Published:Updated:

மோட்டார் இன்ஷூரன்ஸ் புதிய உத்தரவு.... நடைமுறை சிக்கல்களுக்கு என்ன தீர்வு..?

மோட்டார் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ்

மோட்டார் இன்ஷூரன்ஸ் புதிய உத்தரவு.... நடைமுறை சிக்கல்களுக்கு என்ன தீர்வு..?

இன்ஷூரன்ஸ்

Published:Updated:
மோட்டார் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் இன்ஷூரன்ஸ்

மோட்டார் வாகன விபத்தில் உயிரிழந்த தினேஷ் குமார் என்பவரின் பெற்றோர், 2019 ஏப்ரலில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் ரூ.1.5 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் வாகனத்தை ஓட்டிய வருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை. ஆனாலும், வாகனம் காப்பீடு செய்யப்பட்டிருந்ததால் பாதிக்கப்பட்டவருக்கு காப்பீடு நிறுவனம் ரூ.64,33,200 இழப்பீட்டை ஆண்டுக்கு 7.5% வட்டி எனும் அடிப்படையில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், மோட்டார் வாகனங்களுக்கு காப்பீடு வழங்கும்போது வாகனத்தின் உரிமை யாளருக்கு ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று உத்தர விட்டிருக்கிறது.

காப்பீட்டுத் திட்டங்களைப் பொறுத்தவரை, அதன் விதி முறைகள் மட்டும் அல்லாமல் க்ளெய்ம் நடவடிக்கையின் போது பல்வேறு காரணங் களை முன்வைத்து க்ளெய்ம் மறுக்கப்படவோ, க்ளெய்ம் தொகை குறைக்கப்படவோ அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே காப்பீடு என்றாலே பலருக்கும் ஆர்வம் இல்லாமல் போய்விடுகிறது. இத்தகைய சூழலில் காப்பீடு வழங்கும்போதே ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இது குறித்து மோட்டார் வாகனம் தொடர்பான வழக்குகளை நடத்திவரும் வழக்கறிஞர் சுரேஷிடம் கேட்டோம்.

சுரேஷ்
சுரேஷ்

“நீதிமன்றம் சொல்லி இருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், இதில் பல நடை முறைச் சிக்கல்கள் இருக் கின்றன. இன்று காப்பீட்டுத் திட்டங்களைக் காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே வழங்குவதில்லை. யார் யாரோ விற்கிறார்கள். இன்றைக்குப் பல நிறுவனங்கள் தங்கள் இணையதளங்கள் முதல் பெட்ரோல் நிலையங்களில் உள்ள ஏஜென்டுகள் வரை காப்பீட்டுத் திட்டங்களை விற்கிறார்கள். இவர்கள் காப்பீட்டுத் திட்டங்களை வாடிக்கையாளர்களிடம் விற்றால் போதும் என்றுதான் செயல்படுகிறார்கள். ஐந்து நிமிடத்தில் இன்ஷூரன்ஸ் என்று விளம்பரப்படுத்து கிறார்கள். ஆனால், காப்பீட்டுத் திட்டங்கள் என்பது அதிலுள்ள பலன் களையும், விதிமுறைகளையும் தெரிந்துகொண்டு வாங்க வேண்டியது. ஆனால், அவற்றுக்கெல்லாம் யாருக் கும் நேரமில்லை. அவசர அவசரமாக காப்பீட்டுத் திட்டங்களின் விற்பனை நடக்கிறது. இணையதளத்தில் வாங்கும் காப்பீடுகளை யார் வாங்குகிறார்கள் என்றுகூட காப்பீடு நிறுவனங்களுக்குத் தெரியாது.

தற்போது நீதிமன்றம் காப்பீட்டு நிறுவனங்களை ஓட்டுநர் உரிமம் இருந்தால்தான் காப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. ஆனால், வாகன உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத் திருக்க வேண்டும் என்ற சட்டம் இல்லை. பல தொழிலதிபர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்கள் ஒன்றுக்கு மேலான வாகனங்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், அதை அவர்கள் ஓட்டுவதில்லை. டிரைவர்களை வைத்து தான் ஓட்டுகிறார்கள். டிரைவர்களின் ஓட்டுநர் உரிமங்களின் நகலைப் பெயருக்கு வாங்கி வைத்துக் கொள்வார்கள். அது நடப்பில் இருக்கிறதா, காலாவதி ஆகிவிட்டதா என்றுகூட பார்க்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, வாகனத்தை எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஓட்டுகிறார்களா என்று மட்டுமே பார்ப்பார்கள். ஏதாவது பிரச்னை வந்த பிறகுதான் அதைப் பார்ப்பார்கள்.

மோட்டார் இன்ஷூரன்ஸ் புதிய உத்தரவு.... நடைமுறை சிக்கல்களுக்கு  என்ன தீர்வு..?

அதேபோல்தான், கமர்ஷியல் வாகனங்களும். வாகனங்களை யார் எப்போது ஓட்டுகிறார்கள் என்றே தெரியாது. ஆம்னி பேருந்துகள் போன்றவற்றை டிரைவர்கள் மாறிமாறி ஓட்டுவார்கள். லாரிகளும் அப்படித்தான். இவர்கள் வசமிருக்கும் ஓட்டுநர் உரிமங்கள் நம்பத்தகுந்ததா என்பதை எல்லாம்கூட சாதாரணமாகக் கண்டுபிடிக்க முடியாது. ஓட்டுநர் உரிமம் இல்லாத ஒரு நண்பர் நம்முடைய வாகனத்தை ஓட்டிச் செல்கிறார் எனில், அப்போது நாம் என்ன செய்ய முடியும்?

நீதிமன்றம் வலியுறுத்துவது ஒருபக்கம் நல்லதுதான் என்றாலும், அதிலுள்ள இதுபோன்ற சிக்கல்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கேற்ப விதிமுறை களை வகுக்க வேண்டும். அப்போதுதான் பாதிக்கப் படுபவர்களுக்கு விரைவில் இழப்பீடு கிடைக்கும். காப்பீட்டு நிறுவனங்கள் க்ளெய்மை நிராகரிக்க என்ன காரணம் கிடைக்கும் என்று பார்க்காமல், பாதிக்கப்பட்டவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு நியாயமாக முடிவுகளை எடுக்கலாம். அப்படி நடந்து கொண்டால், இதுபோன்ற வழக்குகள் நீதி மன்றங் களுக்கு வராமல் இருக்கும்” என்றார்.

ஆனாலும், நாம் வாகனம் ஓட்டுவதால், நம் பெயரில் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது அவசியம்!