Published:Updated:

குறைகிறது பிரீமியம்?

குறைகிறது பிரீமியம்?

குறைகிறது பிரீமியம்?

குறைகிறது பிரீமியம்?

Published:Updated:
இன்ஷூரன்ஸ்
குறைகிறது பிரீமியம்?
 

 

குறைகிறது பிரீமியம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறைகிறது பிரீமியம்?

க்கட்டான சூழ்நிலையில் பொருளாதார ரீதியாக முட்டுக் கொடுப்பதுதான் காப்பீடு! ஆனால், இன்று காப்பீட்டுத் துறையே கொஞ்சம் இக்கட்டான நிலையில் கலங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள்!

இப்போது இருக்கும் சூழ்நிலையின்படி, பொதுகாப்பீட்டு நிறுவனங்கள் அறிவிக்கும் பல பாலிசிக்களுக்கான பிரீமியங்களை நிர்ணயிக்கும் அதிகாரம் ஐ.ஆர்.டி.ஏ தொடர்புள்ள டி.ஏ.சி அமைப்புக்குத்தான் உள்ளது. சேவை நோக்கத்தில் இருந்து விலகி, லாப நோக்கத்தோடு மட்டும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் நடைமுறைப் படுத்தப்படும் திட்டம் இது.

வேகமாகச் செயல்பட்டு வரும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு இந்தக் கட்டுப்பாடு ஒரு கால் விலங்காகவே இருந்தது. அதனால், இந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்தவேண்டும், பாலிசிகளுக்கான பிரீமியத் தொகையை நாங்களே நிர்ணயித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துக்கொண்டிருந்தன.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் சில பாலிசிகளுக்கான பிரீமியம் தொடர்பான கட்டுப் பாடுகளை இந்த ஆண்டுடன் விலக்கிக் கொள்வதாகவும் இப்போது அறிவித்திருக்கும் ஐ.ஆர்.டி.ஏ., அதற்கு ஒரு நிபந்தனையை விதித்திருக்கிறது. ‘தங்கள் இஷ்டத்துக்கு பிரீமியத் தொகையை நிர்ணயிக்கும் உரிமை கிடைத்துவிட்டால், அதிகமாக பாலிசிகளை விற்பனை செய்யும் ஆசையில் குறைவான பிரீமியத் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்திப்பதோடு, அந்த நஷ்டம் பாலிசி தாரர்களுக்கும் பாதகமாகப் போய்விடும். அதனால், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பிரீமியத்தை நிர்ணயிக்கும் துறையும் விற்பனைத் துறையும் தனித்தனி பிரிவுகளாகச் செயல்படவேண்டும். விற்பனைத் துறையின் தலையீடு, பிரீமியத்தை நிர்ணயிக்கும் துறையில் இருக்கக் கூடாது’ என்பதே அந்த நிபந்தனை!

இதன்மூலம், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் லாபநோக்கத்தைக் கட்டுப்படுத்திவிடலாம் என்பது ஐ.ஆர்.டி.ஏ\வின் எண்ணம். தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அதிகரித்ததும் ‘மெடிக்கல் இன்ஷூரன்ஸ்’ மற்றும் ‘கீ மென் இன்ஷூரன்ஸ்’ போன்ற திட்டங்களில் நிறைய தவறுகள் நடந்ததாகவும், அவை கண்டுபிடிக்கப் பட்டு இப்போது தவறுகள் களையப்பட்ட தாகவும் சொல்கிறார்கள் இத்துறையினர். இவவகையில் ‘‘இன்று இந்தத் துறையில் அடுத்தகட்ட சீர்திருத்தங்கள் தொடங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது’’ என்று சொல்லியிருக் கிறார் ஐ.ஆர்.டி.ஏ-வின் சேர்மன் சி.எஸ்.ராவ்.

குறைகிறது பிரீமியம்?

பல தனியார் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இந்த நிபந்தனைக்குச் சம்மதம் தெரிவித்திருக்கின்றன. ஆனால், இப்படி தனித்தனி துறைகளாகப் பிரிப்பதால், தங்களுடைய பிரமோஷன் போன்ற விஷயங்கள் பாதிக்கப் படும் என்ற காரணத்தால் பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் இருப்பவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்த நிபந்தனையைச் செயல்படுத்துவது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது குறித்து இன்ஷூரன்ஸ் துறையின் பல மட்டங்களில் இருப்பவர்களுடன் பேசினோம்.

‘‘இந்த நிபந்தனையை பெரிய அஸ்திரமாக நினைத்து ஐ.ஆர்.டி.ஏ விதித்திருக்கிறது. விற்பனைப் பிரிவுக்கும் பிரீமியம் நிர்ணயிக்கும் பிரிவுக்கும் தொடர்பே இருக்கக்கூடாது என்ற அந்த நிபந்தனை தனியார்த்துறை நிறுவனங்களுக்குப் பொருந்தவே பொருந்தாது. ஏனென்றால், தனியார்த்துறை நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் எல்லாத் துறைகளின் மீதும் ஆளுமை செலுத்துபவராக இருப்பார். விற்பனை பற்றி அவருக்குக் கிடைக்கும் ரிப்போர்ட்டின் அடிப்படையில் பிரீமியங்களை இந்தத் தொகைக்கு நிர்ணயம் செய்யும் படி இந்தத் துறையை அவர் நிர்ப்பந்திக்க முடியுமே... தனியார் துறையினருக்கு விற்பனைதானே முக்கியம்’’ என்றார் தனியார்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர்.

இன்னொருபக்கம் இந்த நிபந்தனையே தேவையில்லாத விஷயம் என்றும் பேச்சு கிளம்பியிருக்கிறது. பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் இதுபற்றிப் பேசும்போது, ‘‘இந்த சுய நிர்ணய முறையால் நிஜமான சேவை நோக்கத்தோடு செயல்படும் எங்களைப் போன்ற இன்ஷூரன்ஸ் நிறுவனங்களால் மற்றவர்களோடு போட்டி போடமுடியாத நிலை உருவாகிவிடும். ஐ.ஆர்.டி.ஏ விதிக்கும் நிபந்தனையை ஏற்றுக்கொள்வதாகச் சொல்லும் நிறுவனங்கள், ‘எங்கள் பிரீமிய நிர்ணயத்துறை தனியாகச் செயல்பட்டு அறிவிக்கும் பிரீமியத் தொகை இது’ என்று ஒரு குறைவான தொகையைச் சொல்லும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் இன்ஷூரன்ஸ் துறையில் எழும் போட்டியில் நாங்கள் பின்தங்கி விடுவோம். அதனால், இந்த நிபந்தனையை ஐ.ஆர்.டி.ஏ மறு பரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.

இப்படியரு விவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே ஐ.ஆர்.டி.ஏ. கட்டுப்பாடற்ற பிரீமியத்துக்குள் செல்வதற் கான கால அட்டவணையை அறிவித்துவிட்டது. எனவே, அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் இதற்குத் தயாராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

எதற்கெல்லாம் பிரீமியக் கட்டுப்பாடு உண்டு?

ன்றைய நிலையில் ஐ.ஆர்.டி.ஏ சிலவகை இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு ‘இவ்வளவுதான் பிரீமியம் வசூலிக்கலாம்’ என்பதை ஒரு தனி கமிட்டி (டி.ஏ.சி - டாரிஃப் அட்வைசரி கமிட்டி) அமைத்து நிர்ணயித்து அறிவிக்கிறது. இந்தவகை திட்டங்களை ‘டாரிஃப் திட்டங்கள்’ அல்லது கட்டுப்பாடுள்ள திட்டங்கள் என்கிறார்கள். இவைதவிர, மற்ற பல திட்டங்களுக்கு ‘எவ்வளவு பிரீமியம் நிர்ணயிக்கலாம்?’ என்பதை இப்போதும் கூட இன்ஷூரன்ஸ் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள அனுமதி பெற்றுள்ளன. இந்தத் திட்டங்களை ‘நான் டாரிஃப்’ அல்லது ‘டீ டாரிஃப்டு’ திட்டங்கள் என்றும் தமிழில் ‘கட்டுப்பாடற்ற திட்டங்கள்’ என்றும் சொல்கிறார்கள்.

இப்போது கட்டுப்பாடுள்ள திட்டங்கள் பட்டியலில் உள்ளவை - வாகனக் காப்பீடு, தீ விபத்து காப்பீடு, இயந்திரங்களுக்கான காப்பீடு, பணியாளர்களுக்கான விபத்து நஷ்ட ஈடு தரும் காப்பீடு, தொழிற்சாலைகளில் எல்லாவகை ஆபத்துகளுக்குமான பொதுவான காப்பீடு (ஐ.ஏ.ஆர் - இண்டஸ்ட்ரியல் ஆல் ரிஸ்க்), பெட்ரோ கெமிக்கல் தொழில்களுக்கான காப்பீடு போன்றவை.

கட்டுப்பாடற்ற திட்டங்கள் பட்டியல் கொஞ்சம் நீளமானது. மருத்துவக் காப்பீடு, களவுக்கான காப்பீடு, பேக்கேஜ் காப்பீடு, பொறுப்புக்கான காப்பீடு... இப்படி நீளும் இந்த பட்டியலில், மேலே கண்ட பட்டியலில் அடங்காத மற்ற அனைத்து காப்பீடு வகைகளும் இடம் பெறுகிறது.

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism