Published:Updated:

போனஸ் பலவிதம்!

இன்ஷூரன்ஸ் பாலிசி:

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், பாலிசிதாரர்களை கவர்ந்திழுக்கவே போனஸை பயன்படுத்தி வருகின்றன.

##~##

போனஸ் என்ற  வார்த்தையைக் கேட்டவுடன் நமக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. எதிர்பார்த்ததைவிட அது கூடுதலாக கிடைக்கும்போது நம் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. போனஸ் என்பது அடிப்படை தொகையுடன் கூடுதலாக கிடைக்கும் ஒரு விருது எனலாம். இன்ஷூரன்ஸ் துறையில் பாலிசிதாரர்களுக்கு போனஸ் என்கிற கான்செப்ட்டை மிகவும் பயனுள்ளதாக பயன்படுத்தி வருகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்ஷூரன்ஸ் துறையில் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு மட்டும்தான் போனஸ் தரப்படுகிறது. வருடத்துக்கு ஒருமுறை போனஸ் தொகை கணக்கிடப்படும். ஆனால், இது உடனடியாக கிடைக்காது. மொத்தமாகச் சேரும் போனஸ், பாலிசி முதிர்வின்போது முதிர்வுத் தொகையுடன் பாலிசிதாரருக்கு அல்லது பாலிசிதாரர் இறந்துவிடும்பட்சத்தில் நாமினிக்கு கவரேஜ் தொகையுடன் கிடைக்கும்.

இன்ஷூரன்ஸ் பாலிசியில் போனஸ் எப்படி கணக்கிடப்படுகிறது, அதனுடைய முறைகள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

தனிநபர் மற்றும் அவரது குடும்பத்தின் ரிஸ்கை குறைப்பதற்காகவே இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பலரும் எடுக்கிறார்கள். இதில் பாலிசிதாரர்கள் செலுத்தும் ப்ரீமியம் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் முதலீடு செய்து வருமானம் ஈட்டுகின்றன. இந்த லாபத்திலிருந்துதான் குறிப்பிட்ட சதவிகிதம் போனஸாகத் தரப்படுகிறது.

போனஸ் பலவிதம்!

துரதிருஷ்டமாக இந்தியாவைப் பொறுத்தவரையில், இன்ஷூரன்ஸ் பாலிசியை வரிச் சேமிப்புக்காக எடுக்கப்படும் ஒரு திட்டமாகவே பலரும் கருதுகிறார்கள். இன்ஷூரன்ஸ் என்பதை சொத்து முதலீடாக பலரும் உணர மறுக்கிறார்கள். போனஸ் என்பது பெரும்பாலும் பாரம்பரிய இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் கிடைக்கும் சலுகை. ஆனால், தற்போது  வரும் புதுமையான பாலிசிகளிலும் இந்த போனஸ் வழங்கப்படுகிறது. உதாரணமாக, யூலிப் பாலிசிகளில் எல்லாம் இந்த போனஸை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தருகின்றன.

மேலும், இந்தவகை யூலிப் பாலிசி களில் இன்ஷூரன்ஸ் மற்றும் முதலீடு என்கிற இரட்டை பலன் கிடைக்கிறது. பாலிசிதாரர் செலுத்தும் ப்ரீமிய தொகை மொத்தமாக தொகுக்கப்பட்டு, அரசுக் கடன் பத்திரங்கள், கடன் சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்யப்பட்டு வருமானம் ஈட்டப்படுகிறது. பொதுவாக, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட திட்டங்களில் இப்படி முதலீடு செய்து வருகின்றன.  

பெரும்பாலான, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், குறிப்பிட்ட பாலிசிகளில் பாலிசிதாரர்களை கவர்ந்திழுக்க போனஸை பயன்படுத்தி வருகின்றன. எனவே, பாலிசிகளையும் அவை வழங்கும் போனஸையும் ஒப்பிட்டு, ஒருவரின் அனைத்துத் தேவைகளையும் அந்த பாலிசி நிறைவு செய்கிறதா என்பதைக் கவனிப்பது மிகமிக அவசியம்.   இன்ஷூரன்ஸ் நிறுவனங் களால் வழங்கப்படும் சில போனஸ் வகைகளை கீழே தந்துள்ளேன்.

போனஸ் பலவிதம்!
போனஸ் பலவிதம்!

எளிய வகை போனஸ்! (Simple reversionary bonus)

அனைத்துவகையான பாரம்பரிய இன்ஷூரன்ஸ் ப்ளான்களிலும் இந்த எளிய போனஸ் வழங்கப்படும். இந்தவகை பாலிசிகளில் போனஸ் என்பது வருடத்துக்கு ஒருமுறை கணக்கிடப்படும். கவரேஜ் தொகைக்கு மட்டுமே போனஸ் கணக்கிடப்படும். மேலும், இந்த போனஸ், பாலிசி முதிர்வடையும்போது அல்லது க்ளைம் செய்யும்போது கிடைக்கும்.

போனஸ் பலவிதம்!

கூட்டு போனஸ்! (Compound reversionary bonus)

எளியவகை போனஸ் போலவேதான், இந்தக் கூட்டு போனஸும். இந்த இரண்டு போனஸ் களுக்கும் இடையே ஒரு சிறிய வித்தியாசம்தான் உள்ளது. ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் போனஸ் தொகை, கவரேஜ் தொகையுடன் சேர்க்கப்பட்டு அந்தத் தொகைக்கு போனஸ் கணக்கிடப்படும். இதன்மூலம் கூட்டு விகித வருமானத்தை அடையலாம்.  

போனஸ் பலவிதம்!

இறுதி போனஸ்! (Terminal bonus)

இறுதி போனஸ் வழங்க சில கட்டுப்பாடுகளை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வைத்துள்ளன. அதாவது, குறிப்பிட்ட வருடங்கள் அந்த பாலிசிக்கான ப்ரீமியத்தைத் தொடர்ந்து செலுத்தியிருக்க வேண்டும். மேலும், இந்த வகையான போனஸை இன்ஷூரன்ஸ் நிறுவனம் கட்டாயம் கொடுக்கும் என்பதற்கான எந்தவிதமான உறுதியும் கிடையாது. இதை தராமல் இருப்பதற்கான அதிகாரம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு உண்டு.

போனஸ் பலவிதம்!

இடைக்கால போனஸ்!

வழக்கமாக, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வருடத்துக்கு ஒருமுறைதான் போனஸ் அறிவிக்கும். ஆனால், இந்த இடைக்கால போனஸ் என்பது இரண்டு வருடாந்திர போனஸ் அறிவிப்புகளுக்கு இடையில்  முதிர்வடையும் பாலிசி அல்லது பாலிசிதாரரின் இறப்பினால் ஏற்படும் க்ளைம்களுக்கு வழங்கப்படும்.  இந்த இடைக்கால போனஸ் ப்ரோரேட்டா அடிப்படையில் தரப்படும்.  

போனஸ் பலவிதம்!

ரொக்க போனஸ்!

ரொக்க போனஸானது பாலிசிதாரர்களுக்கு  போனஸ் தொகையை ரொக்கமாக வருடா வருடம் தருவது. இந்த போனஸ் வருடத்தின் முடிவில் பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படும்.  

இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் கிடைக்கும் போனஸ் தொகை பற்றி உங்களுக்கு இப்போது ஒரு தெளிவு பிறந்திருக்கும் இல்லையா?

தொகுப்பு: இரா.ரூபாவதி.