நடப்பு
Published:Updated:

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... கவனிக்க வேண்டிய 5 சூப்பர் பலன்கள்! பாலிசி எடுக்கும்முன் அறிவோம்...

ஹெல்த் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெல்த் இன்ஷூரன்ஸ்

H E L A T H I N S U R A N C E

தபன் சிங்கெல், எம்.டி மற்றும் சி.இ.ஓ, பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் வைத்திருப்பவர்கள் அதன் கவரேஜ் மூலம் பலன் அடைந்தார்கள். இல்லாத வர்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து பணத்தை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்கள். எனவே, குறிப்பிட்ட அளவு பிரீமியம் செலுத்துவதன் மூலம் சில ஆயிரம் முதல் லட்சங்கள் வரையிலான எதிர்பாராத செலவுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். இதனால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் தொடர்பாக விசாரிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிகிறது.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதால் நமக்குக் கிடைக்கும் ஐந்து முக்கியமான பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.

தபன் சிங்கெல், 
எம்.டி மற்றும் 
சி.இ.ஓ, 
பஜாஜ் 
அலையன்ஸ் 
ஜெனரல் 
இன்ஷூரன்ஸ்
தபன் சிங்கெல், எம்.டி மற்றும் சி.இ.ஓ, பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ்

1. சிறப்பு போனஸ்...

ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஓராண்டுக்கான திட்டம் என்பதால், அந்த ஆண்டில் க்ளெய்ம் பெறாதவர்களுக்கு அடுத்த ஆண்டில் திட்டத்தைப் புதுப்பிக்கும்போது கவரேஜ் தொகையைக் குறிப்பிட்ட சதவிகிதம் உயர்த்தி வழங்குவார்கள். இதுவே சிறப்பு போனஸ் ஆகும். முன்பு இது ஒவ்வோர் ஆண்டுக்கும் 10 - 15% என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்தது. தற்போது மருத்துவச் செலவினங்கள் உயர்ந்திருப்பதால், சற்று அதிகமான சதவிகிதத்தை வழங்கி வருகின்றன. உதாரணமாக, ஒருவர் ரூ.5 லட்சம் கவரேஜுடன் இளம் வயதிலேயே பாலிசி எடுக்கிறார் எனில், முதல் ஆண்டில் அவர் எந்த க்ளெய்மும் பெற வில்லை எனில், அடுத்த ஆண்டு அவரது கவரேஜ் தொகை 50% உயர்த்தப்பட்டு, ரூ.7.5 லட்சமாக நிர்ணயிக்கப்படும். இரண்டாம் ஆண்டும் அவர் க்ளெய்ம் எதுவும் பெறவில்லை எனில், அதற்கடுத்த ஆண்டு கவரேஜ் தொகை மீண்டும் 50% உயர்த்தப்பட்டு ரூ.10 லட்சமாக நிர்ணயிக்கப்படும். இதன்மூலம் ரூ.5 லட்சத்துக்கான பிரிமீயம் செலுத்தி ரூ.10 லட்சத்துக்கான கவரேஜ் பலனை அவர் பெறுகிறார். ஒருவேளை, அவர் க்ளெய்ம் பெற்றால், அவரது போனஸ் கவரேஜ் அடிப்படை கவரேஜ் தொகையில் 10% அளவுக்கே குறையும்.

2. ரீசார்ஜ் பலன்கள்...

ஒருவர் தனது பாலிசியில் க்ளெய்ம் பெற்று கவரேஜ் வரம்பை எட்டிவிட்டால், கவரேஜ் தொகையை மேலும் அதிகரித்துக் கொள்ள ரீசார்ஜ் வசதி உதவுகிறது. உதாரணமாக, ஒருவர் ரூ.5 லட்சம் கவரேஜ் பாலிசியை எடுத்திருந்து, மருத்துவச் செலவு கவரேஜ் வரம்பைவிட அதிகமாகி, ரூ.6 லட்சமாகக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவானால், அவரது பாலிசியில் ரீசார்ஜ் வசதி இருந்தால், அதன் மூலம் கவரேஜ் வரம்பை உயர்த்திக்கொள்ளலாம். இந்த ரீசார்ஜ் சதவிகித அளவில் வழங்கப்படு கிறது. ஒருவருடைய ரீசார்ஜ் வசதி 20% எனில், அவருடைய கவரேஜ் வரம்பு ரூ.5 லட்சம் எட்டிவிடும்போது அதில் 20%, ரூ.1 லட்சம் கூடுதல் கவரேஜ் எந்த விதமான கூடுதல் பிரீமியம் செலவும் இல்லாமல் வழங்கப்படும். இந்த வசதி கவரேஜ் தொகையைவிட கூடுதலாக மருத்துவச் செலவு ஆகும்போது உதவியாக இருக்கும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்
ஹெல்த் இன்ஷூரன்ஸ்

3. கவரேஜை மீண்டும் நிரப்பும் வசதி...

ஏற்கெனவே உள்ள பாலிசியில் கூடுதலாகப் பெறக்கூடிய வசதி இதுவாகும். இந்த வசதியைக் கணிசமாகக் கூடுதல் பிரீமியம் செலுத்தி பெறமுடியும். ஆனால், பாலிசியானது கவரேஜை எட்டி விடும்பட்சத்தில் இந்த வசதி பெரும் உதவியாக இருக்கும். உதாரணமாக, ஒருவர் ரூ.5 லட்சம் கவரேஜுக்கான பாலிசி வைத்திருக்கிறார் எனில், விபத்து காரணமாக ஏற்பட்ட காயங் களுக்கு சிகிச்சை எடுக்கும்போது கவரேஜ் தொகையை முழுவதுமாக எட்டிவிடுகிறார். பின்னர், அதே ஆண்டில் அவருக்கு டெங்கு காரணமாக சிகிச்சை எடுக்க வேண்டிவருகிறது. அவரது பாலிசி ஏற்கெனவே கவரேஜ் வரம்பை எட்டிவிட்டதால், சிகிச்சைக்குக் கையிலிருந்து பணத்தைச் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், பாலிசி எடுக்கும்போதே கவரேஜை மீண்டும் நிரப்பும் வசதியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ரூ.5 லட்சம் கவரேஜை எட்டியபிறகு, மீண்டும் ரூ.5 லட்சம் கவரேஜ் வழங்கப்படும். ஆனால், ஒரே வியாதிக்கு மீண்டும் சிகிச்சை பெற க்ளெய்ம் உண்டா, இந்த வசதியைப் பெற காத்திருப்பு காலம் எவ்வளவு போன்ற க்ளெய்ம் விதிமுறைகளை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

4. முடிவற்ற கவரேஜ்...

கவரேஜ் தொகையானது பாலிசி எடுக்கும்போது பாலிசி தாரர் தேர்ந்தெடுக்கும் தொகை ஆகும். ஒருவர் தனது பாலிசியில் ரூ.5 லட்சம் கவரேஜ் தொகை எடுத்தால், அவருக்கான கவரேஜ் ரூ.5 லட்சம். தற்போது சந்தையில் முடிவற்ற கவரேஜ் தொகை கொண்ட பாலிசிகளும் கிடைக் கின்றன. அதன்படி ஒருவர் தனக்கான கவரேஜ் தொகையை நிர்ணயிக்கும்போது மருத்துவ மனை அறையின் ஒரு நாள் வாடகை (3,000 முதல் 5,000 வரை) எவ்வளவு என்பதைப் பொறுத்து நிர்ணயிக்கலாம். பாலிசியானது ஒரு நாள் அறை வாடகையின் 100 மடங்கு வரையில் கவரேஜை நிர்ணயிக்கலாம். உதாரணமாக, அறை வாடகை ரூ.10,000 எனில், அவரது கவரேஜ் தொகை ரூ.10 லட்சமாக நிர்ணயிக்கப்படும். மேலும், அவரது கவரேஜ் இத்துடன் முடிந்துவிடாது. இந்த வரம்பைத் தாண்டியும் அவர் க்ளெய்ம் செய்கிறார் எனில், கூடுதலாகக் க்ளெய்ம் செய்யும் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதத்தை மட்டும் பாலிசி தாரர் செலுத்தினால் போதும். மிச்சத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனம் செலுத்தும். இது சதவிகித அடிப்படையில் பாலிசி எடுக்கும்போதே முடிவு செய்யப்படும். பாலிசி எடுப்பவர் கவரேஜ் வரம்பைத் தாண்டி க்ளெய்ம் செய்யும்போது கூடுதலான தொகையில் செலுத்த வேண்டிய சதவிகிதம் 15, 20 அல்லது 25 என்ற அளவில் தேர்ந்தெடுக் கலாம். இதன் மூலம் முடிவற்ற கவரேஜை ஒருவர் பெற முடியும்.

5. கூடுதல் ஆரோக்கிய பலன்கள்...

இப்போது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசி மீது கூடுதலாகச் சில பலன்களை வழங்குகின்றன. தள்ளுபடியில் புற நோயாளிகளுக்கான ஆலோசனை, சிகிச்சை, நோய் கண்டறிதல் பரிசோதனை கள், மருந்துகள் போன்றவை பெறும் வசதிகள் மட்டுமல்லாமல் ஆரோக் கியத்துக்கான உணவுப் பொருள்கள், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஃபிட்னஸ் மையங்களுக்கான வவுச்சர்கள் போன்றவையும் வழங்குகின்றன. உதாரணமாக, ஒருவர் பாலிசி எடுக்கும் போது இந்த வசதியைப் பெற்றால் அதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி வந்தால், பாலிசி புதுப்பிக்கும்போது பிரீமியத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் தள்ளுபடி வழங்கும். இந்தக் கூடுதல் வசதியானது பாலிசிதாரர் தன்னுடைய உடல் ஆரோக்கியத்தை பேண ஊக்குவிப் பதுடன், கணிசமான தள்ளுபடி சலுகை களையும் பெற உதவுகிறது.