Published:Updated:

இனி இன்ஷூரன்ஸுக்கும் டீமேட்!

இனி இன்ஷூரன்ஸுக்கும் டீமேட்!

இனி இன்ஷூரன்ஸுக்கும் டீமேட்!

இனி இன்ஷூரன்ஸுக்கும் டீமேட்!

Published:Updated:
இனி இன்ஷூரன்ஸுக்கும் டீமேட்!


இத்தனை நாளும் பங்குகளை வாங்கத்தானே டீமேட் கணக்கு வைத்திருந்தோம்? கூடிய விரைவில் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்க வேண்டும் என்றாலும் டீமேட் கணக்குத் தொடங்க வேண்டிய நிலை வரப் போகிறது. இதற்கான நடவடிக்கைகளை ஐ.ஆர்.டி.ஏ. தீவிரமாக எடுத்து வருகிறது.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளை டீமேட் வடிவத்தில் 'டெபாசிட் டரீஸ்’ எனப்படும்  சி.டி.எஸ்.எல். மற்றும் என்.எஸ்.டி.எல். நிறு வனங்கள் நிர்வகித்து வருகின்றன. இதேபோல் இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் டீமேட் வடிவத்தை நிர்வகிக்க ரெபாசிட்டரீஸ் (ஸிமீஜீஷீsவீtஷீக்ஷீவீமீs) என்பவர்களை ஐ.ஆர்.டி.ஏ. நியமிக்க இருக்கிறது. இவர்கள், ஐ.ஆர்.டி.ஏ.விடம் உரிமம் பெற்றவர்களாகவும் காப்பீடு நிறுவனங்களுடன் தொடர்பு உடையவர்களாகவும் இருப்பார்கள்.

இன்ஷூரன்ஸ் பாலிசிகள் டீமேட் வடிவத்தில் கொண்டு வருவதன் மூலம் பாலிசிதாரர் களுக்கும் காப்பீட்டு நிறுவனங் களுக்கும் பலவிதமான நன்மை கிடைக்க வாய்ப்புண்டு என்கி றார்கள் இந்தத் துறையில் உள்ள நிபுணர்கள்.

என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

தற்போது உள்ளதுபோல் அதிக செலவு வைக்கும் பிரத்யேக பாலிசி பத்திரங்கள் தேவையில்லை. அதிக செலவு செய்து அதை பாலிசிதாரர் களுக்கு அனுப்ப வேண்டிய வேலையும் இல்லை. இதனால் செலவு கணிசமாக குறையும். தவிர, ஒவ்வொரு பாலிசியை எடுக்கும் போதும் பாலிசிதாரர்கள் புதிதாக போட்டோ, வயதுக்கான ஆதாரம் போன்றவற்றை கொடுக்க வேண்டியதில்லை. அனைத்து பாலிசிதாரர்களின் விவரமும் ரெபாசிட்டரீஸ் வசம் இருக்கும் என்பதால், ஒருவர் எத்தனை பாலிசிகள் எடுத்திருக்கிறார், அவற்றின் நிலை என்ன என்பதை அவசர காலத்தில் எளிதில் அறிந்து கொள்ள முடியும். இதெல்லாம் பாலிசிதாரர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள்.

நிறுவனங்களைப் பொறுத்த வரை, ஒவ்வொரு பாலிசியை விநியோகிக்கும் போதும் பாலிசிதாரரிடம் போட்டோ, வயதுக்கான ஆதாரம் போன்ற வற்றைக் கேட்க வேண்டிய அவசியமில்லை. அதைவிட முக்கியமான விஷயம், போலி இன்ஷூரன்ஸ் பத்திரங்கள் உருவாவதற்கு வழியே இல்லை.

''ஐ.ஆர்.டி.ஏ.வின் இந்த புதிய முயற்சி வரவேற்கத்தக்கது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவை உயரும்.

செலவு குறையும் போது பிரீமியமும் குறைய வாய்ப்புண்டு'' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இனி இன்ஷூரன்ஸுக்கும் டீமேட்!

இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான டீமேட் கணக்கைத் தொடங்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, முகவரிக்கான ஆதாரத்தைக் கொடுத்தால் போதும். ரெபாசிட்டரீஸ் அமைப்பு, பாலிசிதாரர்கள் ஒவ்வொரு வருக்கும் பிரத்யேக எண்ணை வழங்க இருக்கிறது. ஒருவர் எடுத்துள்ள அனைத்து பாலிசிகளும் இந்த ஒரே எண்ணின் கீழ் கொண்டு வரப்படும்.

ஆயுள், ஹெல்த், மோட்டார், குரூப் பாலிசிகள் எல்லாம் இந்த எண்ணின் கீழ் அணி வகுத்து நிற்கும். இது தவிர, ஒரு பாலிசி தாரர் அதுவரை செய்துள்ள கிளைம் விவரமும் இடம் பெற்றிருக்கும். கூடுதலாக அவர் எந்த ஏஜென்டிடம் பாலிசி எடுத்திருக்கிறார்? நாமினி யார் என்கிற விவரமும் இருக்கும்.

ஆக, இந்த ஒரு டீமேட் நடைமுறைக்கு வந்துவிட்டால், பாலிசி எடுப்பதும் பணத்தை கிளைம் பண்ணுவதும் சொற்ப நிமிடங்களில் முடியும் விஷயமாகிவிடும். நல்ல விஷயம் சீக்கிரத்தில் நடக்கட்டுமே...!

- சி.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism