்ஷன் அமைப்புக்கும் அதிக பிரச்னை வர வாய்ப்பு இல்லை என்கிறார்கள், விவரம் தெரிந்தவர்கள். காரணம், மியூச்சுவல் ஃபண்டுகளை எடுத்துக் கொண்டால், யூ.டி.ஐ. மற்றும் ஃப்ராங்ளின் டெம்பிள் மட்டுமே பென்ஷன் ஃபண்டுகளை வைத்திருக்கின்றன.

ஆனால், இன்ஷூரன்ஸ் கம்பெனிகளைப் பொறுத்தவரை யில் அனைத்து நிறுவனங்களும் பென்ஷன் திட்டங்களை வைத்திருக்கின்றன. அதனால் ஐ.ஆர்.டி.ஏ. அவ்வளவு சுலபமாக விட்டுக் கொடுக்காது என்கிறார்கள். இவ்விவகாரங்கள் குறித்து எல்.ஐ.சி. நிறுவனத்­­­­தின் முன்னாள் சேர்மன் ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தியை சந்தித்தோம்.

''பென்ஷன் திட்டங்களை யார் நிர்வகிப்பது?

''இந்திய நாடாளு மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இன்ஷூரன்ஸ் சட்டத்தின்படிதான் ஆயுள் காப்பீடு நிறுவனங்கள், பென்ஷன் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக் கின்றன. இன்ஷூரன்ஸ் திட்டத்திலும் ரிஸ்க் இருக்கிறது. பென்ஷன் திட்டத்திலும் ரிஸ்க் இருக்கிறது. அதாவது, இன்ஷூரன்ஸ் திட்டத்தில் ரிஸ்க் என்பது திடீர் மறைவாக இருக்கிறது. பென்ஷன் திட்டத்தில் ரிஸ்க் என்பது நீண்ட நாளைக்கு முதுமையோடு வாழ்வதாக இருக்கிறது. பென்ஷன் திட்டத்திலும் ரிஸ்க் இருக்கிறது என்பதால் அது ஐ.ஆர்.டி.ஏ. கட்டுப்பாட்டின் கீழ் வருவதுதான் சரியானதாக இருக்கும்'' என்றவர் தொடர்ந்து,

''பென்ஷன் அமைப்பு, 'நியூ பென்ஷன் ஸ்கீம்’ (என்.பி.எஸ்)-ஐ மட்டும் நிர்வகித்து வருவதுதான் சரியாக இருக்கும். தற்போது லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிர்வகித்து வரும் பென்ஷன் திட்டங்களை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களே தொடர்வதுதான் நல்லது. மேலும், நியூ பென்ஷன் ஸ்கீமில் பணம் திரட்டுவது, அதை நிர்வகிப்பது மட்டும்தான் பென்ஷன் அமைப்பின் பணியாக இருக்கிறது. கடைசியாக பென்ஷன் கொடுக்க, பென்ஷன் அமைப்பு திரட்டும் நிதியும் ஆயுள் காப்பீடு நிறுவனங்களுக்குதான் வர வேண்டி இருக்கிறது. அப்படி இருக்கும்போது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிர்வகித்து வரும் திட்டங்கள் எல்லாம் பென்ஷன் அமைப்பின் கீழ் வர வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. எந்த ஒரு திட்டத்துக்கும் ஒரு நெறிப்படுத்தும் அமைப்பு இருந்தாலே போதும். பல ரெகுலேட்டர்கள் இருந்தால் பிரச்னைதான்.'' என்றார்.  

பென்ஷன் திட்ட மோதல் குறித்து இதுவரை மத்திய நிதி அமைச்சர் எந்தக் கருத்தையும் சொல்லாமல் மௌனமாக இருக்கிறார்.

ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்காவது கொண்டாட்ட மாக இருக்கும். ஆனால், ரெகுலேட்டர்கள் ரெண்டு பட்டால் யாருக்குமே கொண்டாட்டமாக இல்லாமல் போய்விடும்!

- சி.சரவணன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism