Published:Updated:

ஓலா கேப்ஸ் தனித்துவமும் மைக்ரோ இன்ஷூரன்ஸ் அறிமுகமும்!

ஒருவேளை மனிதனின் உயிர், உடல்நலம், சொத்துகளில் எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்பட்டால் நிதி இழப்பு உருவாகும். அந்த நிதி இழப்பை ஈடுகட்ட உதவும் ஒரே சாதனம் இன்ஷூரன்ஸ் மட்டுமே.

காலம் மற்றும் தேவைக்கேற்ப மைக்ரோ இன்ஷூரன்ஸ் திட்டத்தில் பல புதுமைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஓலா கேப்ஸ், போக்குவரத்துத்துறையில் கவனிக்கத்தக்க முன்னோடியான ஒரு கம்பெனி. கார், பைக், ஆட்டோ போன்ற வாகனங்களை மக்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்துகிறது.

ஓலா நிறுவனம் தன் காரில் பயணம் செய்யும் பயணிகளுக்குக் கூடுதல் சேவை செய்யும் பொருட்டு இன் ட்ரிப் (In Trip) மைக்ரோ இன்ஷூரன்ஸ் கொடுக்கிறது. இதன் மூலம் பயணியின் பை (Bag) தொலைந்துபோதல், ஆக்ஸிடென்ட்டல் டெத், ஆக்ஸிடென்ட்டல் மருத்துவச் செலவு, லேப்டாப் தவறவிடுதல் போன்ற அசெளகர்யங்கள், அபாயங்களுக்கு க்ளெய்ம் பெறலாம்.

ஓலா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சுமார் இரண்டு கோடி இன் ட்ரிப் மைக்ரோ இன்ஷூரன்ஸ் பாலிசியை விற்கிறது. இந்தியாவில் எந்த நிறுவனமும் யோசிக்காத இந்த விஷயத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்து மிகப்பெரிய சாதனையை ஓலா செய்துவருகிறது.

சரி... அதென்ன மைக்ரோ இன்ஷூரன்ஸ்?

ஒருவேளை மனிதனின் உயிர், உடல்நலம், சொத்துகளில் எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்பட்டால் நிதி இழப்பு உருவாகும். அந்த நிதி இழப்பை ஈடுகட்ட உதவும் ஒரே சாதனம் இன்ஷூரன்ஸ் மட்டுமே. இன்ஷூரன்ஸ் பாதுகாப்பைப் பெறுவதற்கு ஒவ்வொருவரும் பிரீமியம் தொகையை இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குச் செலுத்த வேண்டும். இந்த பிரீமியம் தொகையைப் பொருளாதாரரீதியாகச் சிறப்பாக இருப்பவர்கள் செலுத்திவிடுகிறார்கள். அதே நேரத்தில், வசதியானவர்கள் எல்லோரும் போதுமான தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் இறந்துபோனால், அதற்குப் பிறகும் அதே வருமானத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இன்ஷூரன்ஸின் தத்துவம். இந்தியா ஸ்பெண்ட் (India Spend) நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, நிதி இழப்பு ஏற்பட்டால் சராசரி இந்தியர் ஒருவர் தன் குடும்பத்துக்கு எவ்வளவு நிதிப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டுமோ அதில் 8 சதவிகிதத்துக்கு மட்டுமே காப்பீடு செய்கிறார்.

ஓலா கேப்ஸ் தனித்துவமும் மைக்ரோ இன்ஷூரன்ஸ் அறிமுகமும்!

ஏழை மக்களுக்குச் சாதாரணமான இன்ஷூரன்ஸ் பாலிசிக்குரிய பிரீமியம் தொகையைச் செலுத்துவதற்கு வசதியில்லை. அதனால் அவர்கள் அத்தகைய பாலிசியை எடுக்க முன்வருவதில்லை. அவர்களின் குடும்பத்துக்கு நிதிப் பாதுகாப்பு கொடுக்கும் பொருட்டு மைக்ரோ இன்ஷூரன்ஸ் திட்டம் இந்தியாவில் கொண்டுவரப்பட்டது.

மைக்ரோ இன்ஷூரன்ஸ் பாலிசியின் காப்பீட்டுத் தொகை (கவரேஜ்) மற்றும் பிரீமியம் மிகக் குறைவு. மைக்ரோ இன்ஷூரன்ஸ் திட்டங்கள் இந்தியாவில் வளர்ச்சி அடைவதற்கு ஏஜென்ட்டுகள், சுய உதவிக் குழுக்கள், சமூக நல்லிணக்க தன்னார்வ நிறுவனங்களின் கடுமையான உழைப்பு மற்றும் விற்பனை உத்தி ஆகியவையே காரணம்.

மிகக் குறைவான பிரீமியம் மற்றும் குறைவான காப்பீட்டு தொகையுடன் இறப்பு க்ளெய்ம் மட்டும் கிடைக்கும் திட்டம், மேலும் இறப்பு க்ளெய்ம் உடன் முதிர்வுத் தொகை சேர்த்துக் கிடைக்கும் திட்டங்களை லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் கொண்டு வந்திருக்கின்றன. பாலிசிதாரர் விரும்பினால் முக்கிய பாலிசியுடன் ஆக்ஸிடென்ட் பெனிஃபிட் ரைடரை சேர்த்து வாங்கலாம். காப்பீட்டுத் தொகை 50,000 ரூபாயிலிருந்து 2,00,000 ரூபாய் வரை இருக்கிறது, காப்பீட்டுக் காலம் ஐந்து முதல் 15 வருடம் வரை.

- மைக்ரோ இன்ஷூரன்ஸ் தொடர்பான முழுமையான புரிதலுக்கு நாணயம் விகடன் சிறப்புக் கட்டுரையை நாட > Click Here மைக்ரோ இன்ஷூரன்ஸ் பாலிசிகள்..! - ஏன் முக்கியம்..? https://bit.ly/3fLd88u

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு