ஒரு நிறுவனத்தின் மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவர் திடீரென இறந்துபோனால், அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல, அவர் நடத்தும் நிறுவனமும் பொருளாதார ரீதியில் பாதிப்படையும். அவர் ஆயுள் காப்பீடு எடுத்திருந்தால், அவரது குடும்பம் பொருளாதாரப் பாதிப்பில் சிக்காமல் தப்பிக்கும். அதுமாதிரி அவர் சார்ந்திருக்கிற நிறுவனமும் பொருளாதாரப் பாதிப்பில் சிக்காமல் இருக்க, ஏதாவது ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறீர்களா?

நீங்கள் நினைக்கிற மாதிரியே ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி இருக்கவே இருக்கிறது. அதன் பெயர்தான் 'கீமேன் இன்ஷூரன்ஸ் பாலிசி’. இந்த பாலிசி குறித்து பாரத் ரீ-இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் டி.எல்.அருணாச்சலத்திடம் பேசினோம். இந்த பாலிசியின் முக்கிய அம்சங்கள் பற்றி விரிவாகச் சொன்னார்...

''ஒரு நிறுவனத்தின் முக்கியப் பதவியில் இருப்பவர்களை 'கீ பெர்சன்ஸ் (Key persons)’ என்பார்கள். அவருக்காக எடுத்துக்கொள்ளும் இன்ஷூரன்ஸ் பாலிசியே கீமேன் இன்ஷூரன்ஸ். அதாவது, ஒரு நிறுவனத்தின் சிஇஓ, எம்டி போன்றவர்கள் இந்த கேட்டகிரியில் வருவார்கள். என்றாலும், கீமேன் யார் என்பது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்.

இந்த 'கீ பெர்சன்ஸ்’ என்பவர் மரணமடைந்தால்தான் இந்த பாலிசி மூலம் இழப்பீடு கிடைக்கும் என்றில்லை; விபத்தினால் செயல்பட முடியாமல் போனால்கூட கிளைம் கிடைக்கும்.

இந்த பாலிசியின் மூலம் கீமேன் களின் ஆதரவில்லாமல் நிறுவனங்கள் தொடர்ந்து வருமானம் பெறுகிற மாதிரி கிளைம் தொகைக் கிடைக்கும். ஆனால், கிளைம் தொகை நிறுவனத்துக்குத்தான் தரப்படுமே ஒழிய, குடும்பத்தினருக்குக் கிடைக்காது.

மூன்று அடிப்படை!

கீமேன் இன்ஷூரன்ஸை கீழ்க்காணும் மூன்று அம்சங்களில் எது குறைவோ அந்த அளவுக்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் எடுத்துக்கொள்ளலாம்.

நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபத்தின் மூன்று மடங்கு.

நிறுவனத்தின் நிகர லாபத்தின் ஐந்து மடங்கு.இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளும் கீமேனின் சிடிசியைப்போல (Cost to the company) பத்து மடங்கு.

இந்த மூன்று விவரங்களையும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளும் நிறுவனம் சமர்ப்பிக்கவேண்டும். பிரீமியத்தைக் குறைவாகக் கட்ட நினைத்து, தேவையான இன்ஷூரன்ஸை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது தவறு.

டேர்ம் பாலிசியைப்போலவே, ஒவ்வொரு ஆண்டும் பிரீமியம் கட்டும்படியாகத்தான் இந்த பாலிசி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்பவரின் வசதிக்கேற்ப 10, 20, 25 ஆண்டுகள் என பாலிசி முதிர்வுக்கால அளவை அமைத்துக்கொள்ளலாம். முதிர்வுக் காலம் அதிகமாக

இருக்கும்பட்சத்தில் கட்டவேண்டிய பிரீமியமும் குறையும். வியாதியுடன் (சிறுநீரகம் செயலிழப்பு, இருதய அறுவை சிகிச்சை போன்றவை) இருப்பவர்களுக்கென்று தனியாக கிரிட்டிக்கல் இல்னஸ் ரெய்டர் பாலிசி இருக்கிறது. இதனுடன் எடுத்துக்கொள்ளும்போது பிரீமியம் அதிகமாகும். இந்த ரெய்டர் பாலிசி இல்லாமலும் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த பாலிசி எடுக்கும்போது உடல்நலம் பரிசோதிக்கப்படும். எடுத்துக்கொள்ளும் இன்ஷூரன்ஸ் முதிர்வுத் தொகையைப் பொறுத்தும், கால அளவைப் பொறுத்தும், உடல்நிலையைப் பொறுத்தும் கட்டவேண்டிய பிரீமியம் மாறுபடும். இந்த இன்ஷூரன்ஸுக்கு கட்டும் பிரீமியத்தை செக்ஷன் 37(1)-ன் கீழ் நிறுவனத்தின் செலவாகக் காட்டி வரிச் சலுகைப் பெறலாம்.

ஒரே நிறுவனத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்கூட கீமேன் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கலாம். இந்த இன்ஷூரன்ஸை லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு மட்டுமே ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. தனி ஒருநபரால் மட்டுமே இயங்கும் நிறுவனத்துக்கு கீமேன் இன்ஷூரன்ஸ் பாலிசி கிடைக்காது. காரணம், தனிநபர் நிர்வகிக்கும் நிறுவனம் எனில் 100% ரிஸ்க் இருக்கும் என்பதால் இந்த பாலிசி தரப்படுவதில்லை.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்!

கீமேன் புரபோஷல் விண்ணப்பத்தில் கேட்டிருக்கும் விவரங்களுடன் பூர்த்தி செய்து இன்ஷூரன்ஸ் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதனோடு நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் தீர்மானத்தை இணைக்கவேண்டும். நிறுவனத்தின் ஆண்டறிக்கை (இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளும் ஆண்டுக்கு முந்தைய மூன்றாண்டு களுக்கானது), கீமேன்களின் வருமான வரித் தாக்கல் செய்ததற்கான நகல் அல்லது அவர்களின் மூன்று மாதச் சம்பளப் படிவம் கட்டாயமாகத் தரவேண்டும்'' என்று முடித்தார் அருணாச்சலம்.

பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்யாமல், பிற்பாடு பரிதவிப்பதில் அர்த்தம் இல்லையே! இந்த பாலிசியை எடுக்க முக்கியஸ்தர்கள் பரிசீலிக்கலாமே!