Published:Updated:

புறநோயாளிப் பிரிவு இன்ஷூரன்ஸ் பாலிசி!

இன்ஷூரன்ஸ் பாலிசி
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஷூரன்ஸ் பாலிசி

என்னென்ன சிறப்பம்சங்கள்?

ஆனந்த் ராய், நிர்வாக இயக்குநர். ஸ்டார் ஹெல்த் & அல்லய்டு இன்ஷூரன்ஸ்

ன்றைய சூழலில், எல்லாவற்றின் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவருகிறது. ​​நமது மருத்துவச் செலவுகளும் வேகமாக உயர்ந்து வருகின்றன. 2018-19-ம் ஆண்டில் ஹெல்த்கேர் துறையின் பணவீக்கம் சராசரியாக 7.14 சதவிகிதமாக உயர்ந்தது. இது, கடந்த 2017-18-ம் நிதியாண்டில் 4.39 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

புறநோயாளிப் பிரிவு இன்ஷூரன்ஸ் பாலிசி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மருத்துவத்துறையில் ஒவ்வோர் ஆண்டும் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான விகிதத்தில் பணவீக்கம் உயர்ந்துவருவதால், போதுமான காப்பீட்டுத் தொகையுடன் ஹெல்த் இன்ஷூரன்ஸ் காப்பீடு எடுப்பது கட்டாயமாகியிருக்கிறது. மேலும், 30-35 வயதுக்கு உட்பட்ட இளைய தலைமுறையினருக்கு தீவிர வியாதிகளின் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகியிருப்பதால், அவர்களின் குடும்பத்துக்கு நிதிப் பாதுகாப்பை அளிக்கும் காப்பீடுகளை எடுக்க தாமதிக்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
மருத்துவச் செலவுகள் அதிகமிருக்கும் எந்த நபருக்கும் புறநோயாளிக் காப்பீடு மிக மிக அவசியம்.

மாறிவரும் நுகர்வோர் எதிர்பார்ப்புகளின் அடிப்படையில், ஹெல்த் இன்ஷூரன்ஸ் காப்பீட்டுத் திட்டங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமானவை, வெளி நோயாளிகளுக்கான (Out-Patient Department - OPD) இன்ஷூரன்ஸ் பாலிசிகள். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த வகை ஹெல்த் பாலிசிகள் இளம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகைகளிலும் முழுமையான பாதுகாப்பை அளிக்கின்றன. இந்தப் புதிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள் தினப் பராமரிப்பு மருத்துவ நடைமுறைகள் (Daycare Procedures), கொசுக்கள், ஈக்கள், மணல்பூச்சிகள் போன்றவற்றின் மூலம் பரவும் தொற்றுநோய்கள் முதல் மகப்பேறு நலன்கள் வரையிலுமான மருத்துவத் தேவைகளுக்கும், `ஓ.பி.டி’ எனப்படும் புறநோயாளிகளுக்கு உண்டாகும் மருத்துவச் செலவுகளுக்கும் உரிய நிதிப் பாதுகாப்பை அளிக்கின்றன.

இன்ஷூரன்ஸ் பாலிசி
இன்ஷூரன்ஸ் பாலிசி

புறநோயாளிப் பிரிவு சிகிச்சையில், தனிநபர் ஒருவர் தன் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நோய் பற்றி அறிவதற்கான பரிசோதனை மற்றும் அந்த நோய்க்கான சிகிச்சைக்காக ஏதாவது ஒரு மருத்துவமனை அல்லது சிகிச்சை மையத்துக்குச் சென்றால் அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டியதில்லை. இவர்களுக்காகவே பிரத்யேகமாக ஓ.பி.டி காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் காப்பீடு செய்த புறநோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்போது ஏற்படும் செலவுகளைத் தவிர்த்து, இதர செலவுகளைக் கோருவதற்கு உதவுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓ.பி.டி காப்பீட்டை யார் எடுக்கலாம்?

மருத்துவச் செலவுகள் அதிகமிருக்கும் எந்த நபருக்கும் புறநோயாளிக் காப்பீடு மிக மிக அவசியம். இந்தக் காப்பீடூ, வைரஸ் காய்ச்சல் போன்ற சிறிய மருந்துவ சிகிச்சைகளையும், சர்க்கரைநோய், மூட்டுவலி அல்லது முதுகுவலி போன்ற சில நாள்பட்ட நோய்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளையும் உள்ளடக்கியது. இவை மட்டுமல்லாமல், வேறு எந்த நாள்பட்ட நோய்களுக்கும் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற தொடர்ந்து செல்ல வேண்டிய வர்களுக்கு இந்த ஓ.பி.டி காப்பீடு அவசியம்.

இன்ஷூரன்ஸ் பாலிசி
இன்ஷூரன்ஸ் பாலிசி

ஓ.பி.டி-யின் சிறப்பம்சங்கள்

புறநோயாளிகளுக்கான காப்பீடு ஒருவரை மருத்துவமனையில் சேர்ப்பதைத் தவிர்த்து ஏற்படும் இதர மருத்துவச் செலவுகளைக் கோருவதற்கான வாய்ப்புகளை அளிக்கிறது. இந்தக் காப்பீட்டின்கீழ் மருந்துகளின் செலவு, நோயறியும் பரிசோதனை அல்லது சிறிய அளவிலான மருத்துவ நடைமுறைகளுக்கான செலவுகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.

இவற்றோடு, ஒருவர் இதற்காகச் செலுத்தும் பிரீமியத்தில் வரிவிலக்கு கோரும் வாய்ப்பையும் அளிக்கிறது. அதேநேரம், புறநோயாளிக்கான சிகிச்சைகள் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் நெட்வொர்க் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

இந்தத் திட்டத்தின்கீழ் ஒருவர் அதிக காலம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஓ.பி.டி செலவுகளை உடனடியாகக் கோர முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. பாலிசியைப் பெற்ற 90 நாள்களுக்குள் இந்தக் காப்பீட்டை பயன்படுத்த முடியும். இதனால் ஒருவர் பாலிசியை எடுப்பதற்கு முன்னரே இருக்கும் ஒரு நோய்க்கோ, பாலிசி எடுப்பதற்கு முன்பு இருந்த நோய்க்குத் தொடர்பில்லாத வேறொரு நோயின் ஆரம்பநாள் முதலிருந்தோ காப்பீட்டின் பலன்களைப் பெற முடியும். மேலும், காப்பீடு பெற்ற வருடத்தில் அதன் காப்பீட்டு அளவின் வரம்பை எட்டும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் கோர முடியும்.

ஓ.பி.டி காப்பீடு தேவையற்றதாகவோ, விலையுயர்ந்த ஒன்றாகவோ தோன்றலாம். ஆனால், நீங்கள் ஒரு கடினமான சூழ்நிலையில் இருக்கும்போது எளிதில் சமாளிக்க முடியும்.

ஓ.பி.டி காப்பீட்டில் இருக்கும் இதர பலன்கள்

எந்தவொரு நோய்க்கும் ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்காக மருத்துவர்களிடம் மருத்துவரீதியாக பெறப்படும் ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைக்கான கட்டணங்கள் இதில் அடங்கும். எக்ஸ்-ரே, மூளை மற்றும் உடலுக்கு எடுக்கப்படும் ஸ்கேன் மற்றும் நோயியல் (Pathology) போன்ற மருத்துவரீதியாக புறநோயாளிகளின் நோய்களைக் கண்டறியும் மருத்துவ நடைமுறைகளையும் இந்தக் காப்பீடு உள்ளடக்கியிருக்கிறது. எனவே, மருத்துவர் களால் பரிந்துரைக்கப் பட்ட மருந்துகளுடன், ஒரு நோயறிதல் மையத்தில் சிகிச்சைக்கான நோயறிதல் பரிசோதனையையும் பெற முடியும்.

சிறிய அறுவை சிகிச்சைகள், விபத்துகளால் உண்டாகும் காயங்களுக்கான கட்டு, விலங்குகள் கடி சிகிச்சை தொடர்பான புற நோயாளி மருத்துவ நடைமுறை ஆகியவையும் இதில் அடங்கும்.

என்றாலும், இந்தக் காப்பீட்டில் ஒருவர் என்னென்ன மருத்துவ நடைமுறைகளுக்கு இழப்பீட்டைக் கோரலாம் என்பதை முதலிலே அறிந்துகொண்டு அதன் பிறகு எடுப்பது அவசியம்.

பொதுவாக, இந்தக் காப்பீட்டில் கண்ணாடிகள், கான்டாக்ட் லென்ஸ்கள், காஸ்மெட்டிக் மருத்துவ நடைமுறைகள், பிசியோதெரபி மற்றும் வாக்கர்ஸ், பிபி மானிட்டர்கள், குளுக்கோ மீட்டர்கள், தெர்மோ மீட்டர்கள் போன்ற மருத்துவ உபகரணங்கள், டயட்டீஷியன் கட்டணம், வைட்டமின்கள் மற்றும் சப்ளிமென்ட்ஸ் போன்றவைக்கான செலவுகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதில்லை.

பெரும்பாலான மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் ஓ.பி.டி காப்பீட்டை அடிப்படைக் காப்பீட்டுடன் கூடுதல் அம்சமாகத் தருகின்றன. வழக்கமாக, ஓ.பி.டி காப்பீட்டுச் செலவு காப்பீட்டாளரால் பயன்படுத்தப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், இந்தப் பாதுகாப்பு அதிக கட்டணத்தில் வருகிறது. அதனால், ஒருவர் புறநோயாளிக் காப்பீட்டைப் பெறும்போது, தனது உடல்நலத்துக்கான செலவுகள், வயது போன்றவற்றை மனதில்கொண்டு செலுத்தும் கட்டணம் அதற்கு நியாயமானதா என்பதைப் பகுப்பாய்வு செய்வது அவசியம்.

ஓ.பி.டி காப்பீடு தேவையற்றதாகவோ, விலையுயர்ந்த ஒன்றாகவோ உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், நீங்கள் ஒரு கடினமான சூழ்நிலையில் இருக்கும்போது அந்தச் சூழ்நிலையை உங்களால் எளிதில் சமாளிக்க முடியும்.

மொத்தத்தில், புறநோயாளிக் காப்பீடு என்பது ஒருவருக்கு அவருடைய பர்ஸைப் பதம் பார்க்காமல் சிறப்பான மருத்துவச் சேவைகளைப் பெற மிக நல்ல வழி என்பதில் சந்தேகமில்லை!