Published:Updated:

காப்பீட்டில் பிரச்னையா..? கவலை வேண்டாம்!

காப்பீட்டில் பிரச்னையா..? கவலை வேண்டாம்!

காப்பீட்டில் பிரச்னையா..? கவலை வேண்டாம்!

காப்பீட்டில் பிரச்னையா..? கவலை வேண்டாம்!

Published:Updated:
இன்ஷூரன்ஸ்
காப்பீட்டில் பிரச்னையா..? கவலை வேண்டாம்!
 

 

காப்பீட்டில் பிரச்னையா..? கவலை வேண்டாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காப்பீட்டில் பிரச்னையா..? கவலை வேண்டாம்!

பத்தான நேரத்துக்கு உதவுவதற்குத்தான் காப்பீடு செய்கிறோம். ஆனால், முதிர்வுக்குப் பிறகும் வாங்கிக் கொள்ளப்படாமல் இருக்கும் காப்பீட்டுத் தொகையே கோடிக்கணக்கில் இருக்கிறது என்று சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். அதேபோல, பாலிசி காலம் முடிந்த பிறகும் முதிர்வுத் தொகை கிடைக்கவில்லை என்ற புகார்களோடு அலையும் பாலிசிதாரர்கள் இன்னொருபக்கம் இருக்கிறார்கள். இப்படி இரண்டு தரப்பு பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்காக ஓர் அமைப்பே இருக்கிறது, அதன் பெயர் ‘இன்ஷூரன்ஸ் ஓம்பட்ஸ்மேன்’!

இன்ஷூரன்ஸ் செய்தவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், பஞ்சாயத்துகளை நிவர்த்தி செய்வதற்காக ஐ.ஆர்.டி.ஏ\வின் கீழ் செயல்படும் வகையில் அமைக்கப்பட்ட தீர்வாணையம் இது. மத்திய அரசு நியமிக்கும் ஒருவரே இந்த அமைப்பின் தலைவர். அவருக்குத்தான் ஓம்பட்ஸ்மேன் என்று பெயர். அவருக்குக் கீழ் இன்ஷூரன்ஸ் துறையில் அனுபவம் கொண்டவர்கள் ஒரு குழுவாக இருப்பார்கள். இவர்களுடன் ஆலோசித்து ஓம்பட்ஸ்மேன் எடுக்கும் முடிவே இறுதியானது.

‘‘சமீபகாலமாக, பாலிசிதாரர்கள் என்னென்ன மாதிரியான பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள்..?’’ என்ற கேள்வியோடு சென்னையில் உள்ள இன்ஷூரன்ஸ் ஓம்பட்ஸ்மேன் அலுவலகம் சென்றோம்.

காப்பீட்டில் பிரச்னையா..? கவலை வேண்டாம்!

இந்த அமைப்பின் செயலாளரான சௌந்தரராஜன் இதுபற்றி விரிவாகவே பேசினார்.

‘‘பாலிசிதாரர், நிறுவனத்தார் இரண்டு பேருமே பிரச்னை செய்துகொள்ளாமல் சுமுகமாகத் தீர்வு காணும் முயற்சியைத்தான் நாங்கள் மேற்கொள்கிறோம். அதனால் பாலிசிதாரர்கள் எல்லாவிதமான சிக்கல் களுக்கும் தீர்வுதேடி எங்களிடம் வருவார்கள். அதை நாங்கள் தீர விசாரித்து ஆவன செய்கிறோம்’’ என்றார்.

பெரும்பாலும் க்ளைம் மறுக்கப்படுவது தொடர்பான பிரச்னைகள்தான் ஓம்பட்ஸ்மேனைத் தேடி வருகிறதாம்.

இதற்கு சௌந்தரராஜன், ‘‘க்ளைம் மறுக்கப்படுவதற்கான காரணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தெளிவாகச் சொல்லவேண்டும்.அப்படி இல்லையென்றால் நாங்கள் உரிய க்ளைம் தொகையை வசூலித்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம். அதேசமயம் பாலிசி எடுப்பவர்களும் தங்களைப் பற்றிய உண்மையான தகவல்களைக் கொடுக்க வேண்டும். பெரும்பாலும் பாலிசிதாரர்கள் மீது கருணையோடுதான் நடந்துகொள்கிறோம்.

பாலிசிதாரர்கள் மீது சிறுசிறு தவறுகள் இருந்தாலும் பல சந்தர்ப்பங்களில் அதை மன்னித்து, அவர்களுக்கு உரிய பாலிசி தொகை கிடைக்க ஏற்பாடு செய்து விடுவோம். பாடுபட்டுக் கட்டிய பணம் வீணாகக் கூடாதல்லவா!’’ என்றார்.

‘‘பொதுவாக, பாலிசிதாரர்கள் என்ன மாதிரியான புகார்களோடு வருகிறார்கள்?’’ என்று கேட்டபோது,

‘‘ஆயுள் காப்பீடு மற்றும் பொதுக்காப்பீட்டுத் துறைகளில் எந்த மாதிரியான பிரச்னைகள் என்றாலும் எங்களைத் தேடி வரலாம். எங்களிடம் வருபவர்கள் பெரும்பாலும் டாகுமென்ட் கிடைக்காத பிரச்னை, க்ளைம் தொகை முழுவதுமோ பாதியாகவோ மறுக்கப் படுவது போன்ற பிரச்னைகளுக்காக வருகிறார்கள். சட்டப்படியான பிரச்னைகள் எல்லாவற்றையும் நாங்கள் தீர்த்து வைக்கிறோம்’’ என்றார்.

இந்த ஓம்பட்ஸ்மேன் அமைப்பின் சிறப்பே இலவசமாக வழங்கப்படும் சேவை என்பதுதான்!

‘‘அப்படியானால் தினம் தினம் புகார்கள் குவிந்தவண்ணம் இருக்குமே... எப்படி சமாளிக்கிறீர்கள்?’’ என்றதற்கு,

‘‘எடுத்த எடுப்பிலேயே எங்களைத் தேடிவர முடியாது. பாலிசிதாரருக்கு பிரச்னை என்றால் முதலில் அந்த நிறுவனத்திலேயே புகார் தெரிவிக்கவேண்டும். ஒருமாதம் வரை அவர்கள் பதில் கொடுக்காவிட்டாலோ, அல்லது அவர்களுடைய பதிலில் திருப்தி கிடைக்காவிட்டாலோ எங்களை அணுகலாம்.

காப்பீட்டில் பிரச்னையா..? கவலை வேண்டாம்!

நீதிமன்றத்திலோ அல்லது நுகர்வோர் அமைப்பிலோ பாலிசிதாரர் வழக்கு தொடர்ந்திருந்தால் நாங்கள் எடுத்துக்கொள்ளமாட்டோம். அதேபோல நிறுவனத்துக்கான க்ளைம்கள், பிஸினஸ் தொடர்பான க்ளைம்கள் பிரச்னைகளை எங்கள் அமைப்பு தீர்த்து வைக்காது. பாலிசியில் திருத்தம், சட்டத் திருத்தம், தவறான விளம்பரம் மற்றும் திட்டங்களில் மேம்பாடு போன்றவற்றை ஐ.ஆர்.டி.ஏ கவனித்துக்கொள்கிறது’’ என்றார்.

‘‘பாலிசிதாரர்களுக்கு நன்மை தருவதாகவே இந்த அமைப்பு இருந்தால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்புத் தருவார்கள்?’’ என்று கேட்டதற்கு, ‘‘அத்தனை நிறுவனங்களுமே ஓம்பட்ஸ் மேனின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதுதான்’’ என்று ஒரே வரியில் அழுத்தமாகச் சொன்னவர், ஒருமுறை இன்ஷூரன்ஸ் தொகை கிடைக்கவில்லை என்ற புகாருடன் ஒரு குடும்பம் எங்களிடம் வந்தது. இன்ஷூரன்ஸ் செய்யப்பட்ட நபர் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார். பாலிசி எடுக்கும்போதே அந்த நோயின் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தாலும் பாலிசியில் அதுபற்றி எந்தக் குறிப்பையும் கொடுக்கவில்லை. அதனால், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை ஏமாற்றிய குற்றத்துக்காக கட்டிய பாலிசி தொகையைக் கூடக் கொடுக்கவிடாமல் நிறுத்தி விட்டோம். ‘பாலிசி எடுக்கும்போது, உண்மையான தகவல் களைக் கொடுங்கள். தேவைப் பட்டால் மருத்துவ பரிசோதனைகூட செய்து கொள்ளுங்கள். இன்ஷூரன்ஸ் துறையை ஏமாற்ற நினைக்காதீர்கள்’ என்று எங்களைத் தேடி வருபவர்களிடம் சொல்கிறோம்’’ என்றார் சௌந்தரராஜன்.

அவரே தொடர்ந்து, ‘‘இப்படி நாங்கள் இன்ஷூரன்ஸ் நிறுவனத்து பக்கம் நின்றதும் உண்டு. செகண்ட் ஹேண்ட் கார் வாங்கிய ஒருவர் விபத்தைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது காரின் ஆர்.சி புத்தகத்தை எல்லாம் தன் பெயரில் மாற்றியிருந்த அந்த நபர் இன்ஷூரன்ஸை தன் பெயருக்கு மாற்றவில்லை. வெறும் ஐம்பது ரூபாய் செலவில் முடிய வேண்டிய விஷயம் அது. அதைச் செய்யாமல் விட்டுவிட்டார். விளைவு, விபத்துக்கான இன்ஷூரன்ஸ் அவருக்குக் கிடைக்கவில்லை. இந்த விஷயத்தில் நாங்கள் நிறுவனத்தின் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து பாலிசிதாரரின் வாதத்தை அனுமதிக்கவில்லை!’’ என்றார்.

ந்த அமைப்பு 1999 ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3,000 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, 2.69 கோடி ரூபாய் செட்டில் செய்யப்பட்டிருக்கிறது. அதுவே, 2005-06 ஆண்டில் மட்டும் 1,024 வழக்குகள் நடத்தப்பட்டு 1.35 கோடி ரூபாய்வரை பாலிசிதாரர்களுக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து வாங்கிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் ஆயுள் காப்பீடு புகார்கள் 45% தானாம். மீதி எல்லாம் பொதுக் காப்பீடு தொடர்பான புகார்கள்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism