இன்ஷூரன்ஸ்

லிஸ்டில் இல்லாத மருத்துவமனையில் க்ளைம் பெறுவது எப்படி?

'எங்கிட்ட மெடிக்ளைம் இருந்தும் எந்தப் பிரயோஜனமும் இல்லை... ஒரு அவசரத்துக்கு வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற ஆஸ்பத்திரிக்குப் போனப்போ, 'இங்கே மெடிக்ளைம் கார்டு ஏத்துக்க மாட்டோம். வேணும்னா பில்லைக் கொடுத்து பிறகு க்ளைம் பண்ணிக்கோங்க'னு சொல்லிட்டாங்க. இன்ஷூரன்ஸ் கம்பெனியிலோ, 'இதுக்கு க்ளைம் தரமாட்டோம்... அதுக்குத் தரமாட்டோம்'னு சொல்லி பாதிக்கும் மேல் குறைச்சுட்டாங்க... கடைசியில் கார்டு இருந்தும் கைக்காசு போயிடுச்சு'' என்று அலுத்துக்கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

மெடிக்ளைமின் முக்கியமான வசதி கேஷ்லெஸ்... அதாவது, நம் பாலிசி தொகைக்கு உட்பட்ட அளவு வரை கையில் இருந்து ஒரு பைசாகூடச் செலவழிக்காமல் மருத்துவச் செலவுகளைச் சமாளித்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வருவதற்குப் பயன்படுவதுதான் கேஷ்லெஸ் வசதி. சில மருத்துவமனைகளில் இந்த வசதி இல்லாமல் இருக்கும். அதற்காக அவசரமான சூழ்நிலையில் கேஷ்லெஸ் வசதி இருக்கும் மருத்துவமனையைத் தேடி ஓடிக்கொண்டிருக்க முடியாது. அருகில் உள்ள மருத்துவமனையில் அட்மிட் ஆகி, பிறகு அந்த ரசீதுகளை இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு அனுப்பி க்ளைமைப் பெற்றுக் கொள்ளலாம்.

முதல் வகையைப் பற்றி சிக்கல் ஏதுமில்லை. நோயாளியை அனுமதிக்கும்போதே இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் அடையாள அட்டையைக் கொடுத்துவிட்டால், கேஷ்லெஸ் வசதிகளுக்கான எல்லா விஷயங்களையும் மருத்துவமனையில் இதற்கென இருக்கும் அலுவலரே கவனித்துக் கொள்வார். அப்படி இல்லாமல் நாம் முதலில் செலவு செய்துவிட்டு பிறகு க்ளைம் பெறும்போது சில அடிப்படையான விஷயங்களைக் கவனிக்கவேண்டும். அதுபற்றி ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஏரியா மேனேஜர் ராகவேந்திர ராவ் விரிவாகப் பேசினார்.

''பலர் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசியில் உள்ள விதிமுறைகளை ஒழுங்காகப் படித்துத் தெரிந்துகொள்வதில்லை. பாலிசியை வாங்கிய கையோடு அதை மறந்துவிடுகிறார்கள். அதில் என்னென்ன வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வதில்லை. அவசரமான மருத்துவத் தேவை வரும்போதுதான் அந்த பாலிசியைப் பற்றி நினைவு வரும். அப்போது என்ன வசதிகள் இருக்கின்றன என்பது தெரியாததால், சிக்கல் ஏற்படுகிறது...'' என்று பொதுவாக நம் மக்களின் மனநிலையைப் பற்றிச் சொன்னவர், 'கேஷ்லெஸ் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் என்ன செய்யவேண்டும்' என்பதைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.

''ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பெரும்பாலும் அனைத்து முக்கியமான மருத்துவமனைகளையும் தங்கள் நெட்வொர்க்கில் இணைத்துவிடும். எப்படியும் உங்களுக்கு அருகிலேயே அந்த மருத்துவமனை நிச்சயமாக இடம்பெற்றிருக்கும். பாலிசி எடுக்கும்போதே மருத்துவமனைகளின் பட்டியல் ஒன்றையும் கொடுப்பார்கள். அதைப் பார்த்து வைத்துக்கொண்டால், அவசரத் தேவைக்கு உடனே அந்த மருத்துவமனைக்குச் சென்றுவிட முடியும். அப்படி முடியாமல் போய், பட்டியலில் இல்லாத மருத்துவமனைக்குப் போயிருந்தாலும் க்ளைம் வாங்குவது ஒன்றும் சிரமமான விஷயமில்லை.

இதற்கான சூழல் ஏற்படும்போது சில அடிப்படையான விஷயங்களைச் செய்துகொள்ளவேண்டும். முதலாவது, மருத்துவமனையில் சேர்ந்தவுடன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கவேண்டும். அங்கிருந்து ஆட்கள் வந்து நீங்கள் மருத்துவமனையில் சேர்ந்திருக்கும் தகவலை உறுதிசெய்வார்கள். உங்களுக்கான சிகிச்சை முடிந்தபிறகு ஆஸ்பத்திரி செலவுக்கான மொத்தத் தொகையையும் செட்டில் செய்துவிட்டு, டிஸ்சார்ஜ் சம்மரியையும் வாங்கிக்கொள்ள வேண்டும்.

அதன்பிறகு, அந்த டிஸ்சார்ஜ் சம்மரி, பில்கள் (நோயாளியின் பெயர், மருத்துவர் பெயர் கட்டாயம் பில்லில் இருக்கவேண்டும்), மருத்துவர் கொடுத்த பிரிஸ்கிரிப்ஷன் சீட்டுகள், தவிர பிற பரிசோதனை ரிப்போர்ட்கள் போன்றவற்றை இணைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் கொடுத்தால் அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் உங்கள் பணம் செட்டில் செய்யப்படும். இதில், செலவுகளுக்கான வரம்புகள் குறித்து இன்ஷூரன்ஸ் நிறுவனம் என்ன விதிமுறைகளைச் சொல்லியிருக்கிறதோ... அது கடைபிடிக்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிப்பார்கள். அதன் அடிப்படையில்தான் க்ளைம் கிடைக்கும்'' என்றார்.

யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் டெபுடி ஜெனரல் மேனேஜரான இளங்கோ, க்ளைம் விஷயத்தில் தேர்ட் பார்ட்டி அட்மினிஸ்ட்ரேட்டர்களின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொன்னார்.

''வாடிக்கையாளருக்குச் சேவை செய்யத்தான் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இருக்கின்றன. முன்பெல்லாம் அனைத்துச் சேவைகளையும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்தான் செய்தன. அதன்பிறகு நிறுவனங்களின் சுமையைக் குறைப்பதற்காக ஐ.ஆர்.டி.ஏ. கொண்டுவந்ததுதான் தேர்ட் பார்ட்டி அட்மினிஸ்ட்ரேட்டர். ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் கம்பெனியும் தேர்ட் பார்ட்டி அட்மினிஸ்ட்ரேட்டரை நியமிக்கும். அவர்கள்தான் பாலிசிதாரர்களுக்கு அடையாள அட்டை கொடுப்பது, அவர்களை ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்து உறுதி செய்வது, மருத்துவமனை நிர்வாகத்துடன் பேசுவது, க்ளைம் பெற்றுத் தருவது என்று எல்லா விஷயங்களையும் செய்கிறார்கள்'' என்றார்.

பாலிசியைப் பயன்படுத்தும் சூழல் வந்தால் எதையெல்லாம் கவனிக்கவேண்டும் என்று ஒரு செக் லிஸ்ட் கொடுத்தார்கள் இருவரும்.

நீங்கள் சேருவது உள்நோயாளிகளைக் கவனிக்கும் மருத்துவமனையாக இருக்கவேண்டும். புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் க்ளினிக்காக இருந்தால் க்ளைம் கிடையாது.

குறைந்தபட்சம் 24 மணிநேரம் அட்மிட் ஆகியிருக்க வேண்டும். அதற்குக் குறைவான நேரம் மருத்துவமனையில் தங்கியிருந்தால் க்ளைம் கிடைக்காது.

உங்களுடைய நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளுக்கு க்ளைம் கிடையாது.

நோயாளிக்குக் கொடுக்கப்படும் உணவுக்கான பில்லை க்ளைம் செய்யலாம்.

பாலிசித் தொகை எவ்வளவு இருந்தாலும் ஆம்புலன்ஸ் மற்றும் ரூம் வாடகை போன்ற சில விஷயங்களுக்கு ஓர் எல்லை இருக்கும். அதைத் தாண்டினால் ஒதுக்கப்பட்ட தொகை மட்டுமே கிடைக்கும்.

அதேபோல கேட்டராக்ட் மற்றும் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை போன்ற சில நோய்களுக்கு ஒரு தொகை நிர்ணயம் செய்திருப்பார்கள். அதற்கு மேல் சென்றாலும் நிர்ணயம் செய்த தொகை மட்டும்தான் கிடைக்கும்.

பாலிசி எடுத்து 30 நாட்களுக்குள் எடுக்கப்படும் எந்த மருத்துவ சிகிச்சைக்கும் க்ளைம் கிடைக்காது, விபத்துக்கான சிகிச்சை இதற்கு விதிவிலக்கு.

பல் சிகிச்சை, அழகுக்காகச் செய்யப்படும் அறுவைசிகிச்சை, பிரசவம், மனநலம் சார்ந்த சிகிச்சைகள் போன்ற சில சிகிச்சைகளுக்கு க்ளைம் கிடையாது.

மருத்துவமனைச் செலவுகள் மட்டுமல்லாமல் இன்னும் சில சலுகைகளை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன. போஸ்ட் ட்ரீட்மென்ட் எனப்படும் டிஸ்சார்ஜ் ஆனபிறகு ஆகும் செலவுகளைக் கூட வாங்கிக்கொள்ளலாம். பொதுவாக 60 நாள் மருத்துவச் செலவுகள் கிடைக்கும். இருந்தாலும் இது ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மாறுபடலாம்.

பாலிசி எடுப்பதில் குறைவில்லை... ஆனால், அதில் தெளிவு வந்த அளவுக்கு, இன்னமும் அதைப் பயன்படுத்துவதில் போதிய அக்கறை ஏற்படவில்லை. விழிப்போடு இருந்தால் பாலிசி எடுப்பவருக்கு நஷ்டம் இல்லை!

ஐ.ஆர்.டி.ஏ-வின் புது உத்த்ரவு!

மருத்துவக் காப்பீடு சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் ஐ.ஆர்.டி.ஏ. சில புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. 2009, ஜூன் 1-ம் தேதி முதல் அமலாகும் இந்த உத்தரவுகள் நிச்சயமாக பாலிசிதாரர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அந்த உத்தரவில், 'ஏற்கெனவே க்ளைம் வாங்கியவர்களுக்கு பாலிசியைப் புதுப்பிக்க சில ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மறுக்கின்றன. ஆனால், அப்படிச் செய்யக்கூடாது. ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியும் மற்ற பாலிசிகளைப் போலத்தான்! அதனால், பாலிசியைப் புதுப்பிக்க மறுப்பு தெரிவிக்கக் கூடாது, மேலும் கடந்த ஆண்டைவிட பிரீமியத்தை உயர்த்தவேண்டுமென்றாலும் அதற்கான காரணத்தை பாலிசியைப் புதுப்பிக்கும் கடிதத்தில் தெரியப்படுத்தவேண்டும். தவறான வழியில் க்ளைம் பெறுதல் அல்லது வேறு மோசடி நடவடிக்கைகள் நடந்தால் மட்டுமே பாலிசியை ரத்து செய்யமுடியும்' என்று குறிப்பிட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் பாலிசியைப் புதுப்பிக்க 15 நாட்கள் வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. இந்தக் காலம் பாலிசியைப் புதுப்பிக்க மட்டும்தான். இந்த 15 நாட்களில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் க்ளைம் கிடைக்காது. ஆனால், காப்பீடு தொடர்வதற்கான சலுகைகளைப் பெறமுடியும். உதாரணத்துக்கு ஏற்கெனவே உள்ள நோய்களுக்கான கவரேஜ் தொடரும்.

- வா.கார்த்திகேயன்
படங்கள் பொன்.காசிராஜன், வீ.நாகமணி