Published:Updated:

தொழிற்சாலை விபத்துகள்... காக்கும் பாலிசிகள்! - எல்ஜி பாலிமர்ஸ் கற்றுத்தரும் பாடங்கள்!

தொழிற்சாலை
பிரீமியம் ஸ்டோரி
தொழிற்சாலை

எல்ஜி பாலிமர்ஸில் நடந்ததுபோல ஒரு பெரும் விபத்து நடந்தால், கம்பெனியே திவாலாகும் வாய்ப்புள்ளது!

தொழிற்சாலை விபத்துகள்... காக்கும் பாலிசிகள்! - எல்ஜி பாலிமர்ஸ் கற்றுத்தரும் பாடங்கள்!

எல்ஜி பாலிமர்ஸில் நடந்ததுபோல ஒரு பெரும் விபத்து நடந்தால், கம்பெனியே திவாலாகும் வாய்ப்புள்ளது!

Published:Updated:
தொழிற்சாலை
பிரீமியம் ஸ்டோரி
தொழிற்சாலை
ந்திராவில் விசாகப்பட்டினத்திலுள்ள எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையில் நிகழ்ந்த விஷவாயு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதும், 12 பேர் இறந்ததும் அனைவரும் அறிந்த செய்திதான்.

கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு உலகெங்கும் அனைத்து வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கிடங்குகள் போன்றவை பல மாதங்களாக மூடப்பட்டுக்கிடந்தன. காவலாட்கள் தவிர வேறு யாரும் உள்ளே செல்லவோ, பணி புரியவோ முடியாத நிலை இருந்தது.

தொழிற்சாலை விபத்துகள்... காக்கும் பாலிசிகள்! - எல்ஜி பாலிமர்ஸ் கற்றுத்தரும் பாடங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியாவைப் பொறுத்தவரை பெருவாரியாகத் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் குறிப்பாக, கடும் உடல் உழைப்பைத் தர வேண்டிய பணிகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களே (இப்போது மாநில அரசுகள் கூறும் சொல் - விருந்தினர் பணியாளர்கள்-Guest Workers) இருந்தனர்.

ொரோனாவால் பணியிடங்கள் மூடப்பட்டதும், இந்தத் தொழிலாளர்கள் இருக்க இடம், உண்ண உணவு போன்றவை இல்லாமல் தவித்து, பின்னர் சொந்த ஊருக்கே சென்றுவிட்டனர்.

அதனால் பல தொழிற்சாலைகளில் மிகவும் அவசியமான பாதுகாப்பு மற்றும் இயந்திரங்களைப் பராமரிக்கும் வேலைகளுக்குச் சரியான எண்ணிக்கையில் அந்த வேலைக்கேற்ற அனுபவமுள்ள ஆட்கள் இல்லை. ஆபத்தான ரசாயன இருப்பு மற்றும் தானாகவே தீப்பிடிக்கக்கூடிய பொருள்கள் இருந்தால் அவற்றைச் சரியான முறையில், சரியான தட்பவெட்பச் சூழ்நிலையில் பராமரிக்க வேண்டும். அந்தப் பணியில் கோட்டைவிட்டதால்தான் சில தொழிற்சாலைகளில் தீ விபத்துகள், வெடிவிபத்துகள் ஏற்படுகின்றன. எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையிலும் இதுபோன்றே ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது

இந்த விபத்துகளால் மக்கள் இறக்கவோ, உடல்நிலை பாதிக்கப்படவோ நேர்கிறது. இறந்தவர்களுக்கும், காயமுற்றவர்களுக்கும், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் தருவதற்காகவே 1991-ம் ஆண்டில் ‘பப்ளிக் லையபிலிட்டி இன்ஷூரன்ஸ் ஆக்ட்’ என்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அந்தச் சட்டத்தின்படி, ஆபத்தான ரசாயனப் பொருள்கள் வைத்திருக்கும் தொழில் நிறுவனங்கள், அவர்களின் தொழில் காரணமாக மூன்றாம் நபர் இறப்பு அல்லது காயம்/ உடல்நலக் கோளாறு அல்லது மூன்றாம் நபருக்கான பொருள் சேதம் ஏற்பட்டால் அதற்கான நிவாரணம் மாவட்ட ஆட்சியர் மூலமாக அவர் விசாரணை செய்த பிறகு வழங்கப்படும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது 1984-ம் ஆண்டு நடந்த போபால் விஷவாயு விபத்தின் தாக்கத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமேயானாலும் அந்தச் சட்டத்தைப் பலரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆபத்தான ரசாயனப் பொருள்கள் அதிகம்வைத்திருக்கும் தொழிலகங்கள் இந்த பாலிசியை எடுக்காமல் அசட்டையாக இருப்பது நிதர்சனமான உண்மை. அவ்வப்போது நிகழும் இது போன்ற சம்பவங்கள் ஏதோ ஓரிரண்டு வாரங்களோ, ஓரிரு மாதங்களோ பரபரப்பாகப் பேசப்பட்டு பிறகு முழுவதும் மறக்கப்பட்டுவிடுகின்றன.

தொழிற்சாலை விபத்துகள்... காக்கும் பாலிசிகள்! - எல்ஜி பாலிமர்ஸ் கற்றுத்தரும் பாடங்கள்!

தொழிற்சாலை ரீ-ஸ்டார்ட் ஆபத்தா?

கொரோனா காரணமாக அடைக்கப்பட்டிருந்த தொழில் நிறுவனங்கள் மீண்டும் தங்கள் தொழில் உற்பத்தியைத் தொடங்கும்போது, தாங்கள் உற்பத்தி செய்யும் இடத்தில் அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணமாக, தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்குவதற்கு முன்னர் அங்குள்ள இயந்திரங்களை திடீரென்று நிறுத்திவிட்டு, பிறகு பல நாள்களுக்குப் பின்னர் இயக்குவது பற்றி அந்த இயந்திரங்களைத் தயாரித்த நிறுவனம் தந்த வழிகாட்டி ஆவணத்தில் (Instruction Manual) அல்லது SOP ஆவணத்தில் கொடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை அனுசரிக்க வேண்டும். அதுபோல் அரசு தரும் கொரோனா சம்பந்தப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். சில தொழிற்சாலைகளில் கழிவுநீர் தேங்கும் தொட்டியிலோ, டேங்க்கிலோ கண்ணுக்குத் தெரியாமல் இருக்கக்கூடிய விஷவாயு மிகவும் ஆபத்தானது. அதை வெளியேற்றிய பின்னரே அதற்கான தொழிலாளர்களை அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

இத்தனை ஏற்பாடுகளையும் மீறி கோரமான விபத்துகள் நடக்கத்தான் செய்கின்றன. அப்போது பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கும் அளவுக்கு அந்தத் தொழில் நிறுவனத்திடம் வசதி இருக்குமா என்பது தெரியாது. தீ, வெடி விபத்து, புயல், வெள்ளம் பூகம்பத்துக்கான காப்பீடு பாலிசிகள்போல, இதுபோல் விபத்து நடந்து மூன்றாம் நபர் அதாவது பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் சட்டப்படி நிவாரணம் பெற இன்ஷூரன்ஸ் பாலிசிகள் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சி.ஜி.எல் (CGL) என்னும் ‘கமர்ஷியல் ஜெனரல் லையபிலிட்டி பாலிசி’ இந்தியாவில் இயங்கும் பல தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், பெரிய சாஃப்ட்வேர் பார்க், பல மாடி அலுவலகக் கட்டடங்கள், குடோன்கள் போன்ற வியாபார நிறுவனங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் அல்லது எடுக்க வேண்டிய பாலிசி ஆகும். ஒரு நிறுவனத்தில் நிகழும் விபத்தால் ஏற்படும் மூன்றாம் நபர் இறப்புக்கான நிவாரணம் தவிர வேறு பல இன்ஷூரன்ஸ் சலுகைகளும் இதில் உண்டு. உதாரணமாக, நிவாரணம் கேட்டு எவரேனும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், வழக்கை எதிர்கொள்ள ஆகும் வக்கீல் செலவுகளைக்கூடப் பெற முடியும்.

தொழிற்சாலை
தொழிற்சாலை

எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தின் மீது `என்.ஜி.டி’ எனப்படும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ.50 கோடி அளவுக்கு அபராதம் விதித்துள்ளது. மேலும் மத்திய அரசு, மாநில அரசு, மாசுக் கட்டுப்பாடு வாரியம் போன்றவை ஆளாளுக்கு விசாரணை, மறு விசாரணை, அபராதம், தண்டனை என்று அந்த நிறுவனத்தை நொந்துபோக வைத்துவிடுவார்கள். அதுபோல, அபராதம் மற்றும் வக்கீல் செலவு போக கடைசியில் நிவாரணமும் தர வேண்டும் என்று கோர்ட்டில் தீர்ப்பு வரும். இவை அனைத்தையும் சி.ஜி.எல் பாலிசி பார்த்துக்கொள்ளும். பாலிசி எடுக்கும் நிறுவனம் விபத்து நடந்த அன்றிலிருந்து, எல்லா விஷயங்களிலும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் அனுமதி பெற்று வழக்கை நடத்தினால் செலவினங்கள், நிவாரணத் தொகை அனைத்தையும் இந்த பாலிசி தரும். மேலும், வழக்கு போடாமலேயே பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் அல்லது செட்டில்மென்ட் முறையிலும் நிவாரணம் தர முடியும்.

பாலிசி அவசியம்!

இந்தியா ஜனத்தொகை அதிகமுள்ள நாடு என்பதாலும், மக்கள் மிகவும் நெரிசல் மிகுந்த இடங்களில் வசிக் கிறார்கள் என்பதாலும் விபத்துகள் நடந்தால் நிவாரணம் கொடுக்கும் பணவசதி அந்தந்தத் தொழிலதிபர்களிடம் இல்லையென்பதாலும், இன்ஷூரன்ஸ் என்ற பொருளாதார ஏற்பாட்டின் பயனை முழுதும் அடைய முயல வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறு வனங்களில் விபத்து நடந்தால், நிறுவனத்தை நடத்தும் தொழில்முனை வோருக்கு நிவாரணம் கொடுக்கும் அளவுக்குப் பணவசதி நிச்சயம் இருக்காது. எல்ஜி பாலிமர்ஸில் நடந்ததுபோல ஒரு பெரும் விபத்து நடந்தால், அந்த கம்பெனியே திவாலாகும் வாய்ப்பிருப்பதை மறுக்க முடியாது. சி.ஜி.எல் போன்ற ஆபத்தில் கைகொடுக்கும் பாலிசியைப் பற்றி நன்கு கேட்டு அறிந்து கொண்டு, தேவைப்படும் என்று நினைப்பவர்கள் அந்த பாலிசியை எடுப்பது பிற்பாடு வரும் பல்வேறு ஆபத்துகளிலிருந்து காக்க மிகவும் பயன்படும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism