இன்ஷூரன்ஸ் என்பது ஆண், பெண் என இருவருக்கும் பொதுவானது என்றாலும் பெண்கள் பலரும் இன்ஷூரன்ஸ் எடுக்கத் தயக்கம் காட்டுகிறார்கள். அதிலும் குறிப்பாக, மெடிக்ளைம் பாலிசி எடுக்க நிறையவே தயங்குகிறார்கள். இந்த அணுகுமுறை தவறானது. ஏனெனில், குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு உடல்ரீதியாகப் பல பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அந்தச் சமயத்தில் நிறையவே செலவு செய்ய வேண்டியிருக்கும். இதனால் வாழ்நாள் முழுக்கக் கண்ணும் கருத்துமாகச் சேர்த்து வைத்த பணத்தில் பெரும்பகுதியை இழக்கவேண்டியிருக்கும். எனவே, ஒவ்வொரு பெண்ணுக்கும் மெடிக்ளைம் இன்ஷூரன்ஸ் பாலிசி அவசியம் தேவை. மெடிக்ளைம் பாலிசி எடுக்கும்போது என்னென்ன கவனிக்க வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் இந்தியா நிவேஷ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிருஷ்ணதாசன்.

''பெண்களுக்காக வடிவமைக்கப் பட்ட மெடிக்ளைம் பாலிசி எடுக்கும் போது, அவர்களுக்கு வரக்கூடிய நோய்களுக்கு கவரேஜ் இருக்கிறதா எனப் பார்த்து எடுப்பதே நல்லது.

பெண்களுக்கு அதிக அளவில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் பிற புற்றுநோய் வர அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, வேலைக்குப்போக ஆரம்பித்தவுடனே மெடிக்ளைம் இன்ஷூரன்ஸ் எடுத்துவைப்பது நல்லது. ஒரு பெண் தனது 20-லிருந்து 25 வயதுக்குள் இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்தால்தான், 30 வயதில் வரும் நோய்களுக்குச் சிகிச்சை பெற உதவியாக இருக்கும்.

இளம் வயதில் பாலிசி எடுக்கவில்லை எனில், காத்திருப்புக் காலத்தைக் கடந்தபிறகே கவரேஜ் பெறமுடியும். இந்தக் காத்திருப்புக் காலமானது 2 - 4 ஆண்டுகள் வரை இருக்கும். தவிர, இந்தக் காத்திருப்புக் காலம் நோய்க்கு நோய் வித்தியாசப்படும் என்பதால் இளமையிலேயே மெடிக்ளைம் பாலிசி எடுப்பது நல்லது.

மார்பக புற்றுநோய், எலும்புத் தேய்மான பாதிப்புகள், கருவாய் புற்றுநோய்க்கான நோய்களுக்கான சிகிச்சைக்கு கிளைம் பெறும்வகையில் பெண்கள் எடுக்கும் மெடிக்ளைம் பாலிசி இருக்கவேண்டும். தீவிர நோய் பாதிப்பு பாலிசிகள் (Critical Illness Policy) எடுக்கும்போது, அது பெண்களுக்கான நோய்களுக்கு கவரேஜ் தருகிற வகையில் இருப்பது அவசியம். இதில் பக்கவாதம், கேன்சர், இருதய இணைப்புகளில் ஏற்படும் நோய், சிறுநீரகச் செயலிழப்பு, கோமா (Paralysis, Cancer, Stroke, Coronary artery disease, multiple sclerosis, heart valve disease, renal failure) ஆகிய நோய்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.

முப்பது வயதான பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு தீவிர நோய் பாதிப்புக்கு பாலிசி எடுத்தால், ரூ.5,000 - ரூ6,000 வரை பிரீமியம் இருக்கும். தீவிர நோய் பாதிப்பு பாலிசியில் கிளைம் பெறக்கூடிய பல நோய்களுக்குச் சாதாரணமாக எடுக்கப்படும் மெடிக்ளைம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் கிளைம் பெற முடியாது.

45 வயது வரை உள்ள பெண்களுக்கு தீவிர நோய் பாதிப்பு பாலிசி எடுப்பதற்கு மருத்துவப் பரிசோதனை தேவையில்லை. 45 வயதுக்கு மேல் மருத்துவப் பரிசோதனை அவசியம். இந்த பாலிசியை எடுக்கிற பெண்களது குடும்பத்தில் யாராவது இதுபோன்ற நோயால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்தால் பிரீமியம் சுமார் 20-25 சதவிகிதம் வரை அதிகமாக இருக்கும்'' என்று எச்சரித்தார் கிருஷ்ணதாசன்.

திருமணத்துக்குப் பிறகு இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம் என்பது குறித்து விரிவாகச் சொல்கிறார் ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காமின் தலைமை இன்ஷூரன்ஸ் ஆலோசகர் ஸ்ரீதரன்.

''பிரசவ செலவுகளுக்கு கிளைம் பெற குரூப் பாலிசியே சிறந்ததாக இருக்கும். சில குரூப் பாலிசிகளில் பாலிசி எடுத்த முதல் ஒன்பது மாதங்கள் காத்திருப்புக் காலமாக கருதப்படுவதால், அந்தச் சமயத்தில் பிரசவ செலவுகளை கிளைம் செய்ய முடியாது. ஆனால், சில குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் இப்படி எந்த நிபந்தனையும் இல்லை.

தனிநபர் மெடிக்ளைம் பாலிசிகள் சிலவற்றில் பிரசவ செலவு கிளைம் பெறும்வகையில் இருக்கும். ஆனால், அந்த பாலிசியில் பிரீமியம் என்பது அதிகமாகவே இருக்கும். அத்துடன் குறைவான தொகையை மட்டும்தான் கிளைம் செய்யும் வகையில் பாலிசியை வடிவமைத்திருப்பார்கள். முதலில் நீங்கள் செலுத்தும் பிரீமியத்தின் அடிப்படையிலே அடுத்தடுத்த ஆண்டுகளின் பிரீமியமும் இருக்கும்.

கணவர் எடுத்த பாலிசி தனிநபர் பாலிசியாக இருந்தால் திருமணத்துக்குப்பின் பாலிசியைப் புதுப்பிக்கும்போதும், குரூப் பாலிசியாக இருந்தால் திருமணமானவுடனே உங்களின் பெயரையும் சேர்ப்பது நல்லது. எனினும், குழந்தை யின்மைக்கான சிகிச்சை, கருக்கலைப்பு, ஸ்டெம்செல் சார்ந்த சிகிச்சைகளுக்கு எந்த இன்ஷூரன்ஸ் பாலிசியிலும் கிளைம் பெற முடியாது'' என்கிற எச்சரிக்கையோடு முடித்தார்.

மெடிக்ளைம் பாலிசி எடுக்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்களைச் சொல்லிவிட்டோம். இனியாவது இன்ஷூரன்ஸ் விஷயத்தில் பெண்கள் தயக்கம் காட்ட வேண்டாமே!