Published:Updated:

மூத்த குடிமக்களுக்கான ஹெல்த் இன்ஷூரன்ஸ்:

கூடுதல் தொகையை ரெடி பண்ணுங்க!இரா.ரூபாவதி

ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஃப்ளோட்டர் பாலிசி களில் அதிகபட்சம் கணவன், மனைவி, இரண்டு பிள்ளைகளுக்கு கவரேஜ் கிடைக்கும் வகையில் பாலிசிகள் உள்ளன. இந்த பாலிசிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு பெரும்பாலும் இடம் இருக்காது. ஆனால், நிறுவனங்கள் வழங்கும் குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் சீனியர் சிட்டிசன்களுக்கு (அதிகபட்சம் 80 வயது)  கவரேஜ் கிடைக்கும். ஆனால், மூத்த குடிமக்களுக்கான மருத்துவ தேவை மற்றும் சிகிச்சைக்கான செலவு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. மருத்துவத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள யாரையாவது சார்ந்திருக்கவேண்டிய கட்டாயத் திலேயே பலரும் உள்ளனர்.

சீனியர் சிட்டிசன்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரச்னைகளுக்கு தீர்வு தருகிற மாதிரி பல  இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசிகளை  அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த பாலிசிகள் உண்மையிலேயே மூத்த குடிமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா, இந்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் உள்ள சிக்கல்கள் என்னென்ன என ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காமின் இன்ஷூரன்ஸ் ஆலோசகர் எஸ்.ஸ்ரீதரனிடம் கேட்டோம்.  

''மூத்த குடிமக்களுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கும்போது கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும் என  சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் விதிமுறை வகுத்துள்ளன. ஏற்கெனவே உள்ள வியாதிகளுக்கு இந்த பாலிசியில் கவரேஜ் இல்லை. தவிர, இவர்களுக்கு காத்திருப்புகாலம் என்பது உண்டு.

மூத்த குடிமக்களுக்கான ஹெல்த் இன்ஷூரன்ஸ்:

இந்த பாலிசியில் உள்ள பெரிய சிக்கலே, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும்போது செலவாகும் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை பாலிசிதாரரே செலுத்த வேண்டும். இது, செலவு தொகையில் 15-50 சதவிகிதமாக இருக்கிறது. இது நிறுவனத்துக்கு  நிறுவனம் வித்தியாசப்படும். மேலும், கணவன், மனைவி இருவரும் மூத்த குடிமக்கள் என்றாலும் ஒரே ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க முடியாது. தனித்தனியாகவே எடுக்க வேண்டும். ரூ.5 லட்சம் வரைதான் கவரேஜ் கிடைக்கும்.  

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை ஒவ்வொரு ஆண்டும் பிரீமியம் கட்டி புதுப்பித்துக்கொள்ள வேண்டும். என்றாலும், அதிக கிளைம் செய்திருந்தால் அவர்களின் பாலிசியை சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் புதுப்பிக்கவிடாமல் ரத்து செய்துவிடுவதாகவும் புகார் வருகிறது''  என்றார் அவர்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கீழ் சிகிச்சை எடுக்கும்போது ஏன் பாலிசிதாரர் குறிப்பிட்ட சதவிகித தொகையை செலுத்தவேண்டும் என்று ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்ஷூரன்ஸின் செயல் இயக்குநர் எஸ்.சுந்தரேசனிடம் கேட்டோம்.

மூத்த குடிமக்களுக்கான ஹெல்த் இன்ஷூரன்ஸ்:

''மூத்த குடிமக்களுக்கு இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் சில கூடுதல் வசதிகளை செய்துகொடுக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, அவசர மருத்துவ தேவைகள் மற்றும் மருத்துவ சந்தேகங் களை தீர்க்கும்விதமாக 24 மணி  நேரமும் தொலைபேசி மூலம் மருத்துவ உதவி மைய சேவையை வழங்குகிறோம்.

இந்த உதவி மையத்தில் சாதாரணமாகவோ  எதிர்பாராத விதமாகவோ வரும் தலைவலி, கால் வலி போன்ற சிறிய அளவிலான மருத்துவ சேவைகளுக்கு இங்கு முதலுதவி கிடைக்கும். இதுபோல பல வசதிகளை தருவதால், கூடுதல் தொகை கேட்கவேண்டியிருக்கிறது. இந்தத் தொகை எவ்வளவு  என்பதை முன்கூட்டியே பாலிசிதாரர்களிடம் நாங்கள் சொல்லிவிடுகிறோம்'' என்றார்.

கணவன், மனைவியாக இருக்கும் மூத்த குடிமக்களுக்கு ஏன் ஃப்ளோட்டர் பாலிசி தருவதில்லை என அவரிடம் கேட்டோம். ''மூத்த குடிமக்களுக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி தருவது அதிக ரிஸ்க் கொண்டது. இதில் ஃப்ளோட்டர் பாலிசி வழங்கினால், ரிஸ்க் இன்னும் அதிகமாக இருக்கும். அதிக கிளைம் வர வாய்ப்புண்டு என்பதாலேயே இதைத் தவிர்க்கிறோம்'' என்றார்.    

மூத்த குடிமக்கள் இந்த இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தபிறகு கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன பொதுமேலாளர் சேகர் சம்பத்குமாரிடம் கேட்டோம்.

மூத்த குடிமக்களுக்கான ஹெல்த் இன்ஷூரன்ஸ்:

''மூத்த குடிமக்கள் இன்ஷூரன்ஸ் பாலிசியில் டி.பி.ஏ யார், அவர்களின் இலவச தொலைபேசி எண் என்ன என அனைத்து விவரங்களும் இருக்கும்.

டி.பி.ஏ நிறுவனத்துக்கு போன் செய்து உங்களின் இன்ஷூரன்ஸ் கவரேஜ் தொகை எவ்வளவு, எந்தெந்த வியாதிகளுக்கு கவரேஜ் உண்டு, கேஷ்லெஸ் வசதி எந்தெந்த மருத்துவமனைகளில் இருக்கிறது என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்வது முக்கியம்.

மேலும், உங்கள் இருப்பிடத்துக்கு அருகில் எந்தெந்த மருத்துவமனைகள் உள்ளன, அதில் நீங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டால், பாலிசியில் கிளைம் பெறமுடியுமா என்பதையும் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்.

சிகிச்சை எடுக்கும்முன் செலவு தொகையில் எத்தனை சதவிகிதம் பாலிசிதாரர் தரவேண்டும் என்பதைத் தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது''  என்றவர், பாலிசி எடுப்பதில் மூத்த குடிமக்கள் செய்யும் தவறுகள் குறித்தும் விளக்கினார்.

''மூத்த குடிமக்களுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியை பெரும்பாலும் அவர்களின் பிள்ளைகள்தான் எடுத்து தருகிறார்கள். இதில் அவர்கள் இன்ஷூரன்ஸை புதுப்பிக்கும் தேதியை மறந்துவிடுகிறார்கள்.

இதனால் மீண்டும் புதிதாக பாலிசி எடுக்கவேண்டிய நிலை உருவாகிறது. இப்படி செய்யும்போது ஏற்கெனவே உள்ள வியாதிகளுக்கு கவரேஜ் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

அதோடு, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது, அறை வாடகையைக் கவனிப்பது அவசியம். கவரேஜ் தொகையில் 1 சத விகிதமே அறை வாடகையாக இருக்கும். இது அதிகமாகும்போது, கிளைம் தரும் தொகையைக் குறைப்பதற்கான வாய்ப்புண்டு. கட்டணம் குறைவாக உள்ள தரமான மருத்துவமனைகளை தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம்.

பொதுவாக, 60 வயதுக்குமேல் மருத்துவ தேவைகள் அதிகமாக இருக்கும். எனவே, குறைவான தொகைக்கு கிளைம் செய்யாமல் இருப்பதே நல்லது'' என்றார்.

பெற்றோர்களுக்கு மூத்த குடிமக்களுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துவிட்டோம் என்று இல்லாமல் மருத்துவத் தேவைகளுக்கு குறிப்பிட்ட அளவு பணத்தை எடுத்து வைப்பதும் முக்கியம்.

அதேபோல, எந்தெந்த வியாதிகளுக்கெல்லாம் கவரேஜ் இல்லை என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்வது நல்லது.

சீனியர் சிட்டிசன்களுக்கு பாலிசி தருவதைப் பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தவிர்க்கவே விரும்பு கின்றன. ஐஆர்டிஏ வற்புறுத்தலினால் மட்டுமே இந்த பாலிசியை வழங்கு கின்றன.

அதிலும் அதிக பிரீமியம் வசூலிப்பதற்காக கூடுதல் மருத்துவச் சேவையை வழங்குவதாகக் கூறுகிறார்கள். இந்த பாலிசிகளினால் என்ன நன்மை என்று தெரியவில்லை.

படம்: ப.சரவணக்குமார்.

அடுத்த கட்டுரைக்கு