Published:Updated:

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் நாமினி நியமனம் உண்டா..?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் நாமினி நியமனம் உண்டா..?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கிருஷ்ணவேணி, நாமக்கல்,

இந்த வருட ஆரம்பத்தில் டிஜிட்டல் இந்தியா ஃபண்ட் ஒன்றில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தேன். அதன் தற்போதைய மதிப்பு ரூ.78,000-மாகக் குறைத்துவிட்டது. நான் இந்த ஃபண்டிலிருந்து வெளியே வந்துவிடலாமா?

என்.ஜெயகுமார், சி.எஃப்.ஏ, மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்.

“டிஜிட்டல் இந்தியா ஃபண்ட் என்பது ஒரு செக்டோரல் ஃபண்ட். எனவே, இதில் கணினி மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்ய முடியும். செக்டார் ஃபண்டுகளில் ஒரு சாதாரண முதலீட்டாளர் அதிகபட்சமாக 5 - 10% வரை மட்டுமே முதலீடு செய்யலாம். உங்களுடைய மற்ற முதலீடுகளைப் பற்றி இங்கு குறிப்பிடவில்லை. உங்களுடைய மொத்த முதலீட்டில் இந்த ஃபண்டின் முதலீடு 5 - 10% வரை இருக்கும்பட்சத்தில், நீங்கள் இந்த முதலீட்டைத் தொடரலாம். இல்லையெனில், நீங்கள் இதிலிருந்து விலகி ஒரு நல்ல ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட் (உதாரணமாக, குவான்ட் அப்சொல்யூட் ஃபண்ட்) அல்லது ஒரு நல்ல ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட் (உதாரணமாக, பராக் பரீக் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட்) தேர்ந்தெடுத்து அதில் உங்கள் முதலீட்டைத் தொடரலாம்.”

குமார் ராமசாமி, உடன்குடி.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் நாமினி நியமிக்கும் வசதி உண்டா?

வெங்கடேசன் பிரம்மநாயகம், மருத்துவக் காப்பீட்டு ஆலோசகர்.

“காப்பீட்டைப் பொறுத்தவரை, பாலிசி எடுக்கும் நபர் உயிருடன் இல்லாதபட்சத்தில் அவருக்குச் சேர வேண்டிய இழப்பீடுகளைப் பெறுவதற்காக பாலிசி எடுப்பவரால் நியமிக்கப்படும் நபரையே நாமினி என்றழைக்கிறோம். ஹெல்த் இன்ஷூரன்ஸில் நாமினி நியமிக்க வசதி உண்டு. நாமினி நியமிப்பதும் கட்டாயமே. ஏனென்றால், பாலிசி எடுப்பவர் உடல்நலக் குறைவாலோ, விபத்தினாலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறக்கும்பட்சத்தில், மருத்துவமனையில் செய்த செலவுகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்னும், பின்னும் செய்த செலவுகள் மற்றும் அவருக்கு பாலிசியில் கிடைக்க வேண்டிய மற்ற பலன்கள் ஆகியவற்றை பாலிசியின் விதிமுறைக்கு உட்பட்டு க்ளெய்ம் செய்வதற்கு நாமினி நியமிக்கப்பட்டிருந்தால் நாமினிக்கு க்ளெய்ம் தொகை எளிதில் கிடைத்துவிடும்.

அவ்வாறு நியமிக்கப்படாமல் இருந்தால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் பாலிசி எடுத்தவரின் வாரிசுதாரர்களிடமிருந்து வாரிசுச் சான்றிதழ் பெற்று, பிறகு க்ளெய்ம் தொகையைக் கொடுக்கும். இதற்கு பல சட்டச் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், க்ளெய்ம் பெற காலதாமதம் ஆகலாம். மருத்துவக் காப்பீட்டில் நாமினியை நியமிப்பது மிக எளிது. அதை பாலிசி எடுக்கும்போதே செய்வது நல்லது. மேலும், பாலிசி எடுப்பவர் ஏற்கெனவே நியமித்த நாமினியை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.”

ஹெல்த்  இன்ஷூரன்ஸ் பாலிசியில் நாமினி  நியமனம்  உண்டா..?

எம்.மகேஷ், அகரம்தென், சென்னை.

என் வயது 23. எனக்கு வருமான வரிப்பிடித்தம் செய்கிற அளவுக்கு சம்பளம் அதிகம் இல்லை. நேஷனல் பென்ஷன் சிஸ்டத்தில் (NPS) இப்போதே என் ஓய்வுக்காலத்துக்காக முதலீட்டை ஆரம்பிப்பது சரியா?

எஸ்.சரவணன், சர்டிஃபைடு டிரஸ்ட் & எஸ்டேட் பிளானர், Purplepond.in

“இளம் வயதிலேயே என்.பி.எஸ் மூலம் நீங்கள் பணி ஓய்வுக் காலத்துக்கான சேமிப்பைத் தொடங்க நினைப்பது மிக நல்ல விஷயம். என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்வதன்மூலம் வருமான வரி விலக்குடன், வேறு பல பயன்களும் கிடைக்கும். வருமான வரி வரம்புக்குள் உங்கள் வருமானம் வராவிட்டாலும் நீங்கள் என்.பி.எஸ் திட்டத்தை நீண்ட கால முதலீடாகக் கருதி முதலீட்டை ஆரம்பிக்கலாம். நீண்ட கால முதலீட்டின் மூலம் கிடைக்கும் கூட்டு வட்டியால் (Power of compounding), ஓய்வுக் காலத்தில் உங்களுக்குக் கணிசமான முதிர்வுத் தொகை கிடைக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில், என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்தை உங்கள் அன்றாடத் தேவைகளுக்கு எளிதில் திரும்பிப் பெற இயலாது.’’

ஹெல்த்  இன்ஷூரன்ஸ் பாலிசியில் நாமினி  நியமனம்  உண்டா..?

ஜெகன் கார்த்தி, இ-மெயில் மூலம்.

என் வயது 31. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தலா ரூ.5,000 வீதம் மிரே அஸெட் டாக்ஸ் சேவர் ஃபண்ட், ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட், ஆக்ஸிஸ் ஃப்ளெக்ஸி ஃபண்ட், பராக் பரிக் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட் ஆகியவற்றில் ஆன்லைன் ஆப் மூலம் முதலீடு செய்கிறேன். எனது பணி ஓய்வுக்குப் பிறகு, எஸ்.டபிள்யூ.பி (SWP) முறையில் மாதம் ரூ.80,000 பெறுவதே எனது குறிக்கோள். இப்போது எனது சம்பளம் உயர்த்தப் பட்டுள்ளது. நான் அதிகம் முதலீடு செய்ய விரும்புகிறேன். மேலே உள்ள ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி தொகையை அதிகரிக்கலாமா அல்லது புதிய திட்டங்களைத் தேர்வு செய்யலாமா?

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் நல்ல ஃபண்டு களே. அவற்றில் தொடர்ந்து முதலீடு செய்து வரலாம்.

ஆனால், நீங்கள் முதலீடு செய்யும் தொகையை உயர்த்த வேண்டும். ஏனெனில், உங்கள் எதிர்பார்ப்பான ரூ.80,000 இன்னும் 30 வருடங்களில் பணவீக்கத்தின் காரணமாக ரூ.4.4 லட்சமாக அதிகரித் திருக்கும் (ஆண்டு சராசரி பணவீக்கம் 6% என்கிற அனு மானத்தில்). அதை நீங்கள் எஸ்.டபிள்யூ.பி-யில் பெற சுமார் உங்கள் தொகுப்பு நிதியில் ரூ.10 கோடி இருக்க வேண்டும். அதை அடைய நீங்கள் இப்போது செய்து வரும் ரூ.20,000 முதலீட்டை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்துவது அவசியம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism