இந்தியாவில் ஆயுள் காப்பீட்டில் செலுத்தப்படும் பிரீமியம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) வெறும் 2.76 சதவிகிதமாக, மிகக் குறைவாக உள்ளது. இதை ஆயுள் காப்பீடு நிறுவனங்களாலும், அவற்றின் ஏஜென்ட்டுகளாலும் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு அதிகரிக்க இயலவில்லை.

இன்னும் அதிகமானவர்கள் காப்பீட்டு பாலிசியை எடுக்கவும், அதை விரிவான நிதித் திட்டமிடலின் ஒரு பகுதியாக மாற்றவும் இந்தியக் காப்பீடு மற்றும் மேம்பாட்டு ஆணையமான (ஐ.ஆர்.டி.ஏ.ஐ), `காப்பீடு சந்தைப்படுத்தல் நிறுவனம்’ (Insurance Marketing Firm - IMF) என்ற புதிய விநியோக நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறது. இதனால் என்ன நன்மை தெரியுமா?

தற்போது இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகளுக்கு ஓர் ஆயுள் காப்பீடு மற்றும் ஒரு பொது காப்பீடு, ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசிகளை விற்க மட்டுமே அனுமதி உண்டு. எனவே, பாலிசி எடுப்பவர்கள் சரியான திட்டங்களைத் தேர்வு செய்ய பல இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகளை அணுக வேண்டிய நிலை. இந்த இடைவெளியை நிவர்த்தி செய்து, பாலிசி எடுக்க விரும்புபவர்களுக்கு ஐ.எம்.எஃப் மூலம் பலதரப்பட்ட பாலிசிகளை ஐ.ஆர்.டி.ஏ.ஐ கொண்டுவருகிறது. ஐ.எம்.எஃப்-களால் ஒரே நேரத்தில் தலா இரு ஆயுள் காப்பீடு மற்றும் பொதுக் காப்பீடு, ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசிகளை சுதந்திரமாக விநியோகிக்க முடியும்.

தற்போதைய நிலையில், 280-க்கும் மேற்பட்ட ஐ.எம்.எஃப்-கள் நாடு முழுக்க இயங்கிவருகின்றன. இவை எல்.ஐ.சி., ஹெச்.டி.எஃப்.சி லைஃப், பி.என்.பி மெட்லைஃப், மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பாலிசிகளைப் பயன்படுத்திவருகின்றன. இதற்கு முன்னர் இவை ஒரு மாநிலத்தில், ஒரு மாவட்டத்துக்குள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டன. இப்போது அதிகபட்சம் மூன்று மாவட்டங்களில் செயல்பட அனுமதி தரப்பட்டிருக்கிறது.

பலரும் ஐ.எம்.எஃப் தொடங்க வசதியாக நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. காப்பீடு சந்தைப்படுத்த ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருக்கும் நிறுவனங்கள் தவிர, கூடுதலாக தற்போது வேளாண் காப்பீட்டு நிறுவனம் இந்தியா லிமிடெட் (ஏ.ஐ.சி) மற்றும் ஏற்றுமதிக் கடன் உத்தரவாதக் கழகம் லிமிடெட் (இ.சி.ஜி.சி) ஆகியவற்றையும் விநியோகம் செய்ய முடியும். மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங் களுக்கான (எம்.எஸ்.எம்.இ) சொத்துக் காப்பீடு, குழு விபத்துக் காப்பீடு, குழு மருத்துவக் காப்பீடு போன்றவற்றையும் விநியோகிக்க முடியும்.

திருத்தப்பட்ட புதிய விதிமுறையின்படி, அனுபவமுள்ள ஆயுள் காப்பீடு ஏஜென்ட் ஒருவர் இந்த ஐ.எம்.எஃப் வணிகத்தில் களமிறங்க முடியும்.

இதற்கு முன்னர் லைஃப் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் இந்த வணிகத்தில் இறங்க வேண்டுமெனில், அவரின் ஏஜென்ஸியை சரண்டர் செய்ய வேண்டியிருந்தது. இதனால், ஆயுள் காப்பீடு பாலிசி மூலமான அவரின் கமிஷனை இழக்க வேண்டியிருந்தது. இப்போது அப்படியில்லை என்பதால், அனுபவமுள்ள லைஃப் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள் அதிக அளவில் இன்ஷூரன்ஸ் மார்க்கெட்டிங் கம்பெனியை ஆரம்பித்துவருகிறார்கள்!