. ''மெ.டிக்கிளைம் பாலிசி எடுத்திருக்கீங்களா?''- இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் பெரும்பாலானவர்கள், 'இல்லையே அது எதுக்கு?’ என்பார்கள்! சிலர் மட்டும், ''ஓ! இருக்கே... ஆபீஸ்-ல எடுத்திருக்காங்க... குரூப் பாலிசி!'' என்பார்கள். ஒன்றுமே எடுக்காமல் இருப்பதற்கு குரூப் இன்ஷூரன்ஸ் மூலம் எடுத்திருப்பது பரவாயில்லை என்றாலும், பலபேர்கள் தங்களுக்கு ஆபீசில் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் போதுமானதா என்று கொஞ்சம்கூட யோசித்துப் பார்த்திருக்க மாட்டார்கள்....
குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பொறுத்தவரை வழக்கமான பாலிசியை விட கூடுதல் சலுகைகள் பல இருக்கின்றன. உதாரணத்துக்கு, குரூப் பாலிசியில் 50 வயது வரைக்கும் மருத்துவ பரிசோதனை கிடையாது. மேலும், பாலிசி எடுத்த தினத்திலிருந்து செயல்பாட்டுக்கு வந்துவிடும். கிளைம் நடைமுறையும் எளிமையானதாக இருக்கும். இத்தகைய வசதிகள் தனியாக எடுக்கும்போது கிடைக்காது. என்றாலும்கூட, 'குரூப் மெடிக்கிளைம் பாலிசி மட்டுமே ஒருவருக்குப் போதுமானதல்ல’ என்று அடித்துச் சொல்கிறார்கள் காப்பீடு ஆலோசகர்கள்.

இது குறித்து காப்பீடு ஆலோசகரான க.நித்திய கல்யாணியிடம் கேட்டோம்...

''குரூப் பாலிசியைத் தவிர, கூடுதலாக தனி பாலிசியும் எடுக்க வேண்டும் என்று சொல்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, குரூப் இன்ஷூரன்ஸ¨க்கான பிரீமியத்தை அலுவலகமே கட்டும்போது, கவரேஜ் அளவை குறிப்பிட்ட எல்லைக்குள்தான் வைத்திருப்பார்கள். அதாவது ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்ற அளவில்தான் பெரும்பாலான அலுவலகங்கள் பாலிசி எடுத்திருப்பார்கள்.

ஆனால் இன்றைக்கு மருத்துவச் செலவு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. அத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அலுவலகம் எடுத்துக் கொடுத்திருக்கும் தொகை நிச்சயம் போதுமானதாக இருக்காது. அதனால்தான் கூடுதலாக தனியே ஒரு மெடிக்கிளைம் பாலிசி எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்'' என்றவர், இரண்டாவது காரணத்தை விளக்கிச் சொன்னார்.

''இன்றைய நவீன பணிச் சூழலில் ரிட்டையராகும் வரை ஒரே நிறுவனத்தில்தான் வேலை பார்ப்போம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மேலும் பணியாளர்களிடமும் அடிக்கடி இடம் மாறும் போக்கு அதிகரித்து வருகிறது. குரூப் பாலிசியைப் பொறுத்தவரை ஒருவர் தானாக பணி மாறும்போதோ அல்லது பணியிலிருந்து நிறுத்தப்படும்போதோ அல்லது விருப்ப ஓய்வின் மூலம் பணி விலகும் போதோ அல்லது பணி ஓய்வு பெறும்போதோ, கம்பெனி சார்பில் எடுக்கப்பட்டிருக்கும் குரூப் பாலிசி உடனடியாக செயல் இழந்துவிடும். அப்போது நமக்கென தனியாக ஒரு மெடிக்கிளைம் பாலிசி இருந்தால்தான் ஏதாவது சிக்கல் என்றால் கை கொடுக்கும். இப்படி தனியாக பாலிசி எடுப்பதால் கூடுதல் நன்மை ஒன்றும் இருக்கிறது.

பொதுவாக, மெடிக்கிளைம் பாலிசிகளில் ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும். மேலும், சில நோய்களுக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தகுதி வரும். குரூப் பாலிசியோடு, கூடுதலாக தனி பாலிசி ஒன்றும் எடுத்திருக்கும் பட்சத்தில், வேலை மாற்றம் அல்லது ஏற்கெனவே இருக்கும் நோய் மற்றும் குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சைக்கு சுலபமாக சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும்'' என்றார்.

எதற்கும் உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு எவ்வளவுக்கு பாலிசி எடுத்திருக்கிறார்கள், அது போதுமானதாக இருக்கிறதா என்பதை ஒருதடவை செக் பண்ணிக்கொள்ளுங்கள். போதுமானதாக இல்லாத பட்சத்தில் அதிக பிரீமியம் கட்ட முடியும் என்று நினைப்பவர்கள் குடும்பத்தினருக்கு தனித்தனியாகவும், குறைவான பிரீமியம் தேவை என்று நினைப்பவர்கள் ப்ளோட்டர் பாலிசியும் எடுத்துக் கொள்வது நல்லது.

- சி.சரவணன்

அனுபவம் ஆயிரம்

டி. ஸ்ரீனிவாசன்
ரிலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ்
கோல்ட் சேனல் உறுப்பினர்
வயது: 46
அனுபவம்: 4 ஆண்டுகள்
ஊர்: ஆத்தூர் (சேலம் மாவட்டம்)

''இன்ஷூரன்ஸ்ஸோட அருமை இழப்பீடு கிடைக்கிறப்போதான் குடும்பத்தினருக்கு தெரிய வருது. அதுவரைக்கும் அதை யாரும் பெருசா கண்டுக்கிடறதில்லை. என்கிட்ட வந்த ஒருத்தர், 'சார், என்னோட மகளுக்கு 19 வயசாகுது. 22-வது வயசுல அவளை கல்யாணம் கட்டிக் கொடுக்கணும். அதனால அதுக்கு பணம் வர்ற மாதிரி பாலிசி ஒண்ணு எடுத்துக் கொடுங்க’ன்னு சொன்னார். அவ்வளவு சீக்கிரத்துல ஓரளவுக்கு பணம் பெருகணும்ன்னா அவருக்கு யூலிப் பாலிசிதான் பெஸ்ட். அப்ப பங்குச் சந்தையும் நல்லா இருந்த நேரம். தொடர்ந்து நல்லா இருந்தா வருமானம் கொடுக்கும். சேஃப்டிக்காக கடைசி வருஷத்துல ஃபண்ட் ஆப்ஷனை ஈக்விட்டியிலிருந்து பேலன்ஸ் ஆப்ஷனுக்கு மாற்றிக்கிடலாம்னு சொன்னேன். சரினு ஒரே நேரத்துல லட்ச ரூபா பிரீமியம் கட்டினார். அதுக்கு ஐந்து லட்ச ரூபா லைஃப் கவரேஜ் இருந்துச்சு. பிரீமியம் கட்டி மூணே மாசத்துல எதிர்பாராம அவர் விபத்துல இறந்துட்டார். அவருடைய குடும்பத்துக்கு கிடைச்ச அஞ்சு லட்ச ரூபாயை வச்சு அவர் விரும்பின மாதிரியே அதுவும் ஆறு மாசத்துலயே அந்தப் பெண்ணுக்கு நல்லபடியா கல்யாணம் நடந்துச்சு. அன்னைக்கு அவர் அந்த இன்ஷூரன்ஸ் பாலிசி மட்டும் எடுக்கலைனா அந்தப் பெண்ணின் எதிர்காலமே கேள்விக் குறியாகியிருக்கும்.''

படம்: க.தனசேகரன்