Published:Updated:

கொரோனா காப்பீடு எடுக்க முடியுமா?

கொரோனா காப்பீடு
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா காப்பீடு

விரிவான விளக்கம்

ன்றைக்கு உலகையே திணறடித்துக் கொண்டிருக்கும் கொரோனா கிருமிக்குச் சிகிச்சை இல்லாமல் இருக்கலாம்; அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க இன்ஷூரன்ஸ் இருக்கிறதா என்றால், இருக்கிறது.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க மருத்துவச் சிகிச்சைக்கான ஆபரேஷன், மருத்துவர் கட்டணம், மருந்துச் செலவுகளுக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதும் அதற்கான இழப்பீடு கிடைப்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். நம் நாட்டில் அனைத்துக் காப்பீடு நிறுவனங்களும் பல வருடங்களாக மெடிக்ளெய்ம் பாலிசியை விநியோகித்து வந்தாலும், இதுவரை அந்த பாலிசிகளையெல்லாம் எடுக்காதவர்கள், இப்போது கொரோனாவுக்கான பாலிசியை மட்டுமாவது எடுக்க வேண்டியது அவசியம்; அத்தியாவசியம்.

கொரோனா காப்பீடு எடுக்க முடியுமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒருவர் ஏற்கெனவே தனிநபர் மெடிக்ளெய்ம் பாலிசியையோ அல்லது தான் வேலை செய்யும் நிறுவனம் குரூப் மெடிக்ளெய்ம் பாலிசியையோ எடுத்திருந்தால், அந்த பாலிசியிலேயே கொரோனா சம்பந்தப்பட்ட மருத்துவமனை அறை வாடகை, மருத்துவர் கட்டணம், பரிசோதனைகள், மருந்துகள் போன்ற செலவுகளுக்கான இழப்பீட்டைப் பெற முடியும். இதற்கு மருத்துவமனையில் குறைந்தபட்சம் 24 மணி நேரம் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

வருமான இழப்பு, வேலை இழப்பு ஏற்பட்டால் அதற்கும் காப்பீடு என்று ஒரு புதுமையான பாலிசியாக இது உள்ளது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அண்மையில், பொது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கொரோனாவுக்கென சில சிறப்பு இன்ஷூரன்ஸ் பாலிசிகளை (உதாரணம், ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸின் ‘ஸ்டார் நாவல் கொரோனா வைரஸ் இன்ஷூரன்ஸ் பாலிசி’) அறிமுகப் படுத்தின. ஐ.ஆர்.டி.ஏ.ஐ அனுமதித்துள்ள `சாண்ட்பாக்ஸிங்’ (Sandboxing) வழியில் சோதனை முயற்சியாக இது போன்ற காப்பீட்டு பாலிசிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, நிர்ணயித்த இலக்கை அடைந்ததும், தற்போது விற்பனையை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன.

கொரோனா 
காப்பீடு
கொரோனா காப்பீடு

இந்த பாலிசியை எடுக்காதவர்களுக்கு வேறு என்ன வழி என்றால், வணிக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கும், ஒரு சங்கம் அல்லது ஒரு குழுவின் தலைமையகம் தங்கள் உறுப்பினர்களுக்கும் கொரோனா மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்கலாம்.

கொரோனா 
காப்பீடு
கொரோனா காப்பீடு

இந்த வாரம்தான் ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் கொரோனா கோவிட் 19 புரொட்டக்‌ஷன் இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த பாலிசியில் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலே பாலிசி தொகை வழங்கப்படும். மேலும் கொரோனாவால் வருமான இழப்பு, வேலை இழப்பு ஏற்பட்டால் அதற்கும் காப்பீடு என்று ஒரு புதுமையான பாலிசியாகத் தெரிகிறது.

தற்போது கோ-டிஜிட் இன்ஷூரன்ஸ் (Godigit General Insurance Limited) நிறுவனம் தரும் வணிக / தொழில் நிறுவனங்களுக்கான கொரோனா இன்ஷூரன்ஸ் பாலிசியில் பல்வேறு காப்பீட்டுப் பயன்கள் உள்ளன (பார்க்க அட்டவணை). இந்த பாலிசியை ஒரு நிறுவனம் தங்கள் பணியாளர்களுக்கு எடுக்க வேண்டுமானால் சில விதிமுறைகள் உண்டு. அவை...

கொரோனா காப்பீடு எடுக்க முடியுமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • கொரோனா நோய்க்கு மட்டுமே இந்த பாலிசி காப்பீடு தரும். பாலிசிதாரருக்கு கொரோனா இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மட்டும் காப்பீடு தரப்படும்.

  • பாலிசி எடுத்து 15 நாள்கள் கழித்தே பாலிசி கவரேஜ் தொடங்கும்.

  • பாலிசி எடுப்பவருக்கு ஏற்கெனவே பாலிசி எடுக்கும் நாளுக்கு முந்தைய நான்கு வாரங்களில் சளி, மூச்சுத்திணறல் போன்ற மூச்சுக்குழாய் பிரச்னைகள் இருந்திருந்தால், இந்த பாலிசியை எடுக்க முடியாது.

  • பாலிசி எடுப்பவர் அரசு வெளியிட்டுள்ள கொரோனாநோய் சம்பந்தப்பட்ட நாடுகள் பட்டியலில் ஏதேனும் ஒரு நாட்டுக்குச் சென்று வந்து இப்போது தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டவராக இருந்தால், இந்த பாலிசியை எடுக்க முடியாது.

  • க்ளெய்ம் கிடைப்பதற்கு ஐ.சி.எம்.ஆர் என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழக அங்கீகாரம் பெற்ற பரிசோதனை மையத்திடம் `COVID 19-ஆல் பாதிக்கப்பட்டவர்’ என்று சான்றிதழ் பெற வேண்டும். இதேபோல ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்டு இன்ஷூரன்ஸ் நிறுவனமும் கொரோனா இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்றை வணிக நிறுவனங்கள், தொழிலகங்கள் தங்கள் பணியாளர்களுக்கு எடுக்கும்படியாக அறிமுகப்படுத்தியிருக்கிறது.

வந்த பிறகு வருத்தப்படுவதைவிட, ஆபத்து வருவதற்கு முன்னரே தற்காப்பு நடவடிக்கை எடுப்பதுதானே புத்திசாலித்தனம்!