Published:Updated:

நிதி இழப்பைத் தடுக்கும் கேன்சர் இன்ஷூரன்ஸ்! - அறிய வேண்டிய தகவல்கள்

கேன்சர் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேன்சர் இன்ஷூரன்ஸ்

இந்த பாலிசியை நேரடியாக ஆன்லைன் மூலமாகவும், இன்ஷூரன்ஸ் கம்பெனி ஆலோசகர் மூலமாகவும் வாங்கலாம்.

நிதி இழப்பைத் தடுக்கும் கேன்சர் இன்ஷூரன்ஸ்! - அறிய வேண்டிய தகவல்கள்

இந்த பாலிசியை நேரடியாக ஆன்லைன் மூலமாகவும், இன்ஷூரன்ஸ் கம்பெனி ஆலோசகர் மூலமாகவும் வாங்கலாம்.

Published:Updated:
கேன்சர் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேன்சர் இன்ஷூரன்ஸ்
ற்போது உலகயே உலுக்கிக்கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். ஆனால், சத்தமே இல்லாமல் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது புற்றுநோய்!

பெருகிவரும் புற்றுநோயாளிகள்

வயதானவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என வயது வித்தியாசமில்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் புற்றுநோய். உலக சுகாதார நிறுவனம் 2018-ல் வெளியிட்டிருக்கும் அறிக்கை, ‘இந்தியாவில் பத்து பேரில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது; அப்படி பாதிக்கப்படுபவர்களில் 15 பேரில் ஒருவர் இறந்துபோகவும் வாய்ப்பிருக்கிறது’ என்கிறது. 2019 தேசிய ஆரோக்கிய விவர (National Health Profile) அறிக்கை, ‘இந்தியாவில் 2017-2018-ல் மட்டும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 324% உயர்ந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் சராசரியாக 11.5 லட்சம் பேர் புதிதாகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். சுமார் 7.5 லட்சம் நோயாளிகள் இறக்கிறார்கள். இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் புற்றுநோயாளிகள் அதிகம் காணப்படுகிறார்கள். பெருவாரியான இந்தியர்கள் வாய்ப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பைப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோயால் அவதிப்படுகிறார்கள்’ என்கிறது.

நிதி இழப்பைத் தடுக்கும் கேன்சர் இன்ஷூரன்ஸ்! - அறிய வேண்டிய தகவல்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொருளாதாரப் பேரிழப்பு

கண்ணன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அவரின் மூத்த மகன் ஒரு புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியிலும், மகள் பள்ளிக்கூடத்திலும் படித்துவந்தனர். குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்குக் கல்வி அவசியம் என்பதை உணர்ந்து, கண்ணன் கல்விக்கு அதிகம் செலவு செய்தார். வயதான காலத்தில் நிறைய பணம் தேவைப்படும் என்பதை உணர்ந்திருந்தாலும், அதிகம் சேமிக்கவில்லை. இந்த நிலையில், அவருக்கு அவ்வப்போது வயிற்றில் வலி ஏற்பட்டது. அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். பல வருடங்களுக்குப் பிறகு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தபோது அவருக்கு கேன்சர் வந்து, முற்றிப்போயிருப்பது தெரிந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குடும்பத்தினர் அனைவரும் நிலைகுலைந்து போனார்கள். சிகிச்சை தர பல லட்சம் ரூபாய் செலவாகும் என்றது மருத்துவமனை. அவ்வளவு பெரிய தொகை கண்ணனின் குடும்பத்தாரிடம் இல்லை. மிகுந்த கஷ்டப்பட்டு கடன் வாங்கி சிகிச்சைக்குப் பணம் புரட்டவே இரண்டு மாதங்கள் ஆகின. அதற்குள் கண்ணனுக்கு புற்றுநோய் மேலும் முற்றியது. தீவிர சிகிச்சைக்குப் பணம் செலவானதுதான் மிச்சம், கண்ணன் இறந்துபோனார். அவரின் மருத்துவச் சிகிச்சைக்காக வாங்கிய கடன் கழுத்தை நெருக்கியது. வேறு வழியில்லாததால் சொந்த வீட்டை விற்றுவிட்டு, கண்ணனின் குடும்பத்தினர் வேறு இடத்துக்குச் சென்றனர்.

கேன்சர் இன்ஷூரன்ஸ்
கேன்சர் இன்ஷூரன்ஸ்

கண்ணன் குடும்பத்தார்போல, லட்சக் கணக்கான புற்றுநோயாளிகளின் குடும்பங்கள் பொருளாதாரரீதியாகப் பின்னடைவைச் சந்தித்துவருகின்றன. `புற்றுநோய் பாதிப்படைந்தவர்களில் ஐந்தில் ஒருவர் 36–45 வயதுடையவராக இருக்கிறார்’ என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வாழ்க்கையின் மத்திய காலகட்டத்தில் இருக்கும் ஒருவருக்குக் குடும்பப் பொறுப்பு அதிகரிக்கத் தொடங்கும். குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பார்கள். எதிர்காலத் தேவைக்காக நன்கு சம்பாதிக்கத் தொடங்கும் வயதில் ஒருவருக்கு புற்றுநோய் வந்தால், மருத்துவச் சிகிச்சைக்கு ஆகும் செலவு அதிகமாகும்; குடும்ப வருமானம் நின்றுபோகும். இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பேரிடியை இழப்பீடு தந்து, பாதுகாக்கிறது புற்றுநோய்க்கான பிரத்யேக இன்ஷூரன்ஸ் பாலிசி.

மருத்துவக் காப்பீடும், புற்றுநோய்க் காப்பீடும் ஒன்றல்ல!

புற்றுநோயைக் கண்டறிவதற்கு சுமார் ரூ.5 லட்சம் வரை செலவாகிறது. அதைப் பூரணமாகக் குணப்படுத்துவதற்கு சுமார் ரூ.50 லட்சம் வரை செலவாகிறது. இந்தத் தொகை ஒருவர் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்தாலும் சேமிக்கக்கூடிய தொகையைவிட அதிகம். புற்றுநோய் பாதிப்படைந்தவரின் குடும்பம் தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளாவதுடன், புற்றுநோய்க்குக் கொடுக்கும் சிகிச்சையின் பக்கவிளைவால் பரம ஏழையாகிறார்கள். ஹெல்த் இன்ஷூரன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட நோயாளியை மருத்துவமனையில் சேர்த்து அங்கு தரப்படும் சிகிச்சைக்கு மட்டுமே க்ளெய்ம் தருவார்கள். மொத்த சிகிச்சைக்கு ஆகும் செலவுக்கும் க்ளெய்ம் கிடைக்காது.

கேன்சர் இன்ஷூரன்ஸ்
கேன்சர் இன்ஷூரன்ஸ்

ஆனால், புற்றுநோய் இன்ஷூரன்ஸ் பாலிசியின் மூலம் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவருக்கு மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்து தரப்படும் சிகிச்சைக்கு ஆகும் செலவு, மருத்துவ நிபுணர்கள் நோயாளியைப் பரிசோதித்து புற்றுநோய் வந்திருக்கிறதா என்பதை உறுதி செய்ய ஆகும் செலவு, வெளிநோயாளியாக இருக்கும்போது உருவாகும் மருத்துவச் செலவு, குணப்படுத்துவதற்குத் தரப்படும் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை போன்ற அனைத்து வகை அதிநவீன சிகிச்சைகளுக்கும் புற்றுநோய் இன்ஷூரன்ஸ் மூலம் க்ளெய்ம் கோரலாம். பாலிசிதாரரின் வயது, அவரின் உடல் ஆரோக்கியம் அடிப்படையில் பிரீமியம் மாறுபடும்.

நிதி இழப்பைத் தடுக்கும் கேன்சர் இன்ஷூரன்ஸ்! - அறிய வேண்டிய தகவல்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யாருக்குத் தேவை?

இந்தப் புற்றுநோய் இன்ஷூரன்ஸ் பாலிசி மோசமான சுற்றுச்சூழலில் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்றது. இவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம். மேலும், நெருங்கிய ரத்தத் தொடர்பு உள்ளவர்கள் யாருக்கேனும் புற்றுநோய் பாதிப்பிருந்தால், அவருக்கும் புற்றுநோய் வர சாத்தியம் அதிகம். வேதிப்பொருள்கள் கலந்த நவீன, துரித உணவு வகைகளைத் தொடர்ந்து உண்பவர்களுக்கும் புற்றுநோய் தாக்கக்கூடிய அபாயம் இருப்பதாகப் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அத்தகைய உணவு வகைகளைத் தொடர்ந்து உண்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு முன்கூட்டியே புற்றுநோய் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கலாம்.

கேன்சர் இன்ஷூரன்ஸ்
கேன்சர் இன்ஷூரன்ஸ்

ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. லைஃப், எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ லைஃப், பி.என்.பி மெட்லைஃப் இன்ஷூரன்ஸ், ஆதித்யா சன் லைஃப் போன்ற முன்னணி இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் புற்றுநோய்க்கென பிரத்யேகமாக பாலிசியை உருவாக்கியுள்ளன. இந்த கம்பெனிகள் தரும் பாலிசிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

பாலிசிக்கு பாலிசி சலுகைகள் வித்தியாசப்படும். இந்த பாலிசியை நேரடியாக ஆன்லைன் மூலமாகவும், இன்ஷூரன்ஸ் கம்பெனி ஆலோசகர் மூலமாகவும் வாங்கலாம்.

இந்தத் திட்டத்தில் செலுத்தப்படும் பிரீமியம் தொகைக்கு வரிவிலக்குப் பெறலாம். புற்றுநோய் ஆரம்ப நிலையிலிருந்தாலோ அல்லது முற்றிய நிலையில் இருந்தாலோ காப்பீட்டுத் தொகை கிடைக்கும். அதேமாதிரி பாலிசிதாரரைப் புற்றுநோய் தாக்கியது உறுதி செய்யப்பட்டவுடன், குறிப்பிட்ட சில வருடங்களுக்கு பாலிசிதாரர் தொடர்ந்து செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார். மேலும், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை பாலிசிதாரருக்கு வழங்கப்படும். லட்சக்கணக்கான இந்தியர்களைப் பலவகையான புற்றுநோய்கள் தொடர்ந்து துன்புறுத்திவருகின்றன. புற்றுநோயின் விளைவால் உருவாகும் நிதி இழப்பை புற்றுநோய் இன்ஷூரன்ஸ் திட்டம் ஈடுகட்டும். பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட புற்றுநோய் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் நிதிச் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் உங்களுக்கு ஏற்றதைத் தேர்வு செய்து, நிதி இழப்பைச் சரிசெய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism