Published:Updated:

வெளிநாட்டு சுற்றுலா... கட்டாயம் எடுக்க வேண்டிய கொரோனா காப்பீடு!

கொரோனா காப்பீடு
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா காப்பீடு

கொரோனா காப்பீடு

கார்த்திக் எம் மணிகண்டன் நிர்வாக இயக்குநர், https://www.gtholidays.in/

கொரோனா நோய்க்கான இரு தடுப்பு ஊசிகளையும் போட்டு, 15 நாள்கள் கழித்த பிறகுதான் பல நாடுகளுக்கு சுற்றுலா செல்ல முடியும். மேலும், அதன் சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும். ஏற்கெனவே கொரோனாவால் பாதிப்படைந்த வர்கள் முழுமையாகக் குணம் அடைந்து, குறைந்தது 15 நாள்கள் கடந்திருக்க வேண்டும் என்பதுடன், அவர்களும் இரு தடுப்பூசிகளையும் போட்டிருக்க வேண்டும்.

கார்த்திக் எம் மணிகண்டன் நிர்வாக இயக்குநர், 
https://www.gtholidays.in/
கார்த்திக் எம் மணிகண்டன் நிர்வாக இயக்குநர், https://www.gtholidays.in/

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது சில நாடுகள் 48 அல்லது 76 மணி நேரத்துக்கு முன் கொரோனா சோதனை மேற்கொள்ள சொல்கின்றன. அப்படிச் செய்யும்போது, கொரோனா இல்லையெனில் மட்டுமே விமானத்தில் ஏற அனுமதிக்கின்றன. இதேபோல், வெளிநாடுகளுக்குச் சென்ற வுடன் அங்கும் ஒரு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஐந்து மணி நேரத்துக் குள் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று சோதிக்கிறார்கள். கொரோனா பாதிப்பு இல்லையென்றால் மட்டுமே, தங்கள் நாட்டைச் சுற்றிப் பார்க்க அனுமதிக்கிறார்கள். இதே போல, சுற்றுலா முடிந்து வரும்போதும் 48 மணி நேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் என வந்தால் மட்டுமே விமானம் ஏறி சொந்த நாட்டுக்கு வர முடியும்.

ஆயிரத்தில் ஒருவருக்கு என்கிற கணக்கில் தற்போது கொரோனா நோய் பாசிட்டிவ் என வருகிறது. அப்படி வந்துவிட்டால், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு விதிமுறை இருக்கிறது. மாலத் தீவில் பாசிட்டிவ் என வந்துவிட்டால், பாதிக்கப்பட்டவர் எந்த ஹோட்டல் அறையில் தங்கியிருந்தாரோ, அதில் 14 நாள்கள் தங்க வேண்டும். அதன் பிறகு, மீண்டும் சோதனை செய்து, அதில் பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே, சொந்த நாட்டுக்குச் செல்ல முடியும்.

வெளிநாட்டு சுற்றுலா... கட்டாயம் எடுக்க வேண்டிய கொரோனா காப்பீடு!

இதுவே துபாய் எனில், பாசிட்டிவ் என வந்து, அதிக பாதிப்பு இல்லையென்றால், ஹோட்டலில் சொந்தச் செலவில் தங்க வேண்டும். அதிக பாதிப்பு எனில், அரசு, அதன் அனுமதி பெற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கிறது. இதற்கான செலவை துபாய் அரசே ஏற்றுக்கொள்கிறது. 14 நாள்கள் கழித்து மறுபடியும் சோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என வந்தால் நாடு திரும்ப அனுமதி கிடைக்கும். இங்கேதான் சுற்றுலாக் காப்பீட்டின் அவசியம் வருகிறது. கொரோனாவுக்கு முன் எல்லா டிராவல் ஏஜென்சிகளும் சுற்றுலா பயணிகளுக்கு டிராவல் பாலிசியைப் பரிந்துரை செய்யும். நாடுகளைப் பொறுத்து ஒரு நபருக்கு ரூ.1,000 - ரூ.2,000 செலவாகும். லக்கேஜ் தவற விட்டாலோ, அவசர மருத்துவச் செலவு வந்தாலோ, இந்தச் சுற்றுலா காப்பீட்டின் மூலம் இழப்பீடு பெற முடியும்.

இப்போது கொரோனா வந்த பிறகு கொரோனா கவரேஜ் இன்ஷூரன்ஸ் வந்திருக் கிறது. இந்த பாலிசி மூலம் வெளிநாட்டு பயணத்தின்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், 15 நாள்கள் தனிமைப்படுத்தப் படும் செலவுக்கு கவரேஜ் அளிப்பதாக இருக்கிறது. இந்த பாலிசியை இந்தியாவிலுள்ள இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அளிப்பதில்லை. நீங்கள் எந்த நாட்டில் சுற்றுலா செல்கிறீர்களோ, அந்த நாட்டின் இன்ஷூரன்ஸ் நிறுவனங் களிடம்தான் எடுக்க வேண்டும். இந்த விவரங்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் நிறுவனங்கள் சொல்லும்.

வெளிநாடு செல்லும் முன் இந்த கொரோனா கவரேஜ் பாலிசியை எடுத்துக்கொள்வது அவசியம். இதற்கான பிரீமியம் மிக அதிகம் இல்லை. இலங்கையில் ஒரு நபருக்கு 1,000 ரூபாய்தான். துபாய்க்கு ரூ.1,500, மாலத் தீவு ரூ.2,000 ஆக இருக்கிறது. வெளிநாட்டில் பல லட்சம் ரூபாய்க்கு இழப்பைச் சந்திக்காமல் இருக்க இந்தக் காப்பீட்டை எடுப்பது நல்லது.