Published:Updated:

இன்ஷூரன்ஸ் பாலிசி: சரியாகப் புரிந்துகொண்டால் சங்கடமில்லை!

நீரை.மகேந்திரன்

இன்ஷூரன்ஸ் பாலிசி: சரியாகப் புரிந்துகொண்டால் சங்கடமில்லை!

நீரை.மகேந்திரன்

Published:Updated:

காப்பீடு எடுப்பதன் அவசியம் குறித்து பலரும் பல இடங்களில் எடுத்துச் சொன்ன பிறகும், அதுகுறித்த விழிப்பு உணர்வு மக்களிடத்தில் பரவலாக இன்னும் போய்ச் சேரவில்லை. 120 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தவர்கள் வெறும் 35 கோடி நபர்கள்தான் என்கின்றன புள்ளிவிவரங்கள்.

நகர்ப்புறங்களில் மட்டுமே இருக்கும் காப்பீடு குறித்த விழிப்பு உணர்வு, கிராமப்புறங்களுக்கு இன்னும் பெரிய அளவில் போய்ச்  சேரவில்லை. இதற்கு என்ன காரணம், காப்பீடு பாலிசிகளை எடுப்பதற்கு நம்மவர்களுக்குத் தடை யாக இருப்பது எது என இந்தியா நிவேஷ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் வி.கிருஷ்ணதாசனிடம் கேட்டோம். காப்பீடு பற்றி நம் மக்களிடம் இருக்கும் மனத்தடைகளை எடுத்துச் சொன்னதோடு, அவற்றைக் களைவதற்கான தீர்வுகளையும் சொன்னார் அவர்.

''இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதைப் பொறுத்தவரை, இந்திய மக்களின் மனநிலையில் முன்பைவிட அதிக மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இன்ஷூரன்ஸின் பலன்களை முழுமையாக அனுபவிக்கிறார்களா என்றால் கிடையாது. பாலிசி எடுத்து விட்டு, ஏதாவது ஒரு காரணத்துக்காக பாலிசிகளைத் தொடராமல் விட்டு விடுகின்றனர். தவிர, யூலிப் மற்றும் எண்டோவ்மென்ட் பாலிசிகள் மூலம் அவர்களுக்கு முழுமையான காப்பீடு பலன் சென்று சேர்வதில்லை. இப்போதும் நம் மக்களிடத்தில் இன்ஷூரன்ஸுக்கு எதிராக அழுத்தமான சில மனத்தடைகளும் இருக்கவே செய்கிறது. அதைக் களைவதற்கு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்ஷூரன்ஸ் பாலிசி: சரியாகப் புரிந்துகொண்டால் சங்கடமில்லை!

மூடநம்பிக்கை!

இன்ஷூரன்ஸ் எடுத்தால் தனக்கு ஆயுள் குறைவு என்கிற மூடநம்பிக்கை இப்போதும் மக்களிடம் இருக்கவே செய்கிறது. அதாவது, இறப்பை எதிர்பார்த்து காப்பீடு எடுக்கப்படுகிறது என்று சிலர் நினைப்பதால் இன்ஷூரன்ஸ்  பாலிசி எடுக்கத் தயங்கு கின்றனர். இது தவறான புரிதல்தான். காப்பீடு எடுப்பதற்கும் தனிநபரின் இறப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. காப்பீடு குறித்து எந்தப் புரிதலும் இல்லாத காலத்தில் உருவான கருத்தை இன்றைக்கும் நம்புவது புத்திசாலித்தனமல்ல. இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ் பாலிசி: சரியாகப் புரிந்துகொண்டால் சங்கடமில்லை!

என்கிற விஷயத்தை இப்படி உணர்ச்சி வசப்பட்டு அணுகாமல் இன்றைய காலத்தின் தேவையாக அணுகினால், அனைவரும்  தயங்காமல் பாலிசி எடுப்பார்கள்.

அதீத நம்பிக்கை!

இன்னும் சிலர், எனக்கு ஆயுள் கெட்டி. எனக்கு எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று நம்பி  இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க மறுக்கின்றனர். வீட்டைவிட்டு வெளியே இறங்கிவிட்டால் அடுத்த நிமிடம் யாருக்கு வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்பதே இன்றைய யதார்த்தம். இளைஞர்களில் (15-29 வயது) அதிக உயிரிழப்பு ஏற்படுவதற்கு சாலைவிபத்துகளே முக்கிய காரணமாக உள்ளது.  இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 100 சாலை விபத்துகளில் இறந்தவர்களின் விகிதம் 2002-ல் 20.8% எனில், 2011-ல் 28.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நீங்கள் என்னதான் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனத்தை ஓட்டினாலும், உங்களுக்கு எதிரே வருபவர் உங்களைப்போல விதிமுறைப்படிதான் வாகனத்தை ஓட்டுவார் என்று சொல்ல முடியாது. தவிர, நோய் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் திடீர் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது என்கிறது மருத்துவ புள்ளிவிவரங்கள். எனவே, எதிர்காலத்தில் ஏற்படும் சில விரும்பத்தகாத சம்பவங்கள் மூலம் நம் குடும்பத்து உறுப்பினர்கள் பாதிப்படை யாமல் இருக்க, இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம்.

உடனடி பலன்!

பணத்தைக் கட்டிக்கொண்டே இருக்கிறோம்; அதற்குண்டான பலன் இல்லையே என்று நினைத்தும் சிலர் பாலிசி எடுக்கத் தயங்குகிறார்கள். இன்ஷூரன்ஸ் என்பது நீண்டகால கமிட்மென்ட். இதில் உடனடியாக பலனை எதிர்பார்ப்பது தவறு.  இன்ஷூரன்ஸில் உடனடி பலனை எதிர்பார்ப்பதைவிட, தனக்குப்பிறகு தன் குடும்பத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடாது என நினைத்தால், இன்ஷூரன்ஸ் எடுப்பதே சரி!

இன்ஷூரன்ஸ் பாலிசி: சரியாகப் புரிந்துகொண்டால் சங்கடமில்லை!

ரிட்டர்னை எதிர்பார்க்கலாமா?

இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு ஒவ்வொரு ஆண்டும் பிரீமியம் கட்டிவருகிறேன். இதனால் எனக்கு கிடைக்கும்

வருமானம் என்ன என்று கேட்டு, சிலர் பாலிசி எடுக்க மறுக்கிறார்கள். ரூ.5 லட்சத்துக்கு கார் வாங்கி அதற்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை இன்ஷூரன்ஸ் எடுக்கிறோம். கார் விபத்துக்குள்ளானால், இழப்பீட்டைப் பெற்று, நஷ்டமடைவதைத் தவிர்க்கி றோம்.  விபத்து எதுவும் நடக்கவில்லை என்றாலும் கவலைப்படாமல் அடுத்த ஆண்டுக்கான பிரீமியத்தைக் கட்டி, எதிர்காலத்தில் நடக்கும் விபத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளும்  வழிகளைச் செய்துகொள்கிறோம். மற்றபடி பணம் கட்டுவது வீண் என்று நாம் நினைப்பதில்லை.

கார் மாதிரிதான் நம் உடலும். இந்த உயிர் வாகனத்துக்கு எப்போது சிக்கல் வரும் என்பது தெரியாது. வருடத்துக்கு ரூ.15 ஆயிரம் பிரீமியத்தில் 1 கோடி ரூபாய் வரை டேர்ம் இன்ஷூரன்ஸ் கவரேஜ் பெற முடியும்.

இன்ஷூரன்ஸ் பாலிசி: சரியாகப் புரிந்துகொண்டால் சங்கடமில்லை!

எனக்கு என்ன பயன்?

எனக்குப் பிறகு என்னைச் சார்ந்தவர்கள் அல்லது எனது நாமினி அனுபவிக்கப்போகும் நன்மைக்காக நான் எதற்கு காப்பீடு எடுக்க வேண்டும் என்றும் சிலர் நினைப்பதால் இன்ஷூரன்ஸ் எடுக்க மறுக்கிறார்கள். ஒருவருடைய வருமானத்தை நம்பித்தான் அவரது குடும்பம் இருக்கிறது எனில், அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நேரிட்டால், அவரது குடும்பத்துக்கு ஏற்படும் வருமான இழப்பை எவ்வாறு ஈடுகட்ட முடியும்? எனவே, நமக்கு என்ன ஆதாயம் என்பதைவிட நம் சந்ததி களுக்கு என்ன பயன் என்று பார்ப்பதே முக்கியம்.

இன்ஷூரன்ஸ் பாலிசி: சரியாகப் புரிந்துகொண்டால் சங்கடமில்லை!

சொத்து!

எனக்கு ஏகப்பட்ட சொத்து இருக்கு; எனக்குப் பிறகு குடும்பத்துக்கு எந்தச் சிக்கலுமில்லை என்பதாலும் சிலர் இன்ஷூரன்ஸ் எடுக்காமல் இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பதை லாப நோக்கில் அணுகலாம். ரூ.15 ஆயிரத்துக்கு ரூ.1 கோடிக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் கவரேஜ் கிடைக்கும் என்று வைத்துக்கொள்வோம். பத்து வருடங்கள் டேர்ம் பாலிசி தொடர்ந்து கட்டி வந்தாலும் அதற்கான செலவு என்னவோ ரூ.1.50 லட்சம்தான். ஆனால், இன்ஷூரன்ஸ் எடுக்காதபட்சத்தில் அவருக்குப்பின் அவரது குடும்பம் சொத்தை விற்றுதான் செலவு செய்ய வேண்டும். ரூ.15 ஆயிரம் செலவழிக்கத்  தயங்கி, பல லட்சம் ரூபாய் மதிப்பு சொத்தை விற்பது புத்திசாலித்தனமல்ல.

இன்ஷூரன்ஸ் பாலிசி: சரியாகப் புரிந்துகொண்டால் சங்கடமில்லை!

வருமானம் குறைவு!

மாத செலவுகளுக்கே திட்டமிட முடியவில்லை. இதில் எங்கேயிருந்து இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து, அதற்கான பிரீமியம் கட்டுவது என்றும் சிலர் கேட்கிறார்கள். மாதம் ரூ.10,000 வருமானம் எனில், ரூ.15 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கலாம். இதற்கு அதிகபட்சமாக ஆண்டு பிரீமியம் ரூ.4,000 வரும். மாதம் ரூ.300 என்கிற அளவில் வங்கி ஆர்.டி.யில் சேர்த்தாலும் ஓராண்டு காலத்தில் பிரீமியத்துக்கான பணத்தை சேர்த்துவிடலாம். எனவே, வருமானம் குறைவு; அதனால் இன்ஷூரன்ஸ் எடுக்கவில்லை என்கிற மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.''

ஒருவர் தன் வாழ்வில் எப்படிப்பட்ட நிலையிலும் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம் என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள்.

படங்கள். கே. குணசீலன்,
வீ.சிவக்குமார்.