Published:Updated:

பெண்களுக்கு `டேர்ம் இன்ஷூரன்ஸ்' தேவையா? - ஓர் எளிய கைடன்ஸ்

சேமிப்பு
சேமிப்பு

இல்லத்தரசிகளின் பெயரில் சொத்துகள் இருந்து அவற்றின் மூலம் வருமானம் வரும்பட்சத்தில், அதற்கான ஆவணங்கள் முறையாக இருந்தால் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது வருமானம் ஈட்டுபவர்களுக்கானது. ஏனெனில், வருமானத்தின் அடிப்படையில்தான் இந்த வகை இன்ஷூரன்ஸ் திட்டத்துக்கான முதிர்வுத் தொகையும், அதற்கான பிரீமியமும் கணக்கிடப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், சம்பாதித்துக்கொண்டிருப்பவருக்கு திடீரென அசம்பாவிதம் நிகழும்போது, பொருளாதார ரீதியாக மொத்த குடும்பமும் ஸ்தம்பித்துப் போகும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்கான பாலிசிதான் இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ். அதனால், வேலைக்குப் போகும் பெண்கள் இந்த வகை பாலிசியை எடுத்துக்கொள்ளலாம்.

இல்லத்தரசிகளுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி ஆப்ஷன் கிடையாது. இருப்பினும் பெரும்பாலான நிறுவனங்கள் கணவனின் வருமான ஆவணங்கள் அடிப்படையில் அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை டேர்ம் இன்ஷூரன்ஸ் தருகின்றன.

இன்ஷூரன்ஸ்
இன்ஷூரன்ஸ்

ஒருவேளை, இல்லத்தரசிகளின் பெயரில் சொத்துகள் இருந்து அவற்றின் மூலம் வருமானம் வரும்பட்சத்தில், அதற்கான ஆவணங்கள் முறையாக இருந்தால் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.

உதாரணத்துக்கு, 30 வயதுள்ள ஒருவர், வருடத்துக்கு 10 லட்சம் ரூபாய் சம்பாதிப்பவராக இருந்தால், அதன் 15 மடங்கு அளவுக்கு, அதாவது அதிகபட்சமாக 1.5 கோடி ரூபாய் வரை `டேர்ம் இன்ஷூரன்ஸ்' எடுத்துக்கொள்ள முடியும். இதற்கு ஆண்டு பிரீமியம் அதிகபட்சமாக 20,000 ரூபாய்க்குள் வரும். இதே 40 வயதுள்ள ஒருவர் எடுத்துக்கொள்வதாக இருந்தால், ஆண்டு பிரீமியம் 30,000 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும்.

- பாதுகாப்பு என்பது சொந்த வீட்டுக்கு கிரில் கேட் போடுவதில் மட்டும் இல்லை. வீட்டு நலனுக்காக உழைக்கும் பெண்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவ ரீதியாக ஏதாவது பிரச்னைகள் ஏற்படும்போது, சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக `ஹெல்த் இன்ஷூரன்ஸ்' எடுப்பதுதான் உண்மையான பாதுகாப்பு.

பெண்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன, பெண்களுக்கான சிறப்பு பாலிசிகள் என்னென்ன போன்ற விவரங்கள் குறித்து நிதி ஆலோசகர் பி.பத்மநாபனிடம் பேசினோம்.

அவரது வழிகாட்டுதல்களை முழுமையாக அவள் விகடன் இதழில் வாசிக்க > பெண்களுக்கான ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகள்... ஏன்? எதற்கு? எப்படி? https://bit.ly/3jsa1Ug

இன்ஷூரன்ஸ்
இன்ஷூரன்ஸ்

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு