Published:Updated:

கைகொடுக்கும் இரட்டைக் காப்பீட்டுத் திட்டம்! - நிலையற்ற காலகட்டத்துக்கான பாலிசி

காப்பீட்டுத் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
காப்பீட்டுத் திட்டம்

இரண்டு தனித்தனி பாலிசிகள் எனும்போது பிரீமியத் தேதிகளை நினைவில் வைப்பது சிரமம்!

கைகொடுக்கும் இரட்டைக் காப்பீட்டுத் திட்டம்! - நிலையற்ற காலகட்டத்துக்கான பாலிசி

இரண்டு தனித்தனி பாலிசிகள் எனும்போது பிரீமியத் தேதிகளை நினைவில் வைப்பது சிரமம்!

Published:Updated:
காப்பீட்டுத் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
காப்பீட்டுத் திட்டம்
கோவிட்-19 நோய்த்தொற்று உலகைப் பற்றிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் நம் உடல்நலத்துக்கு மட்டுமல்ல, நம் நிதி தொடர்பான விஷயங்களுக்கும் நிறைய முக்கியத்துவம் அளிக்க வேண்டியிருக்கிறது. அனைத்து மக்களுக்கும் இந்த வைரஸ் தொற்றுக்கான மருந்துகள் கிடைக்கும் வரை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பது தனிப்பட்ட நபர்களைச் சார்ந்ததாகவே இருக்கிறது.
கைகொடுக்கும் இரட்டைக் காப்பீட்டுத் திட்டம்! - நிலையற்ற காலகட்டத்துக்கான பாலிசி

நிதிநிலை பாதிப்பு..!

மனம் மற்றும் உடல்ரீதியான எதிர்ப்புத் திறனைக் கட்டமைப்பதில் எல்லோரும் கவனம் செலுத்திவரும் இந்த நேரத்தில், நோய்த் தொற்றால் நிதிநிலையில் ஏற்பட்ட பாதிப்பை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். இதுவே நம்மில் பெரும்பாலானோரின் மன அழுத்தத்துக்கான காரணமாக அமைந்துவிடுகிறது.

நிதி தற்காப்புக்கான தேவை!

சமீப காலமாக வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறையானது புற்றுநோய், இதய நோய்கள் கொரோனாவுக்கு இணையான கடும் பாதிப்பை ஏற்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இது நாம் சேர்த்து வைத்திருக்கும் நிதியில் பெரும் பங்கை எடுத்துக் கொண்டுவிடுகிறது. இதனால் கடுமையான அழுத்தங்களை ஒருவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும், தற்போது நிலவுவதைப் போன்ற கடினமான காலத்தைச் சமாளிக்க ஒருவர் தனது நிதி தற்காப்பை பலம் நிறைந்ததாக ஆக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நிதியமைப்பைப் பலப்படுத்துங்கள்..!

ஒரு பலமான நிதியமைப்பின் நோக்கம், சிக்கலான காலகட்டங்களில் நிதிரீதியாகச் சமாளிக்க முடிவதுடன் அமைதியான காலத்தில் வசதியான நிலையையும் நமக்கு ஏற்படுத்தித் தருவதாக இருக்க வேண்டும். ஒருவரின் எதிர்கால நிதி இலக்குகள், செலவுகள், பொறுப்புகளை முன்கூட்டியே அனுமானித்து, அதற்கான பாதுகாப்பைச் செய்துகொள்ள மிகவும் உதவியாக இருப்பது ஆயுள் காப்பீடு.ஒரு முழுமையான காப்பீட்டுத் திட்டத்தைக் கையில் வைத்திருப்பது, ஒருவர் கூடுதல் நிதிச் சுமையில்லாமல் சிரமமான காலகட்டத்தைக் கடந்து செல்ல உதவும். காப்பீட்டுத் திட்டம் மூலம் சரியான நேரத்தில் நமக்குத் தேவையான நிதியுதவி கிடைப்பதால், எதிர்பாராத விளைவுகளிலிருந்தும் பாலிசிதாரரின் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

காப்பீட்டுத் திட்டம்
காப்பீட்டுத் திட்டம்

இரட்டைக் காப்பீட்டுத் திட்டம்..!

இரட்டைக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்வது இதற்கு சிறந்ததொரு தீர்வு. அது என்ன இரட்டைக் காப்பீட்டுத் திட்டம்? இரட்டைப் பலன்களை அளிக்கும் ஒரு காப்பீட்டுத் திட்டம்தான் இது. அதாவது, ஆயுள் பாதுகாப்பு மற்றும் தீவிர நோய்களிலிருந்து (Critical Illness - CI) காப்பதை உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் இருக்கிறது. இந்தத் திட்டம், வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் மாறிவரும் காப்பீட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்யும்.இந்தக் காப்பீட்டுத் திட்டம் வைத்திருக்கும் ஒருவர் ஒருவேளை தீவிர நோய் பாதிப்புக்கு உள்ளானவராகக் கண்டறியப்பட்டால், சிகிச்சைக்கான பணம் கிடைத்து, நிதிச் சுமை குறித்த கவலையும் அழுத்தமும் இன்றி, நிம்மதியாக இருக்கலாம்.

காப்பீட்டுத் திட்டம்
காப்பீட்டுத் திட்டம்

பிரீமியம் தள்ளுபடி பலன்..!

விபத்து, இயலாமை அல்லது பிரீமியம் செலுத்தும் நபரின் மரணம் மற்றும் வருமானம் இல்லாத காரணத்தால் காப்பீடு செய்தவரால் பிரீமியம் செலுத்த இயலாத நிலையில் அவரது பிரீமிய கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும். ஒருவேளை, மருத்துவரீதியாக நோய் ஏதும் கண்டறியப் பட்டால், எதிர்கால பிரீமியங் களைச் செலுத்த வேண்டிய சுமையை அகற்ற இது உதவுகிறது. பொதுவாக, வயது ஏற ஏற, தீவிர நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு களும் அதிகம். இதற்கேற்றவாறு இந்தத் திட்டத் தில் பாதுகாப்பு அம்சங்கள் பராமரிக்கப் படுகிறது.

எவ்வாறு உதவுகிறது?

பொதுவாக, ஆயுள் + தீவிர நோய்களிலிருந்து பாதுகாப்பு என இரு தனித்தனி பாலிசிகளில் இருந்து ஒருவர் கூடுதலாகப் பலன் பெறுவதைத் தவிர்த்து, ஒரே பாலிசியில் இரண்டுக்கும் பலன் கிடைக்கிறது. இரண்டு தனித்தனி பாலிசிகள் எனும்போது அவற்றுக்கு பிரீமியம் கட்டு வதற்கான தேதிகளை நினைவில் கொண்டு செயல்படுவது சிரமம். ஆனால், ஒரே பாலிசி எனும்போது அது போன்ற சிக்கல்கள் இல்லாமல் வசதியாக இருக்கும்.

இப்போதைய காலகட்டத்தில், உடல்நலம் தொடர்பான பிரச்னைகளுக்கு இணையாக நிதிப் பிரச்னைகளும் இருந்து வருகின்றன. வாழ்வின் நிச்சயமற்றதன்மைகளுடன் கடுமையான அழுத்தத்துக்கும் ஒரு குடும்பம் ஆளாகாமல் தவிர்க்க, இரட்டைப் பாதுகாப் புடன்கூடிய ஆயுள் காப்பீட்டுத் திட்டம் உதவுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism